கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 17, 2023

10 கதைகள் கிடைத்துள்ளன.

தப்புத் தாளம்

 

 சின்ன வயசிலேந்தே எனக்கு பாட்டுன்னா உசிரு. எதுக்காவது அடம் புடிச்சேன்னா என் சித்தி, அதான் என் அம்மாவோட தங்கை, “அம்மூ இங்கெ வா பாட்டு சொல்லித் தறேன்” ன்னு கூப்பிடுவா. நான் பொட்டிப் பாம்பா அடங்கி ஒடுங்கி சித்தி முன்னாடி போய் ஒக்காருவேன். சித்தியும் “சா…… பா….. சா…..” ன்னு ஆரம்பிப்பா. நானும் கூடவே “சா….. பா….. சா…..” ன்னு சன்னக் குரலுலே பாடுவேன். “வாயெ நன்னா தொறந்து கணீர்னு பாடணும். அப்பொதான் சங்கீதம் வரும்” னு


ஏக்கம்

 

 இரவு 9 மணி. கரெண்ட் இல்லை. எங்கும் இருள். ஒரு முக்காடிட்ட உருவம் வருகிறது கையில் ஒரு மூட்டை. ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறது. அங்கிருந்து கோயிலைப் பார்க்கிறது. யாராவது வந்த வண்ணம் இருக்கிறார்கள். சிறிது நேரம் காத்திருக்கிறது. அப்பாடா, யாரும் வரவில்லை, என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டு அந்த மூட்டையை கோயில் வாசலில் வைத்து விட்டு வேகமாக நகர்ந்து மறுபடி மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறது. அப்பொழுது அங்கு ஒரு நாய் மூட்டையைப்


வாப்பா இல்லாத ஊரில்…

 

 நேற்று இரவு ஒன்பது மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்டவன் காலை ஆறுமணிக்குத்தான் ஊர் வந்து சேர்ந்தான். வழக்கமாக அதிகாலை நான்கு மணிக்காவது வந்து சேர வேண்டிய பிரயானம் இடையில் ஏற்பட்ட எதிர்பாராத தடங்கல்களால் தாமதமாகிவிட்டது. வீட்டுக்கு வந்த அவனை தங்கையும் கணவரும் வரவேற்றார்கள், சுமார் பத்து வருடங்களின் பின் சொந்தநாட்டுக்கு வந்திருக்கின்றான்,போன புதிதில் வாப்பாவின் இழப்பால் நாட்டுக்கு வரமுடியாமலும் அங்கும் நிம்மதி இல்லாமலும் நாட்களை கடத்தி இருக்கின்றான், “கவலப்பட்டு என்ன செய்ய எல்லாம் விதிப்படிதான் நடக்கும்” “எல்லாம் நன்மைக்குத்தான்”


அரைப்பவுன் தாலி

 

 அந்த திருமண மண்டபமே அலங்கார விளக்குகளால் ஜொலித்து கொண்டு இருந்தது. விடியற்காலை இரண்டரை மணி இருக்கும் போது ஆதிராவை அவள் தாய் சுகந்தி எழுப்பி குளிக்க போகச் சொன்னாள். ஆதிராவும் குளித்து தயாராகி வரவும், அழகுக்கலை நிபுணர்கள் அவளை அழகுபடுத்த ஆரம்பித்தனர். ஆதிராவை வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசித்து கொண்டிருந்தாள் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் வைதேகி அம்மா. மிகப்பெரிய தொழிலதிபர் ராஜரத்தினம்-சுகந்தி தம்பதியினரின் ஒரே செல்வ மகள் தான் ஆதிரா. இன்று ஆதிராவின் திருமணத்திற்கு


எது பணிவு!?

 

 ‘பணிவு சிலருக்கு வேசம்.. பலருக்கு பயம் கலந்த மரியாதை’ இப்படி மணிமேகலை பலமுறை யோசித்திருக்கிறாள். அலுவலகத்திற்க்குபோனால்….பணிவாக பேசுபவர்களே நல்லவர்கள் என்று மேலதிகாரி நினைக்கிறார். வீட்டில் மாமியாரும் அப்படியே! நம் மனதில் பட்டதை வெளிப்படையா பேசினால், விரோதி போலவே நினைக்கிறார்கள். ‘புத்தி என்ன சொல்லுதோ அதை மனசு கேட்கணும்.! மனசு எதை நினைக்குதோ…அதையே வாய் பேச வேண்டும்’ என்று இருப்பதுதான் அவளுக்கு விருப்பம். ‘உண்மையாக இருப்பது…பேசுவது…யாருக்கும் பிடிப்பதில்லையே..ஏன்? பணிவு மனதில் இருந்தால் போதுமே? அதை நடித்துக்காட்டித்தான் நிரூபிக்க வேண்டுமா?’ அன்று அவளுடைய


காந்தி பக்தன்

 

 (2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நீண்ட இடைவெளிக்குப் பின்பு பஸ்ஸில் பயணஞ் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தமையால் டேவிட்டின் அறிமுகம் கிட்டியது. பெரும்பாலும் காரிலேயே பயணங்களை மேற்கொண்டு வந்த எனக்கு மாரடைப்பு வந்ததன் பின்பு குறைந்தது மூன்று மாத காலத்திற்காவது காரைச் செலுத்தக்கூடாது என்று சிகிச்சை அளித்து, சத்திர சிகிச்சைக்கான நாளும் குறித்தனுப்பிய டாக்டரின் கண்டிப்பான உத்தரவு. இந்த பஸ் பயணம்தான் எவ்வளவு இனிமையானது, சுவாரஸ்யம் நிரம்பியது. யன்னலருகே அமர்ந்து


நகைத் திருடி

 

 (2012 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) டிங் டாங்…டிங் டாங்… காலிங் பெல் ஒலித்தது. கேரோலின் போய்க் கதவைத் திறந்து, வாசலில் நின்ற வனிதாவைப் பார்த்து, “அக்கா வாங்க. சுகமாய் இருக்கிறீங்களா? உள்ளே வாங்க, சோபாவில் வந்து உட்காருங்க” என்று அன்போடுவரவேற்றாள் கேரோலின். அதற்கு வனிதா, “அக்கா, நீங்க சௌக்கியமா? வருகிற வழியில் உங்கள் பையன்கள் இரண்டு பேரும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.” நேற்று கோயிலில் நீங்க முன்


இட்லி

 

 மணி இரவு 9.30. அமைச்சர் அமலனின் கார் ஊருக்குள் நுழைந்தது. பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு, வாழ்க கோஷம், கட்சிக்காரர்கள் ஷால் போர்த்தல், பத்திரிகையாளர் சந்திப்பு என எல்லா சம்பிரதாயங்களும் சமுதாயக்கூடக் கட்டடத்தில் முறைப்படி விமரிசையாக நடைபெற்றன. எல்லா வழக்கமான சடங்குகளும் முடிந்தபின். அவர் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றார் முத்து… தங்கும் அறை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்ததால் இரவு நன்றாகத் தூங்கி ஓய்வெடுத்தார். ஆறு மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி


இதுதான் சரி – ஒரு பக்க கதை

 

 (2016 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “என் பையன் ஒன்பதாவது படிக்கறான் இல்லே… முழுப் பரீட்சை அவன் சரியா செய்யலே. அந்த ஹெட்மாஸ்டர் உனக்கு ரொம்ப தெரிஞ்சவர் தானே. கொஞ்சம் பாஸ் போட்ற சொல்லுப்பா.” என் நண்பன் ரவி என்னிடம் கேட்டான். “அது சரி… நீ வீட்டிலே அவனை கவனிக்கிறதில்லையா?… டியூஷன் எல்லாம் வச்சிருக்கக் கூடாது?” “எல்லாம். வச்சேன். திருட்டுப் பய… ஊர் சுத்தறான். ஒழுங்கா படிச்சாத்தானே!” “அதை கவனிக்காம


நாகலோகக் காதல்!

 

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘அர்ஜூனா’ என்று அன்பர்க அழைத்தார் கிருஷ்ண பகவான். ‘ஸ்வாமி’ என்று மகிழ்வுடன் வந்தான் விஜயன். ‘பார்த்திபா! நீ கல்யாணம் செய்து கொள்கிறாயா?’ என்று மாயவன் கேட்டார் புன்னகை புரிந்த வண்ணம். காண்டீபனுக்கு முதலில் ஐயம் எழுந்தது. ஒரு வேளை மாதவன் தன்னைக் கேலி செய்கிறாரோ என எண்ணினான். திக்விஜயம் செய்து அற்புத அழகிகளை மனைவியராகப் பெற்று இன்ப வாழ்வு வாழ்பவன் அவன். அவனிடம்