கதையாசிரியர் தொகுப்பு: தி.திருக்குமரன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

வாழ் கனவு

 

 எங்கள் வானில் விமானங்கள் எந்த நேரமும் வந்து குண்டு மழை பொழியும், பலாலி இராணுவ முகாமில் இருந்து அடிக்கின்ற ஷெல் வீட்டுக்கு மேலால் கூவிக்குகொண்டு போய் விழுந்து வெடித்து அதன் சிதறல்களால் வீட்டுச் சுவர்களில் காயம் வரும், சில வேளை வீட்டிலேயே ஷெல் விழுந்து சமையலறையும், சாமி அறையும் சிதறிப் போய்க் கிடக்கும், உலங்கு வானூர்த்தி வானுக்கு மேலே வட்டமிட்டு தன் கண்ணுக்கு தெரிகின்ற ஆட்களை எல்லாம் 50 கலிபர் ரக துப்பாக்கிகளால் சுட்டுத் தள்ளும். எல்லாம்


தாவூத்தின் கதை

 

 கண்ணை இறுக்கமாக மூடி தலையுள் இங்காலும் அங்காலுமாக ஓடித் திரியும் நினைவுகளை சுற்றித் திரிய விடாமல் வைத்திருக்கும் படி மனசால் மூளைக்குச் சொன்னபடி மெதுமெதுவாக நினைவுகள் அமைதி அடைய அரைத்தூக்கத்துக்குள் போய்க் கொண்டிருந்தான் சமரன். வழமை போலவே இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது அடிக்கிற சத்தம் கூட அவன் காதுக்குக் கேட்கத் தொடங்க மரணபயம் சமரனைத் தொற்றிக் கொண்டது படுக்கையில் இருந்து எழுந்து கட்டிலில் உட்கார்ந்தபடி ஏன் இப்படி அடித்துத் தொலைக்கிறதென இடது நெஞ்சில் கையை வைத்துப்