கதையாசிரியர் தொகுப்பு: அ.உமர் பாரூக்

4 கதைகள் கிடைத்துள்ளன.

கல் நின்றான்

 

 மாடுகளை பத்திக் கொண்டு போய்க் கொண்டிருந்த அந்துவன் ஒரு நிமிடம் அந்தக் கல் முன்னால் நின்றான். முக்கால் ஆள் உயரமும், மூன்று ஆள் பருமனுமாக மண்பாதையின் வளைவில் நிமிர்ந்து நின்றிருந்தது கல். மாடுகளுக்கு முன்புறமாக வழியை ஒழுங்கு படுத்திய படி போய்க் கொண்டிருந்த கோதை அங்கிருந்த படியே திரும்பிப் பார்த்தாள். இடுப்புக் கச்சில் செருகி வைத்திருந்த சிறு குச்சியை எடுத்து, கல்லின் பின்புறம் இருந்த காட்டுச் செடிகளை விலக்கிய படி பார்த்தான். நின்று கொண்டிருந்த கல்லில் எழுதப்பட்டிருந்த


எசமான் தேசத்தின் இரண்டாவது புயல்!

 

 எசமான் தேசத்தின் இந்த ஆண்டில் இது இரண்டாவது புயல். புயல் என்றவுடன் கடலில் வருவது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இது நாட்டில் வரும் புயல். சின்னச் சின்னதாய் நிறைய பிரச்சினைகள் அன்றாடம் வருவது எசமான் தேசத்தில் பழகிப் போன ஒன்றுதான். ஆனால், இது வழக்கமான பிரச்சினை அல்ல – உண்மையிலேயே புயல்தான். இந்த ஆண்டின் முதல் பிரச்சினை ரூபாய் நோட்டு வடிவத்தில் வந்தது. எல்லா குடிமக்களும் நைட் டூட்டி முடித்து விட்டு, பகலில் தூங்கிக் கொண்டிருந்த போது


சைத்தான்

 

 ”அபூ. . . சைத்தான் மெளத்தாயிட்டாண்டா. . . .” மதரசாவின் தங்கும் விடுதிக்குள் தலையை நீட்டி கத்தினான் சிக்கந்தர். அதிகாலையில் பஜர் தொழுதுவிட்டு வந்து , தங்கும் விடுதியை விட்டு வெளியே கிளம்பிக் கொண்டிருந்தான் அபு. அவனுக்கு சைத்தான் இறந்து விட்டதை நம்பவே முடியவில்லை. வழக்கமாக, காலை பத்து மணிக்குத்தான் மதரசா ஆரம்பிக்கும். அதிகாலையிலேயே குளித்து விட்டு தொழுகப் போவார்கள் மதரசா மாணவர்கள். திரும்பி வந்தும் சிலர் குளிப்பதுண்டு. காலை ஆறு மணியில் இருந்து, பத்து


ஆறாங்கல் தர்கா

 

 கல்லா ராவுத்தருக்கு காலையிலிருந்தே மனசு ஒரு நிலையில் இல்லை. அதிகாலையில் ஃபஜர் தொழுது விட்டு, வழக்கம் போல கடைக்கு வந்து விட்டார். எப்போதும் கடையில் இருக்கும் போது எந்தச் சலனமும் இன்றி இருப்பவருக்கு, இன்று அப்படி இருக்க முடியவில்லை. ஒரு வாரமாக இருக்கும் பர பரப்பு இன்று ரொம்ப அதிகமாகவே தெரிந்தது. கடைத்தெருவில் சிறிய கடை கல்லா ராவுத்தருடையது. முப்பது வருஷத்துக்கு முன்னால் என்ன அமைப்பில் இருந்ததோ, அதே அமைப்பிலேயே இப்போதும் இருக்கிறது. வருஷந்தோறும் வெள்ளை அடித்து,