கதையாசிரியர் தொகுப்பு: போகன் சங்கர்

3 கதைகள் கிடைத்துள்ளன.

நடிகன்

 

 இரண்டு வலித் தாக்குதல்களுக்கு நடுவே சற்று சிந்திக்க முடிந்தது. தெளிவாக இல்லை. எனினும் ஓரளவு. தாக்குதல்களின்போது சிந்திக்கவே முடியவில்லை. ‘நாய்’ என்ற சொல் மட்டும் உள்ளே வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வலி தாங்காது, தலையும் கால்களும் மட்டும் படுக்கையில் குத்தி, முதுகு வில் போன்று வளைந்து, கூரையைப் பார்க்க விறைத்து, கட்டை போன்று நிற்கிற மனிதன் என்ன யோசிக்க முடியும்… வலியையும் மரணத்தையும் தவிர? அந்த நேரங்களில் வார்டு முழுக்கப் படுத்துக்கிடந்தவர்கள் அவனை அச்சத்துடன் பார்ப்பதை உணர முடிந்தது.


காதல் நிற ஓவியங்கள்

 

 ”I feel lousy” என்றான் அவன். மஞ்சுளா, ஆபீஸ் முடிந்து மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிக்கொண்டு பஸ் ஏறக் காத்திருக்கையில், ஒரு கடை வாசலில் தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் நபர் யார் எனப் பார்த்தாள்… அட, ஹரி. ”ஹரி, ஏன் இங்க உட்கார்ந்திருக்கீங்க? உடம்பு சரியில்லையா?” அவன் நிமிர்ந்து பார்த்து, ”மஞ்சு மேடம்” என்றான் பலவீனமாக. ஆட்டோக்காரரைக் கூப்பிடுவதற்குள் ஹரி ஏறத்தாழ மயங்கியிருக்க, ”கொஞ்சம் ஹெல்ப் பண்ணுப்பா” என்றாள் ஆட்டோக்காரரைப் பார்த்து மஞ்சுளா. ”என்னம்மா குடிச்சிருக்காரா?” என்றார். ”சேச்சே…”


யாமினி அம்மா

 

 அந்த இடத்துக்கு அவர்கள் எப்படி வந்து சேர்ந்தார்கள் என்று தெரியவில்லை. ஏன் வந்து சேர்ந்தார்கள் என்பதும் சரியாகத் தெரியவில்லை. எதனிடம் இருந்தோ தப்பித்து வந்திருக்கிறார்கள். நான் அவர்களிடம் எதற்குப் போய்ச் சேர்ந்தேன், எப்படிப் போய்ச் சேர்ந்தேன் என்பதற்கும் அதே காரணம்தான். எதனிடம் இருந்தோ தப்பித்துக்கொள்ள… ”இந்த ஊர்ல தங்க, ஒரு இடம் கிடைக்குமா?” என்றதற்கு ஒரு கணம், அங்கிருந்த ஒரே டீக்கடையில் நெடுநேரம் மௌனம் நிலவியது. கடைசியாக ”ஏன் இங்கே தங்கணும்?” என்றார் ஒருவர் சற்றே விரோதமாக.