கதையாசிரியர் தொகுப்பு: பானுமதி ராமகிருஷ்ணா

1 கதை கிடைத்துள்ளன.

மிஸ்டர் துக்ளக்கின் மகள்!

 

 கனகதுர்காவைப் பற்றிய செய்தியைக் கேள்விப்பட் டதும், ஊரே கலகலத்தது. அந்தக் காலத்தில் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா ருக்மிணியை ரதத்தில் ஏற்றிக் கடத்திக்கொண்டு போன பொழுது கல்யாண வீடு எப்படி திமிலோகப்பட்டதோ, அப்படி! வீராசாமி ராஜாவிற்கும் பெருந்தேவிக்கும் பிறந்த ஒரே ஒரு பெண்தான் கனகதுர்கா. ஒரே பெண் என்னும் காரணத் தால் செல்லமாகவும் செழிப்பாகவும் வளர்ந்தாள். அவள் மட்டுமல்ல, அவளது உடலும் கொழுகொழுவென வளர்ந்தது. பெண்ணுக்குப் பதினைந்து வயதாகியும், குனிந்து ஒரு செம்பு ஜலத்தைக்கூட எடுக்க அவள் தாயார் அனுமதித்தது