கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 9, 2023

10 கதைகள் கிடைத்துள்ளன.

பச்சை மிளகாய்

 

 எவரும் என்னை இலகுவில் கவர்வதில்லை, ஆனால், உங்களுடைய அமைதியான சுபாவமும், அன்பான வார்த்தைகளும் என்னை மிகவும் வசப்படுத்தியிருந்தன. அதனால், எனது எழுத்தைப் பாராட்டி, அதை மெருகுபடுத்துவதற்குச் சில புத்தகங்களைக் கொடுத்து உதவ விரும்புவதாக நீங்கள் சொன்னபோது, நான் மெய்சிலிர்த்துப் போனேன். கோடை காலத்தின் ஒரு மாலை நேரம் அது. அன்றுதான் உங்களுடைய வீட்டுக்கு நான் வருகின்றேன். ரெலிபோனிலும் ஈ-மெயிலிலும், இரண்டு வாரங்கள் மட்டுமே நாங்கள் பேசிப் பழகியிருந்தாலும்கூட, ஏதோ நீண்ட காலமாக உங்களை நான் அறிந்திருப்பது போல்


காவல்

 

 மல்வேட்டி ஜிப்பாவில் தங்க பிரேம் கண்ணணாடி அணிந்திருந்த அந்தப் பெரியவர் காவல் நிலையத்தில் நுழைந்தார். மூக்கு கண்ணாடியை சரி செய்தவாறே இன்ஸ்பெக்டர் காட்டிய நாற்காலியில் அமர்ந்து மேல் துண்டினால் விரல்களில் போட்டிருந்த மோதிரங்களை துடைத்து விட்டுக் கொண்டார். ‘என்ன விஷயம்?’ – வினவினார் இன்ஸ்பெக்டர். ‘ஒண்ணுமில்லே சார். என் பேர் கனகலிங்கம். நாங்கள் விவேகானந்தர் காலனியிலே புதுசா வீடு கட்டி குடி போயிருக்கோம். நம்பர் 13, நாலாவது தெரு. வர்ற ஏப்ரல் பத்திலேருந்து பதினைஞ்சுவரை ஹைதராபாத்துலே என்னோட


வெற்றிக்குள் ஒரு தோல்வி!

 

 மொட்டை மாடியில், அண்ணாந்து படுத்து, வானத்தில் கொட்டிக் கிடந்த நட்சத்திரத்தை எண்ணிக் கொண்டிருந்தான் சஞ்சய். மனசு, எதையும் யோசிக்கும் திறனற்று நிர்சலனமாய் இருந்தது. காபி டம்ளருடன், மாடிக்கு வந்த வள்ளிக்கண்ணு, மகன் அருகில் பூரிப்பாய் வந்து, ‘என்னய்யா… இங்க வந்து படுத்துக்கிடக்குறே… உங்கப்பா உன்ன காணலன்னு கீழே தேடிட்டு இருக்காரு… நம்ம உறவு முறையில, எத்தனை பேர் போன் செய்து கேட்டாங்க தெரியுமா…’ அவள் சொல்லி முடிக்கும் முன், அழகுநம்பி வாயெல்லாம் பல்லாய் மாடிக்கு வந்தார். ‘சஞ்சய்,


தீரன் சின்னமலை!

 

 “சின்னமலை,அந்த அண்ணாமலை நமக்கு துணையிருக்கார். இல்லேன்னா பெரிய மலையா இருக்கிற ஆங்கிலேயப்படை இந்த சின்னமலையா இருக்கிற நம்ம படைய கண்டு சிதறி ஓடியிக்குமா என்ன? நம்ம வருங்கால சந்ததிகள் உங்களை தெய்வமா வணங்கத்தான் போறாங்க” சொல்லி முடித்த நண்பரை கட்டித்தழுவினார் தீர்த்தகிரி எனும் தீரன் சின்னமலை. கிரி என்றால் மலை எனும் பொருள் அவருக்கு பொருத்தமாக அமைந்து விட்டது! “நாமென்ன அடுத்தவன் சொத்துக்கு ஆசப்பட்டா கொள்ளையடிக்கப்போனோம்? நம்ம தேசத்து சொத்த நாசமாக்க வந்த நாதாரி பசங்களை,அந்த வெள்ளைக்காரங்களைத்தானே


திசை மாறிய தென்றல்

 

 (ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அதிகாலை ந்தரை மணிக்கே வானம் சினக்க தொடங்கிவிட்டது. தங்க கட்டிகளை கரைத்து ஊற்றினாற் போல் தகதகவென ஜொலித்தது. காலைப் பனிகாற்று இதமாக இருந்தது. போர்வைக்குள் இருந்து வெளிப்பட்டான் ஆதர்ஷ் இரண்டு கைகளையும் கட்டிலில் ஊன்றி குனிந்த நிலையில் சிறிது நேரம் கண்களை மூடியபடி இருந்தான். பின்பு கண்களை தேய்த்துவிட்டுக் கொண்டு எழுந்தான். ஜன்னலின் அருகே வந்து திரைசீலையை முழுவதுமாக விலக்கினான். மெல்ல எழும்பி இருக்கும் மஞ்சள் சூரியனையும்


வேதாவும் மயிலிறகும்

 

 கஸ்தூரி ரங்கன் லைப்ரரி. திருவல்லிக்கேணியின் அந்தக் காலத்திய பிரபல நூலகம். தேரடித் தெருவில் இருந்து நல்லதம்பி முதலி தெரு போகும் வழியில் கார்னரில் இருந்தது. (இப்போது இருக்கிறதா தெரியாது) என் படிக்கும் பழக்கத்துக்குத் தீனி போட்ட நூலகம். காலையில் ஏழு மணிக்கெல்லாம் திறந்துவிடும். அப்போது ஒரு புத்தகம் எடுப்பேன். அதைத் தேர்வுக்குப் படிப்பது போல வீட்டில், கல்லூரி போகும் போது பஸ்ஸில், கல்லூரி மதிய உணவு வேளை, மாலை வீடு திரும்புகையில் என்று படித்து முடித்து, மாலை


புகார்

 

 நல்ல வேலை. பஸ்ல இடம் கிடைத்து விட்டது. அதுவும் ஜன்னலோர இருக்கை. குழந்தைகள் பெரியவர்கள் எல்லோருக்கும் ஜன்னலோரம் என்றால் ஒரு தனி சந்தோஷம்தான். 10-15 நிமிடங்களுக்கு பிறகு கூட்டம் நிரம்பியவுடன் கண்டக்டர் டிரைவர் வந்து சேர ஒரு வழியாக பஸ் புறப்பட்டு வெளியே வந்தது. ஜன நெரிசல் மிகுந்த கடை வீதியை தாண்டி பிரதான சாலையில் வந்து சேரும் நேரம் சிவப்பு சிக்னல் விழுந்து விட்டது. அடடா… ஜன்னலோர இருக்கை சுகமே மழையின் சாரல் தீண்டும் வரை…


ஒரு தெய்வத்தின் சாவு

 

 (1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உலகுக்குக் கீதையையும், குறளையும் தத்துவ அறிவையும், நாகரிகத்தையும் வழங்கிய இந்தியாவின், அதன் பீகார் மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கிறேன். வெப்பத்தின் கொடுமை உடலில் வியர்வை அரும்புவதற்குள் அதனை ஆவியாக்கி விடுகிறது. நெருப்புக் காற்றில் புழுதி பறக்கிறது. மனித முகங்களில் அவலமும், தென்படும் பொருட்களில் செம்புழுதியும் அப்பிக் கொண்டிருக்கின்றன. உயிர்கள் படும் துன்பம் என் நெஞ்சை மிதித்துத் துவைத்து விடுவதால் வெப்பத்தின் வேகம் எனக்குக் கொடுமையாகப்


முட்டையின் நிறம் கருப்பு

 

 (2017ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிங்கையில் மிகவும் பிரபலமான ‘கெண்டாங் கர்பௌ’ மகப்பேறு மருத்துவமனை சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. பலவண்ணக் கனவுகளைச் சுமந்த பெண்கள் வண்ணத்துப் பூச்சிகளாகக் காத்திருக்க, அவர்களுக்குச் சிறந்த சேவை வழங்கவேண்டும் என்ற கடமையுணர்வோடு தாதியர்கள் பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்தார்கள்.. டாக்டர். சத்தியநாராயணன் எனப் பெயர் தொங்கிக்கொண்டிருந்த அறைக்குள் ரம்யாவும் அவளது அம்மா கௌரியும் பவ்வியமாக அமர்ந்திருந்தனர். ரம்யாவுக்குச் சிறிது கலக்கமாகவே இருந்தது. மருத்துவரின்மேல் பதித்த கண்களை நகர்த்தி


ராஜேந்திரன் கனவு

 

 (1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கன்று மாலை. சக்கரவர்த்தி ராஜேந்திர சோழன், தன் புதிய தலைநகர் கங்கை கொண்ட சோழபுரத்து அரண் மனையின் உப்பரிகையில் உட்கார்ந்து கொண்டிருந்தார். பக்கத்தில் அவருடைய சகோதரி வேங்கிநாட்டு அரசி, குத்தவை, உட்கார்ந்து கொண்டு சக்கரவர்த்தியின் முகத்தை வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். ராஜேந்திர சோழனுக்கு அப்பொழுது வயது சுமார் ஐம்பத்தைந் திருக்கும். குந்தவைக்கு நாற்பதிருக்கலாம். மன்னன், ராஜ்ய விவகாரங் களை இளவரசன்