கதையாசிரியர் தொகுப்பு: நடிகை ஷீலா

1 கதை கிடைத்துள்ளன.

அப்பாவின் மனைவி!

 

 கங்காவுக்கு தலை சுற்றியது. மிகவும் கஷ்டப்பட்டு வரவழைத்த புன்னகையுடன் கைகளை பிசைந்தவாறு சிவராமின் பின்னால் தன்னை மறைத்துக்கொள்வது போல் நின்றுகொண்டிருந்தாள். அவர்கள் இருவரையும் வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் சிவராமின் எழுபது வயதைத் தாண்டிய பெற்றோர். தும்பைப் பூவைப் போல் நரைத்திருந்த தலைமுடியும், வாழ்க்கையின் பல கோணங்களை சந்தித்துவிட்டதன் அறிகுறியாக முகத்தில் வீழ்ந்த சுருக்கங்களையும் தாண்டி, இப்போது தம் மகன் செய்து வந்திருக்கும் காரியத்தைக் குறித்து வேதனையும் கோபமும் போட்டியிட அவர்கள் பார்த்த பார்வை கங்காவின்