கதையாசிரியர் தொகுப்பு: லக்ஷ்மி சரவணகுமார்

3 கதைகள் கிடைத்துள்ளன.

நாய்வேட்டம்

 

 வாயின் இரண்டு ஓரங்களில் இருந்தும் வெள்ளி நூல் போல, சேகருக்கு சதா எச்சில் ஒழுகியபடியே இருந்தது. வீட்டில் இருந்து கிளம்பும்போதே உடலில் சின்னதாக ஓர் அரிப்பை உணர்ந்தான். உடல் முழுக்க அந்த அரிப்பின் அடையாளமாகச் சிறிது சிறிதாகத் தடிப்புகள் முளைத்தன. ரெஜிஸ்ட்டரில் கையெழுத்து போட்டுவிட்டு உடை மாற்றிக்கொண்டவனுக்கு, நேற்று ஒரு நாயைப் பிடிக்கும்போது அது பிராண்டிவைத்ததில் பிய்ந்துபோன தன் கால்சட்டை பட்டனின் நினைவு இப்போதுதான் வந்தது. கால்சட்டை, இடையில் நிற்கவில்லை. ஊக்கை மாட்டிச் சமாளித்தான். நா வறண்டு


குதிரைக்காரன் குறிப்புகள்

 

 ‘வீழாதே என் தெய்வமே வீழ்ந்துவிடாதே வீழ்ந்தவர் எவரும் எழுந்ததில்லையே! ’ – song of giant of the first age. ”ப்ளூ மவுன்டெய்னை விக்கப்போறேன் அசோக்… திஸ் வில் பி ஹெர் லாஸ்ட் ரேஸ்…’ முதலாளியிடம் இருந்து இந்த வார்த்தைகளை அசோக் கேட்டபோது, அந்த நாளுக்கான சூரிய வெளிச்சம் அடிவானத்தில் இருந்து எழத் தொடங்கியது. இன்னும் பனி விலகாத புல்வெளி. பந்தயச் சாலையை ஒருமுறை பார்த்தவன், அந்தக் குதிரையின் மீது முதல்முறையாக ஏறிய நாளை நினைத்துக்கொண்டான்.


அம்மாவும் அப்பாவும் காதலிக்காத கதை

 

 இத்தனை காலங்களில், அப்பாவின் மீது ராமுக்கு மிஞ்சி இருந்தது, வெறுப்பு… வெறுப்பு… வெறுப்பு மட்டும்தான். ராமுக்கு அவர் மீது இருந்த அதே வெறுப்பு, அவருக்கும் அவன் மீதும், அவன் அம்மாவின் மீதும் இருந்தது. அம்மா, ஒரு பூஞ்சை; சிறு வயதிலிருந்தே உழைக்கப் பழகியவள். கண்களைச் சுற்றி எப்போதும் கருவளையங்களும், இந்த ஜென்மத்தில் துடைத்தெடுக்க முடியாத தனிமை உணர்ச்சியும் அவள் முகத்தில் நிறைந்திருக்கும். தனிமை அடர்ந்த முகம், சக மனிதனுக்கு எப்போதும் அந்நியமான ஒன்றுதான். அப்பா, அவளுடன் நடந்த