கதைத்தொகுப்பு: காதல்

902 கதைகள் கிடைத்துள்ளன.

காதலிக்கப்படுதல் இனிது

 

 “வாவ். ரொம்ப அழகா இருக்கு…”பரவசமாகக் கூவினாள் சுபா. இரண்டு புறமும் குடை போல் கவிந்த மரங்கள் அடர்த்தியாக சாலையை மூடியிருந்தன. உதிர்ந்து கிடந்தன மஞ்சள் நிறப் பூக்கள். லேசான மழைமூட்டம் போட்டிருந்த வானத்தில் அவ்வப்போது ஒரு வெள்ளி இழை மின்னி மறைந்தது. சாலையை ஒட்டியிருந்த வறண்ட நிலத்தில் மயில் ஒன்று தோகை விரித்து ஆடியது தெவிட்டாத காட்சியாக இருந்தது. தன்னை மறந்து சுற்றுப்புறத்தை ரசித்தபடி வந்த அவளைப் பார்த்து திருப்தியுடன் புன்னகைத்தான் கேசவன். அவ்வப்போது அவளைத் திரும்பிப்


காணாது போகுமோ காதல்

 

 பாகம் 4 | பாகம் 5 தீபக் ஆபீஸ் அறைக்கு வந்ததும் தன் அப்பா படத்தை தொட்டுக் கும்பிட்டு சேரில் அமர்ந்தான். அறை வாசலில் நின்று மானேஜர் “மே ஐ கமின்?” தீபக் ” எஸ் கமின். ப்ளீஸ் டேக் யுவர் சீட்.” மானேஜர் சேரில் உட்கார்ந்தபடி “அவுட்லட் ஸ்டோருக்கு அக்கவுண்டண்ட் அப்புறம் ஸ்டோரை கவனிக்க நம்ம சூப்பர்வைசர் பாலுவோட பொண்ணு ரெண்டு பேரையும் கூட்டி வந்திருக்கேன்.” தீபக் “பொண்ணா? வேண்டாமே. எனக்கு பெண்களை அப்பாயிண்ட் பண்றதில்


சோளப் பூ

 

 ‘பாப்கான் வாலா’ மூன்று மாதமாகத்தான் அவன் பாப்கான்வாலா. இந்தத் தொழிலை வேறு யாரும் செய்யாததால் போட்டிக்கு ஆளில்லாத தனிக்காட்டு ராஜா இவன். அப்பாவின் அகால மரணத்துக்குப் பின் ‘பி.காம்’ மோடு படிப்பை முடித்துக்கொண்டு சென்னையில் தன் தாய் மாமன் டிக்கெட் கிழிக்கும் சினிமா தியேட்டரில் ‘பாப்கார்ன் ஸ்டால்’ கான்ட்ராக்டரி டம் வேலை பார்த்தான். முதலாளி டி.என்.பி.எஸ்.சி எழுதி அரசு வேலை கிடைத்து சென்றுவிட்ட பிறகு இவனே தனியாக பாப்கான் பொரித்து விற்று முதலாளிக்கு வாரம் தோறும் வாடகை


தை பனிரெண்டு

 

 சுதன் அப்படி ஒரு குண்டைத் தூக்கி போடுவான் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. “உன்னுடன் அவசரமாய்ப் பேசணும், குவைத் டவருக்கு மாலை ஐந்து மணிக்கு வந்துவிடு” என்று போனில் சொல்லியிருந்தான். மனதில் ஆசைகளையும் கனவுகளையும் சுமந்து கொண்டு ஓடிவந்த எனக்கு சம்மட்டியால் அடி! குவைத் டவர் என்பது கூம்பு வடிவில், அற்புதமான டவர். குவைத்தின் சின்னம். சுற்றிலும் புல்வெளிகள்! நீச்சல் குளம்! தூரத்தில் கடலில் இளைஞர்கள் படகு சவாரி விட்டுக கொண்டிருந்தனர். லிஃப்டில் மேலே போகும்வரை அவன்


என்றும் நான் மகிழ்வேன்

 

 மதிவாணன் உற்சாகமாயிருந்தான். அவனடைய உற்சாகத்திற்கு காரணம் – லலிதா. அவளை சந்திக்கத்தான் இப்போது அவன் கிளம்பிக் கொண்டிருந்தான். முகத்திற்குப் பவுடர் போட்டான். சிசிலடித்தபடி அட்ரஸை படித்துப் பார்த்தான். “லிதா, 113/5 ஏ காரைக்கா முரி ரோடு, எர்ணாகுளம்.” ஷு ஷு மாட்டும்போது -சொல்லாமல் கொள்ளாமல் அவள் முன்பு போய் நின்றால் அவளுக்கு எப்படி இருக்கும்’ என்று நினைத்துப் பார்த்தான். அதிர்வாளா…வெட்கப்படுவாளா…கோபிப்பாளா…? இல்லை வீடு எப்படி கண்டுபிடித்தாய் என்று திகைப்பாளா…? பஸ் ஸ்டாப்பில் ― இங்கேதானே அவளை முதன்முதலில்


காணாது போகுமோ காதல்

 

 பாகம் 3 | பாகம் 4 இரவு தீபக் வீடு வந்த போது மணி ஏழாகி இருந்தது. வேதவல்லி ஹால் சோஃபாவில் மகனுக்காக காத்திருந்தாள். “வாப்பா முகமெல்லாம் வாடிக் கிடக்கு. அதிக வேலையா?” என பக்கத்தில் வந்தமர்ந்த தீபக்கின் கையைப் பிடித்தாள். தீபக் புன்னகைத்து “கொஞ்சம் அதிகம்தான். இத்தனை நாள் கணக்கை எடுத்து பார்த்தேன். ஒரே குளறுபடி. மெதுமெதுவா சரியாகும். ஓகே சாப்பிட்டீங்களா?” வேதவல்லி “இல்லேப்பா. வா சாப்பிடலாம்.” “நான் ஃபிரஷ்ஷாயிட்டு வந்துடுறேன்.” என்று எழுந்து தன்


காணாது போகுமோ காதல்

 

 பாகம் 2 | பாகம் 3 “ஏ ஆதி எங்கே போய் தொலைஞ்ச?” கனகம் எரிச்சலோடு வீட்டு வாசலில் நின்று கத்தினாள். முனைஞ்சி மூச்சு வாங்க ஓடி வந்து ” சிம்ஸ் பார்க்கில் பழக் கண்காட்சி பார்த்துட்டு வாரோம். ஆதி அதோ வர்றா” கனகம் “சும்மா சொல்றா போலன்னு நெனச்சேன். பய புள்ள போயிட்டு வந்துட்டாளா?” ஆதிரா வீட்டு நடையில் வந்து உட்கார்ந்தாள். கனகம் அவள் மண்டையில் தட்டி “வயசுப் புள்ள இப்படி சுத்திக்கிட்டு திரிஞ்சா என்னடி


காணாது போகுமோ காதல்

 

 பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 வேதவல்லி_பார்த்தசாரதி தம்பதிகளுக்கு தீபக் ஒரே பையன். இரண்டு வருடத்திற்கு முன்பு பார்த்தசாரதி உடல்நலக் குறைவால் காலமானார். அவர் இருக்கும் போதும் தன் மச்சினன் காசிநாதன் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவர் போன பிறகு வேதவல்லி, எஸ்டேட் விஷயத்திலும் வீட்டு விவகாரங்களிலும் தன் தம்பி காசி சொல்லிவிட்டால் அதற்கு அப்பீலே கிடையாது. காசிநாதனுக்கு மனைவி இல்லை. மகள் ரேணு மகன் ஷாம் மூவரும் மட்டும்தான். பங்களாவின்


காதலும் கடந்து போகும்

 

 கண்டதும் காதல் எல்லாம் இல்லை. ஆனாலும் எனக்கு அவளை பிடித்திருந்தது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு இடத்தில் அவளுடைய தரிசனம் எனக்கு கிடைத்துக்கொண்டே இருந்தது. அவளிடம் பேசி பழக வேண்டும் என்று என் மனம் ஆசைப்பட்டாலும் அப்படி ஒரு சம்பவம் நான் எதிர்ப்பார்த்தவரையில் கைகூடவே இல்லை. நானே எதிர்ப்பார்க்காத ஒரு நாளில் அவளே என்னிடம் பேசும் சந்தர்ப்பம் அமைந்தது. பேசினால் என்று சொல்வதைவிட நிறைய வசைப்பாடினால் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். தெருக்கோடில இருக்குற தொந்தி கணபதிக்கு


காணாது போகுமோ காதல்

 

 1 நீலகிரி மலை பச்சை பசேல் என தேயிலைத் தோட்டங்களையும் அழகிய ஆழமான பள்ளத்தாக்குகளையும், அருவிகளையும் தன்னகத்தே கொண்டு கம்பீரமாய் நிற்கிறது. ஹோண்டா சிட்டி கார் ஊசி முனை பென்டுகளில் லாவகமாய் வழுக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. “சீனு அண்ணே ஏஸியை அணைச்சுட்டு விண்டோ கண்ணாடியை இறக்குங்க” என டிரைவரிடம் கூறியதும் டிரைவர் சீனு கார் ஓட்டியபடி “ஆகட்டும் தம்பி ” என்றார். கார் ஜன்னல் கண்ணாடி கீழ் இறங்கியதும் பரபரவென வீசிய சிலீர் காற்றில் அவன்