கதையாசிரியர் தொகுப்பு: சிவகாசி மணியம்

2 கதைகள் கிடைத்துள்ளன.

அந்தக் குழந்தை

 

 வாழ்க்கையில் இரண்டு துன்பங்கள் உண்டு. ஒன்று, தான் விரும்பியதை அடையாமல் போவது; இரண்டு, தான் விரும்பியதை அடைவது என்று தனது நாடகம் ஒன்றில் எழுதியவர் அறிஞர் பெர்னாட்ஷா! விரும்புகிற வாழ்வை உருவாக்கிக்கொள்வது எல்லோருக்கும் எளிதல்ல. கிடைக்கின்ற வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொள்வதும் சுலபமில்லை. யாரைக் கேட்டாலும் எதிர்பார்த்ததுபோல இல்லேப்பா என்றுதான் பதில் வருகிறது. எனது கற்பனையில் யாரைக் கண்டெடுத்துக் காத்திருந்தேனோ அப்படியே மனைவி வாய்த்துவிட்டாள் என்று மன நிறைவு கொண்டோர் இருக்கலாம்தான். அவர்களைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். திருமண-மான


இதுதான் காதலா?

 

 நிலைக் கண்ணாடி முன் நின்று தலை சீவி, பவுடர் பூசி, மடிப்புக் கலையாத உடையணிந்துகொண்டிருந்த பரிதியின் பார்வை வாசல் பக்கம் இருந்தது. டாடா சுமோ எழுப்பும் ஒலி காதில் விழுகிறதா என்பதில் அவனது கவனம் இருந்தது. அவனுக்குப் பின்னால் சந்தடியின்றி தங்கை பொன்மணி வந்து நிற்பதை அவன் கவனிக்கவில்லை. “”இன்னிக்கி சனிக்கிழமை. உன்னோட பாங்க் திறந்திருக்கலாம். காலேஜ் திறந்திருக்காது. டாடா சுமோவும் வராது” என்ற தங்கையின் குரல் காதில் விழ வெட்கத்தை வெளிப்படுத்தாதிருக்க,””உன்னோட ஃபிரண்டு தேன்மொழிக்காக இல்லே.