கதையாசிரியர் தொகுப்பு: நிர்மலா பாரதி

1 கதை கிடைத்துள்ளன.

தங்கராசு!

 

 தங்கராசை நீண்ட வருடங்களுக்குப்பிறகு எங்க ஊரில் பார்த்தேன். ஊருக்கு ஒரு வேலையாக வந்திருந்த நான், அந்த வேலையை முடித்துவிட்டு மாலை மதுரை செல்லும் பேருந்திற்காக காத்திருந்த பொழுது தங்கராசை எதேச்சையாக பார்த்தேன். அடையாளம் கண்டுகொண்டு அதே தயக்கத்துடன் அருகில் வந்தான். “எப்படி இருக்க தங்கராசு?” என்றேன். அவன் சொன்ன பதிலை கேட்டவுடன் முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை! அவன் வார்த்தையிலும் முகம் காட்டிய உணர்ச்சிகளிலும் கோபம இல்லை. ஆனால் ஒரு ஆதங்கமும், ஏமாற்றமும் தெரிந்தது. எதற்க்காக அப்படி