கதையாசிரியர் தொகுப்பு: திரேசியா பவுலோஸ்

4 கதைகள் கிடைத்துள்ளன.

காகத்தின் அறிவுரை!

 

 பால்காரர் முருகனிடம் எருமை ஒன்றும் நான்கு பசு மாடுகளும் இருந்தன. அவருடைய கிராமத்திலும், சுற்றி உள்ள சிறு சிறு கிராமங்களிலும் பாலை விற்றுவந்தார். தினமும் அதிகாலையிலேயே எழுந்து தொழுவத்தைச் சுத்தம் செய்வார். மாடு கன்றுகள் குடிப்பதற்குத் தண்ணீரும், சாப்பிட வைக்கோலும் வைப்பார். பாலைக் கறந்தவுடன் குடத்தில் எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர் வீடுகளுக்குச் சென்று கொடுப்பார். முருகனின் மனைவி வள்ளியும் அதிகாலையிலிருந்தே தன் கணவனுக்கு உதவி செய்வாள். பாலில் தண்ணீர் கலக்காமல் நேர்மையுடன் விற்றுவந்தார் முருகன். அதனால் கிராமத்து மக்கள்


ஜிம்போவைக் காப்பாற்று!

 

 தேன் மல்லிச் சோலையின் ஓரமாக ஓர் ஓடை பாய்கிறது. அதைத் தாண்டிச் சென்றால் தேவர் மலைக் காடு. காட்டிலிருந்து விலங்குகள் வந்து ஓடையில் தண்ணீர் குடிக்கும். ஜிம்போ, தேவர் மலையில் வாழ்ந்து வரும் ஒரு யானைக் குட்டி. அந்தக் காட்டில் எல்லாருக்கும் பிரியமானது அது. எல்லா விலங்குகளும் ஒற்றுமையோடு வாழ்வது தேவர் மலைக் காட்டின் சிறப்பு. ஒரு நாள் ஜிம்போ தண்ணீர் குடிப்பதற்காக ஓடைக்கு வந்தது. தாகம் தீரும் வரை தண்ணீர் குடித்தது. பிறகு தண்ணீரை உறிஞ்சி


சிறிய வீடும் சிம்பு முயலும்!

 

 சிம்பு முயலைப் பார்த்திருக்கிறீர்களா? அழகான குட்டி முயல்! பட்டு போன்ற வெண்ணிற ரோமம். பாலில் மிதக்கும் காபூல் திராட்சை போன்ற அழகான கண்கள். கோவைப் பழம் போல சிவந்த வாய். இரண்டு காதுகளையும் உயர்த்தி சிம்பு குதித்துக் குதித்து வரும்போது பார்க்கிற எல்லோரும் மெய்மறந்து விடுவார்கள். அது நடந்துபோவது, ஒரு குட்டி தேவதை நடனம் ஆடியபடி வருவது போல் இருக்கும். எப்போதும் ‘துருதுரு’வென ஒரு சுறுசுறுப்பு. சிம்பு முயலுக்கு நீண்டநாட்களாக ஓர் ஆசை! எல்லோருக்கும் சொந்தமாக ஒரு


பாலைவனத்தில் பாச மழை

 

 ஒரு பாலைவனத்தின் நடுவில் உயரமான ஒரு மரத்தின் உச்சாணிக் கிளையின் உச்சிக் கொம்பில் கூடு கட்டியிருந்தது ராஜாளி ஒன்று. உயரமான கோபுரத்தின் உச்சியில் அமர்ந்து ஊர் முழுவதையும் கண்காணிக்கும் காவல்காரனைப் போல, அந்த மணற்காடு முழுவதையும் நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும் அந்த ராஜாளி! அதன் பார்வையே அனைவருக்கும் அச்சம் தரும்! அந்த மரம் முழுவதும் தனக்குத்தான் சொந்தம் என்று வேறு எந்தப் பறவையும் அந்த மரத்தில் கூடு கட்டாமல் பார்த்துக் கொண்டது. காகமோ, குருவியோ கூடு கட்ட