கதையாசிரியர் தொகுப்பு: இலங்கையர்கோன்

6 கதைகள் கிடைத்துள்ளன.

மரியா மதலேனா

 

 (1946-50ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவள் ஒழுக்கம் தவறியவள். மோக்ஷ வீட்டை நோக்கிச் செல்லும் மனித வர்க்கத்தின் ஞானப் பாதையில் குறுக்கே படம் விரித்தாடும் கொடிய விஷசர்ப்பம். ஒன்றுமறியாத ஆண்மகனைத் தன் மாயா சக்தியால் வலிந்து இழுத்து மீட்சியில்லாத காமப் படுகுழியில் வீழ்த்தும் காந்தச் சுழல். அருவருத்து ஒதுக்கப்பட வேண்டிய வாழ்க்கை ரசத்தின் அடிமண்டி ….சீ! ஆமாம்! அவள் நிலை தவறியவள் தான். ஆனால் ஏன்? அவளுடைய நடத்தையைக்


வெள்ளிப் பாதசரம்

 

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தன் வீட்டுக்கு ஒரு அடுக்குப்பெட்டியும் தனக்கு ஒரு தையற்பெட்டியும் வாங்க வேண்டும் என்று நினைத்து வந்த வளுடைய உள்ளம் விம்மும்படி கோவில் வீதியெல்லாம் பெட்டிகளும் கடகங்களும் மலைமலையாய்க் குவிந்திருந்தன. குஞ்சுப் பெட்டி, அடுக்குப் பெட்டி, தையற் பெட்டி, மூடற்பெட்டி, பின்னற் பெட்டி..! எத்தனை வகை! அருகில் மாட்டை அவிழ்த்து அதன் வாயில் பொங்கிய நுரையை வழித்து அதன் மினுமினுக்கும் கரிய முதுகில் தேய்ப்பதில்


வஞ்சம்

 

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “நீரில் பால் கலப்பது போல, கழியும் இரவின் மையிருளில் உதயத்தின் வெண்மை பரவிக்கொண்டிருந்தது. நிலத்தில் சிதறிக் கிடக்கும் இலைகளின் மேல் பலா மரங்கள் சொரியும் பனித்துளி களின் ஏகதாள சப்தம் அவ்வைகறையின் நிசப்தத்திற்குப் பங்கம் விளைவித்தது… அப்பனித்துளிகளின் குளிர்ந்த ஸ்பரிசம்பட்ட மாத்திரத்தே, அருங்கோடையின் காய்ச்சலினால் உலர்ந்து முறுகிப் போய் இருந்த நிலம் ஒரு அற்புதமான மண் வாசனையைக் கக்கியது. பலா மரத்தின் கிளை


அனாதை

 

 ‘புத்’ என்ற நரகத்தில் இன்றைய மனிதனுக்கு நம்பிக்கை இல்லை. பிள்ளை இல்லாதவர்களுக்கென்றே ஒரு தனி நரகம் என்றால், நரகத்திற்கு அதிபதி எவனோ , அவன் நரகத்தின் பெரும் பகுதியையே இந்தப் ‘பாபி’களுக்கென்று பிரத்தியேகமாக ஒதுக்கி வைக்க வேண்டுமே! இந்த வகையைச் சேர்ந்தவர்களின் தொகை எண்ணில் அடங்காது. ஆயிரமாயிரமாக நோன்புகள் நோற்கிறார்கள்; தானதரு மங்கள் செய்கிறார்கள்; வைத்தியர்களிடம் ஆலோசனை கேட்டு மருந்து உண்கிறார்கள்; கத்தி வெட்டுச் சிகிச்சையும் செய்து கொள்கிறார்கள். செயற்கை வழிகளில் பாழ்பட்ட உதரங்களில் கருவேற்ற முயலு


மேனகை

 

 வாலிப வயதின் கனவுகள் நிறைந்த ‘மனக்காதல் ஆயின் விஸ்வாமித்திரர் மனிதர்களின் மத்தியில் வாழ்வதை விடுத்து கொடிய கானகத்தை நாடி வந்திருக்க வேண்டியதில்லை. ஆயிரம் மோகினிகளின் மத்தியிலேயே கனவு கண்டபடி காலத்தைக் கடத்தி விட்டிருக்கலாம். ஆனால் அவர் வாலிபப் பருவத்தைக் கடந்து பல்லாண்டுகளாய் விட்டன. அவரை வருத்தியது இளமையின் மனக்காதல் அன்று. நடுத்தர வயதின் மனக்கலப்பற்ற கொடிய உடல் வேட்கை. தசையின் பிடுங்கள்… சகலத்தையும் துறந்த சர்வவேத விற்பன்னரும் மகாமேதையுமான அவரால் பெண்ணாசை ஒன்றை மட்டும் துறக்க முடியவில்லை.


சக்கரவாகம்

 

 (1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “வேலுப்பிள்ளை, நாடி நல்லாய் விழுந்து போச்சு. வயதுமோ பின்னிட்ட வயது; இன்னும் இரண்டு மணித்தியாலத்திற்குள் எல்லாம் முடிந்து போய்விடும். மனதைத் தேற்றிக்கொள்.” இந்தக் கொடிய தீர்ப்பைத் தன் இளம் வயதிற்கு உரிய யோசனை யின்மையோடு அநியாயமாக வீசிவிட்டு, அதன் விளைவைப் பார்க்க விரும்பாதவன் போல் வைத்தியன் சால்வையை உதறித் தோளிற் போட்டுக்கொண்டு வீட்டு வாசலைக் கடந்து வேகமாக நடந்தான். வேலுப்பிள்ளை அசந்துபோய்த் திண்ணையிற்