கதையாசிரியர் தொகுப்பு: சே.வெ.சண்முகம்

1 கதை கிடைத்துள்ளன.

சிங்கப்பூர்க் குழந்தைகள்

 

 (1975-ம் ஆண்டு சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் நடத்திய சிறுகதை எழுதும் போட்டில் முதற் பரிசு பெற்றது.) நெஞ்சையள்ளும் வீணை இசையை வீடு முழுவதும் நிறைத்துக் கொண்டிருந்தது வானொலிப் பெட்டி. ஊதுவத்தியின் நறுமணம் ‘கமகம’வென்று எங்கும் பரவியது. வண்ண மலர் மாலை சூட்டிய கண்ணன் திருஉருவம் அகல் விளக்கின் பொன்நிறச் சுடரில் தகதகத்தது. அந்த அழகுச் சுடர் பேருருப் பெற்றதுபோல் அருகே திருமகளாக நின்றிருந்தாள் சிவகாமி கூப்பிய கைகளுக்குள் தன் உயிரை யும் உள்ளத்தையும் வைத்துத் தெய்வத்துக்குக் காணிக்கையாக்குவது