கதையாசிரியர் தொகுப்பு: இரா.சம்பந்தன்

5 கதைகள் கிடைத்துள்ளன.

மாயமான்கள்

 

 அக்கா! நீ வெளிநாட்டிலே. அம்மா இப்பவும் கிடுகு பின்னப் போறவ. அதற்கு மேலும் ரேணுவால் அந்தக் கடிதத்தை வாசிக்க முடியவில்லை. கண்கள் கலங்கி எழுத்துக்கள் இரண்டு மூன்றாகத் தெரிந்தன. எத்தனை சுருக்கமான வரிகள். அதன் பொருள் எவ்வளவு விரிவானது என்று அவளுக்குத் தெரியும். மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை அவளும் கிடுகு பின்னப் போனவள் தான். அம்மாவும் தானும் சேர்ந்து உழைத்தே சமாளிக்க முடியாமல் இருந்த வீட்டுப் பிரச்சனைகள். அதுவும் நாடு அவ்வளவு குழப்பம் இன்றி இருந்த நேரம்.


நோக்கப் படாத கோணங்கள்

 

 இன்றைக்கு எங்களுடைய கல்யாண நாள் மாமா, நான் ஒருக்கா கோவிலுக்குப் போட்டு வாறன், பிள்ளை படுத்திருக்கிறாள், எழும்பினால் இந்தப் பாலைக் குடுங்கோ என்ன? ஓடியாறன். ஞாயிற்றுக்கிழமை பொழுது விடிந்ததும் விடியாததுமாக குளியல் அறையில் கேட்ட தண்ணீர் சத்தத்துக்கும் சமையல் அறையில் இருந்து வந்த தாளித்த மணத்துக்கும் விடை தெரியாமல் படுக்கையில் கிடந்து தவித்த ஓவிசியர் தணிகாசலம் மருமகள் சியானியை நிமிர்ந்து பார்த்தார். தினமும் இறுக்கமான ஜீன்சும் ரீசேட்டும் என்று பரபரப்பாக இருப்பவள் இன்று பட்டுப் புடவையில் மட்டுமல்ல


கொத்தமல்லிக்குடிநீர்

 

 அம்மா! பிள்ளைகள் படுத்திருக்கினம். நான் போட்டு வாறன். பரிமளம் ஆச்சி எழுந்து உட்காருவதற்குள் அறைக் கதவைச் சாத்திவிட்டு மகள் போய்விட்டாள். ஆச்சிக்கு இன்றைக்கும் சுகமில்லைத் தான். போன கிழமை பேரப்பிள்ளைகளோடு கடற்கரைக் குளிரில் உலாவினதாக்கும் ஆச்சிக்கு நெஞ்சுத்தடிமன் ஆக்கிப் போட்டுது. சனியும் ஞாயிறும் ஒரே தலை அம்மல். மண்டையிடி. சாப்பாடு மனமில்லை. எழுந்து நடக்க உலாஞ்சியது. இராத்திரிப் படம் பார்த்துக்கொண்டு இருந்த போது தொடர்ந்து நாலைந்து தடவைகள் இருமியதற்காக என்னம்மா படம் பார்க்க விடமாட்டீங்களா? போய் அறைக்குள்ளே


சுமைகள்

 

 தாயோடு அறுசுவை போம். தந்தையொடு கல்வி போம். தான் பெற்ற சேயோடு தனக்கிருந்த செல்வம் போம் என்று பாடிய முன்னோர்கள் இன்றிருந்திருந்தால் தான் பிறந்த நாட்டோடு தனக்கிருந்த மதிப்புப் போம் என்று நிச்சயமாகப் பாடியிருப்பார்கள். அப்படியொரு கேவல நிலைக்கு வந்து விட்டேனே என்ற நினைப்பு வரும்போதெல்லாம் அவரையும் அறியாமல் கண்கள் குளமாகிவிடும் துரைரட்ணத்துக்கு. என்ன துரைரட்ணம் மகள் டெலிபோன் ஏதாவது எடுக்கிறவளோ? என்று கேட்கும் நண்பர்களின் கேள்வியில் தொனிப்பது ஏளனமா ? அல்லது இரக்கமா? என்று அவருக்குப்


முள்ளில் ஒரு சேலை

 

 விமலி! என்ன பிள்ளை நீ செய்யுற வேலை? முதலிலே போய் அவரின்ரை காலிலே விழுந்து கும்பிடு மோனை. அப்பா இல்லாத இடத்திலே ஒரு தகப்பனுக்குத் தகப்பனாக இருந்து உன்னை வளர்த்து இப்படியொரு நல்ல வாழ்க்கையை அமைச்சுத் தந்த மனுசன். ஓடி வந்து என்ரை காலிலே விழுகிறாய்! போ போ பிள்ளை. அம்மா இப்படித்தான் சொல்லுவாள் என்று விமலிக்குத் தெரியும். அப்படியிருந்தும் அம்மாவின் காலிலே தான் முதலில் விழுந்து கும்பிட்டாள். அவர் அவரென்று அம்மா சொல்வது அக்காளின் கணவனை.