கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 11, 2023

10 கதைகள் கிடைத்துள்ளன.

இச்சு மாட்ஸியோ மிச்சாமியைச் சிலிர்க்க வைத்த வீரவாள்!

 

 (2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சென்ற வாரத்தில் ஒரு நாள் என்னுடைய டூ~இன்-ஒன் ஆன மனைவியின் ஆணைப்படி ஒரு டூ இன்-ஒன் (டிரான்சிஸ்டர்-கம்-டேப் ரிக்கார்டரை) வாங்க பர்ஸில் பணத்தோடு பர்மா பஜாருக்குக் கிளம்பினேன் நான். பேரம் பேசுவதில் ஆராய்ச்சியே செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ள கிச்சாவையும் துணைக்குக் கூப்பிட்டுக் கொள்ளத் திருவல்லிக்கேணிக்குச் சென்றேன். அங்கு ‘மேட்-இன்-ஜப்பான்’ அயிட்டங்களால் அவனது பெட்-ரூம் நிரப்பப்பட்டு ஒரு மினி பர்மா பஜாராக மாறியிருப்பதைப்


கருவேலங்காடுகள் தாண்டி…

 

 பங்குனி வெயில் உச்சியைத் தீய்க்கத் தொடங்கியது. பனை ஓலை விசிறியை வேகமாக வீசிக்கொண்டதில் கிடைத்த சுகம் பூராவையும் பிடரி அனுபவிக்கத்தக்கதாக தலையை இங்கு மங்கும் புரட்டிக்கொண்டார். இத்தனைக்கும் இலந்தை மரத்தின் கீழ்தான் வாசம். குடை நிழலாய்க் குளிர் பரப்பியிருந்த இலந்தை மரத்தை, மேகமாய்ச் சுற்றிப் பிணைந்து கிடந்த பீர்க்கஞ்செடி…… ஒரு சொட்டு வெப்பமும் கீழே விழாமல் தாங்கிக் கொண்டுதான் இருந்தது. ஆனாலும் வெக்கை தாங்க முடியவில்லை. இன்றைக்குத் தங்கச்சி வருவாளோ?…… செம்மண் புழுதி தாண்டி நேர்கோடாய் நீண்டு


மைதானத்தில் ஒரு நரிக்குட்டி!

 

 பள்ளி நேரம் முடிந்ததும் அம்முவும் அவள் தோழிகளும் மைதானத்தில் கால்பந்து ஆடுவார்கள். அன்றைக்கும் அப்படித்தான் ஆடிக்கொண்டிருந்தார்கள். பந்து மைதானத்துக்கு வெளியே சென்றுவிட்டது. அங்கே ஒரு புதர் இருந்தது. அதற்குள் பந்து விழுந்து கிடந்தது. அதை எடுக்க அம்மு உள்ளே சென்றாள். அங்கே ஒரு நரிக்குட்டி ‘கீச்… கீச்…’ என்று கத்தியபடி தனியாக இருந்தது. பந்தைத் தூக்கி மைதானத்துக்குள் வீசிவிட்டு அதன் அருகில் சென்றாள் அம்மு. ‘‘ஏய் யார் நீ? இங்கே என்ன பண்றே?” என்று அந்த நரிக்குட்டியிடம்


ஐந்து கால் மனிதன்

 

 நான் அமர்ந்திருந்தேன். சுப்பர்மார்க்கெட்டின் வெளியே காணப்பட்ட பல இருக்கைகளில் ஒன்றில். அந்தப் பெண் வந்து பொத்தென்று பக்கத்து ஆசனத்தில் அமர்ந்தார். சீருடை அணிந்திருந்தார். கையிலே பேப்பர் குவளையில் கோப்பி. தான் செய்த வேலையை பாதியில் நிறுத்திவிட்டு வந்திருக்கிறார் என்பதும், அவர் துப்புரவுப் பணிப்பெண் என்பதும் பார்த்தவுடன் தெரிந்தது. வயது 50 க்கு மேலே இருக்கும். கறுப்பு முடி, நீலக் கண்கள். வெண்மையான சருமம். கிழக்கு ஐரோப்பிய பெண்ணாக இருக்கலாம். ஒருவேளை ரஸ்யப் பெண்ணாகவும் இருக்கலாம். கோப்பியை சத்தம்


காணி நிலம் வேண்டும்

 

 (2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கிணற்றடியில் குளிக்கும் சத்தம் கேட்டது. சுந்தரலிங்கம் எழும்பி விட்டார். அந்த வீட்டிற்கு அலாரம் என்றும் அவர்தான். அதிகாலை ஐந்து மணியளவில் ஆரம்பிக்கும் இந்தச் சத்தம் பதினொரு மணியளவில்தான் அடங்கும். எந்தவித அவலங்களுமற்று பொழுது புலர்ந்திருந்தது. அங்கு நின்றபடியே கிழக்கே விரிந்து கிடக்கும் வயல் வெளியையும், வடக்கேயுள்ள தென்னந் தோப்பையும் பார்த்தார் அதிபர் சுந்தரலிங்கம். அதிபர் நாலாம் வாய்க்காலிலே பெரிய புள்ளி. ஏராளமான நிலபுலங்களுக்குச்


விருதுகளுக்கு அப்பால்…!

 

 அறைக்கதவை மெல்ல தட்டினான் குமரன்…. எப்போதுமே கதவைத் தாள் போட்டு உறங்கும் வழக்கம் கலையரசனிடம் கிடையாது. அவனது‌ வாழ்க்கையே ஒரு திறந்த புத்தகம்தானே…! கொடிகட்டிப் பறந்த காலத்திலேயே ஒருபோதும் எதையும் மூடி மறைக்கத் தெரியாத , அல்லது விரும்பாத வெள்ளை மனம் அவனுடையது… சினிமா மோகத்தில் கிராமங்களை விட்டு வெளியேறி , வெட்கம், மானம், சூடு ,சுரணை எல்லாம் துறந்து கலையார்வம் ஒன்றே குறியாக , நினைத்ததை சாதிக்கும் வரை போராடும் ஆயிரக்கணக்கான இளைய தலைமுறையின் ஒரு


நிகழ்தகவுகள்

 

 உடல் களைத்திருந்தது. எங்காவது சிறிது நேரம் அமர்ந்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இன்னும் சிறிது தூரம் நடந்தால் பூங்காவையே அடைந்துவிடலாம் என்பதால் முயன்று நடந்தான். சாலை ஓரமாக ஒரு கிழவர் பல வெள்ளை சட்டைகளை அடுக்கி வைத்து வியாபாரம் செய்துக் கொண்டிருந்தார். அந்த பக்கம் வரும் போதெல்லாம் அவரை பார்த்திருக்கிறான். அவரிடம் யாரும் சட்டை வாங்கி அவன் பார்த்ததில்லை. அவருக்கு என்ன வருமானம் வரும் என்ற கேள்வி மட்டும் அவரை பார்க்கும்போதெல்லாம் மனதில் எழும். எப்படி


சஸ்பென்ஸ்

 

 “என்னங்க..!” முதல் நிலைக் காவலர் (Police Constable – Grade 1) முருகன் தன் சீருடையின் மேற்கையில் தைக்கப்பட்டிருந்த இரண்டு பட்டைகளைப் பார்த்தார். ‘விரைவில் மூன்று பட்டைகளை தைக்கப் போகும் (Head Constable) தலைமைக் காவலராக உயரப் போகிறோம்!’ என்கிற மகிழ்ச்சியான நினைவோட்டத்துடன், சீருடையை மரியாதையோடு ஹாங்கரிலிருந்து எடுத்தபடியே, “ம்..” என்றார். “இன்னிக்கு ‘லீவு’ போட்டுட்டு என் கூட இருங்களேன்…?” சீருடையை அணிந்தபின் ‘பெல்ட்’ அணிந்து கொண்டே “எதுக்கு…வள்ளி ?”- அவளின் பூசினாற்போன்ற முகத்தைக் கரிசனத்தோடு பார்த்தபடியே


வேரறுந்த பின்னே

 

 சாவன்ன ஹாஜியார், சுபுஹு தொழுகைக்கு எழுந்தவர். தொழுது முடித்ததும், அவருக்கு ஒரு சாயா குடிக்கவேண்டும். இரவே ப்ளாஸ்க்கில் எப்போதும் சாயா போட்டு வைத்துவிட்டுத்தான் போயிருப்பாள் இன்னாசி. அதில் பாதி சூடு போயிருக்கும். மைக்ரோ ஓவனில் சுடவைத்து குடிக்கலாம். இருந்தாலும் புதுசா போட்டு குடிச்சா இந்த இளம் குளிர் நாளையில் சுகமாய் இருக்கும். பக்கத்தில் சாயா கடை ஏதுமில்லை. தெருவுக்குள் போகவேண்டும். அங்கே நைனா கடை திறந்திருக்கும். பள்ளிக்கு ஸுபுஹ் தொழுக போய் இருக்கவேண்டும். தொழுது விட்டு நைனா


அவள் ஒரு கர்நாடகம்

 

 (1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1 கண்ணாவின் கடைவிழிகளில் மலரத் துடிக்கும் மொட்டுகளைப் போலக் கண்ணீர்த் துளிகள் ததும்பி நின்றன. ஒரு நாள் கூட கண்ணா இவ்வளவு மனச் சங்கடத்தைத் தாங்கிக் கொண்டிருந்ததில்லை. அன்று மட்டும் அவள் அடங்காத் துயரத்திற்கு ஆளாகித் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தாள். “கண்ணா!’ முகப்புக் கதவு தட்டும் சத்தம் கேட்டது. இந்தக் குரலைத்தான் கண்ணா நெடுநேரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் அந்தக் குரல்