கதையாசிரியர் தொகுப்பு: பி.காவிரி

1 கதை கிடைத்துள்ளன.

ஓடிப்போன பிள்ளை

 

 கொதித்து கொண்டிருந்த உலையில் அரிசியை களைந்து போட்ட குருவம்மா, விறகை உள்ளுக் கிழுத்து தணலை அதிகப்படுத் தினாள். ஒரு மண்சட்டியில் ஜிலேபி கொண்டை மீன் சுத்தமாக கழுவப்பட்டு, குழம்பில் கொதிப்பதற்கு காத்து இருந்தது. மசாலா அரைத்து, மகனுக்கு பிடிக்குமென்று புளியை சற்று தூக்கலாக விட்டு, குழம்பை கரைத்தவள், நல்லெண்ணெயில் தாளித்து, குழம்பை அடுப்பில் ஏற்றினாள். மீனுடன் சேர்ந்து குழம்பு மணமாக கொதிக்க ஆரம்பித்தது. அந்த பழைய கால ஓட்டு வீட்டை, ஒருமுறை நோட்டமிட்டாள். வீட்டுக்கு சொந்தக்காரர், தன்