கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 21, 2023

10 கதைகள் கிடைத்துள்ளன.

அந்த அஸ்தமனங்கள் இந்த அருணோதயங்கள்

 

 (1982 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வைகாசி மாதத்துக்குரிய இளம் வெப்பமான காற்று. ஒரு மாசப் பயிர் பசேலென்று எதிரே பரவியிருந்தது. காற்றில் மெலிதாய் அசைந்தது. வேலாயுதனுக்குப் பயிரைப் பார்க்கப் பார்க்கச் சந்தோஷமும், அதே நேரம் ஆதங்கமும் ஒரு சேர எழுந்தது. ‘என்ன சோக்கான வேளாண்மை….. இதை எப்பிடிக் கரையேத்தப் போறனே …. தண்ணியை ஒழுங்காகத் தருவான்களோ, அவங்களோட அடிபட்டு இடிபட்டு தண்ணி பாய்ச்சிப் பயிரை எப்பிடி ஒப்பேற்றப் போறன்.’


வழி மயக்கம்

 

 (1972 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அப்ப… நான் வரட்டுமா பிந்து… அவன் கைகளிரண்டையும் நாற்காலிப் பிடிகளில் ஊன்றிக் கொண்டான். கால்கள் செருப்பைத் துழாவின. கண்கள் அவளில் நிலைத்தன. வலது கையிலுள்ள வளையல்களை ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தவள் இவனைப் பார்த்தாள். கண்களை ஒருதரம் அழுந்த மூடித் திறந்து மெலிதாக இவனைப் பார்த்துச் சிரித்தாள். மீண்டும் குனிந்து முழங்கையில் ஊன்றியிருந்த வளையல்களைத் தளர விட்டாள். முடிஞ்சா…நாளைக்கும் வரேன்… இவன் கால், இடது


நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…

 

 என் பெட்ரூமில் யாரோ அல்லது எதுவோ இருக்கிறது என்று என் உள்மனம் சொல்லியது. என் intuitions பெரும்பாலும் சரியாகவே இருக்கும். எழுந்து லைட்டைப் போட்டுப் பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை. மீண்டும் லைட்டை அணைத்துவிட்டு படுத்ததும் அதே உள்ளுணர்வு. தூக்கம் வரவில்லை. என்னென்னவோ நினைவுகள். இன்றைக்கு என் வீட்டுக்குள் வந்த அந்த பரதேசி முதல் என் பள்ளிக்கால நண்பன் சங்கர் வரை சம்பந்தமில்லாமல் மனம் தறிகெட்டு ஓடியது. சங்கர்! அவனை நினைத்தாலே அவன் சொன்ன அந்த வார்த்தைகள் தானாக


ஒரு ஃபேஸ்புக் உரையாடல்

 

 (2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மீனா – ஹாய்! ரமேஷ் – ஹலோ மேடம்! மீனா – என்னங்க இது? அஃறிணைல கூப்பிடுறீங்க? ரமேஷ் – ஆமால்ல! மேடம்னா தமிழில் ஆடுன்னு அர்த்தம் வருது. சாரிங்க. மீனா – சாரியெல்லாம் பெரிய வார்த்தை. உங்க கவிதையெல்லாம் படிச்சுகிட்டு வர்றேன். வாய்ப்பே இல்லைங்க! ரொம்ப நல்லாருக்கு. அதுவும் இன்னைக்கு வந்த கவிதைய படிச்சிட்டு உங்களை பாராட்டலாம்னு தான் சாட்ல கூப்பிட்டேன்.


சமூகம்

 

 சுமார் நூறு பணியாளர்கள் பணி புரிந்து கொண்டிருந்த கம்பெனி அது. பத்து மணி இருக்கலாம். வேலை செய்து கொண்டிருந்த வேலப்பனை பர்சனல் டிபார்ட்மெண்டில் கூப்பிடுவதாக ஆள் வந்து சொல்லவும் பகீர் என்றது. எதற்கு கூப்பிடுகிறார்கள்? காலையில் உள்ளே நுழையும்போது காவலரிடம் சண்டை போட்டதாலா? அவனாகத்தான் நம்மை கிண்டலடித்தான், அதற்குத்தானே அவனிடம் வாக்குவாதம் செய்தோம்? போய் வத்தி வைத்து விட்டானா? கடவுளே ! இனி அங்கு போனால் அவ்வளவுதான், நான்கைந்து பேரை பார்க்க சொல்வார்கள். இது ஒரு மாதிரியான


தகப்பன் சாமி..!

 

 “நிம்மி…வேலையா இருக்கியாம்மா…?” “ஆமாம்மா…இன்னிக்கு ஒரு மீட்டிங்னு இவர் கார எடுத்துண்டு போயிட்டார்.நான் சின்னுவ ஸ்கூல்ல விட்டுட்டு ஆட்டோலதான் ஆஃபீஸ் போகணும்.. இன்னும் தட்டு முன்னாடி உக்காந்து சாப்பிடாம அடம் பண்றா.. ரொம்பவே லேட்டு…! என்னம்மா..? எதாவது முக்கியமா பேசணுமா?” “முக்கியம்தான்…ஆனா அவசரம் இல்ல..நீ வேணா ஆஃபீஸ் முடிஞ்சு திரும்பி வரச்ச ஒரு எட்டு வந்துட்டு போகமுடியுமா…?” “கண்டிப்பா வரேன்.சின்னுவையும் பள்ளிக்கூடத்திலேர்ந்து அழச்சுண்டு வரேன்.இவருக்கு இன்னிக்கு வெளில தான் டின்னர்…. அதுனால நான் சாப்பிட்டுட்டே போறேன்…” நிம்மிக்கு எதையும்


வீடு

 

 (2004 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எங்கு பார்த்தாலும் ஒரே இருட்டு இருட்டைக் கீறிக்கொண்டு கரும் பாம்புபோல் நீண்டு நெளிந்து கிடந்த தெருவை ‘வான்’ கடந்து கொண்டு இருந்தது. எப்ப யாழ்ப்பாணம் வரும்? பிள்ளைகள் நித்திரையை துரத்திவிட்டு மகிழ்வில் மூழ்கி இருந்தார்கள். அவர்களுக்கு முகம் தெரியாத பெரியம்மாவையும் பிள்ளைகளையும் பார்க்கும் மகிழவு எனக்கும்தான். ஒவ்வொரு வசந்தம் மலரும் பொழுது எனது மனமும் முகமும் சுருங்கிவிடும். அந்தப் பெயர் தெரியாத பூவுக்கு


ஆவி எழுத்தாளன் (எ) தமிழ் சினிமா கதாசிரியன்

 

 ‘ஆவி எழுத்தாளன்’ என்றதும் அமானுஷ்ய சக்திகளைப் பற்றி எழுதி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பவன் என்றுதான் பலரும் நினைக்கின்றனர். பிளாட்பாரக் கடைகளில் கிடைக்கும் ‘அமானுஷ்ய உலகம்’ புத்தகத்தை எழுதுபவன் சத்தியமாக நான் இல்லை. பதினைந்து ரூபாய் கொடுத்து அந்தப் புத்தகத்தை நானும் வாங்கிப் படித்திருக்கிறேன். ‘முப்பது நாட்களில் ஆங்கிலம் கற்பது எப்படி’ என்பது போல ‘முப்பது நாட்களில் சூனியம் வைப்பது எப்படி’ என்று அந்தப் புத்தகத்தில் நிறைய இருக்கும். வெள்ளைச்சட்டை போட்ட ஒரு கருப்பு உருவத்தின் படத்தைப்


மண்ணின் ரசிகன்

 

 இயற்கை தத்தெடுத்த அழகிய கிராமமது! பார்வைகளைப் பற்றிக் கொள்ளுமளவிற்குப் பசுமைகள் போர்த்திய கிராமம். விண்ணுக்கு ஏணிகளாய் பனை மரங்களும், தென்னை மரங்களும் சோப்பில் நட்டு வைத்த ஊசிபோல் அழகழகாய் காட்சியளிக்கின்றன. தினந்தோறும் கதிரவன் காலை எழுவதால்! அசதியில் உறங்கினாலும் உறங்கிவிடும். ஆனால், அதிகாலை சூரியனின் ஒளி பூமியைத் தொட்டு முகம் பார்க்கும் முன்‌னெழுந்து விவசாயத்திற்குச் சென்று விடுவது இந்த கிராமவாசிகளின் அன்றாட வழக்கங்களில் ஒன்று. ராஜாவும்,அன்பும் வகுப்புத் தோழர்கள் என்பதால், வண்டி பூட்டியது போல் எப்போதும் கை


மந்த்ரஸ்தாயி

 

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திடீரென இமைகளுள் ஒளியின் வெள்ளப் பெருக்கில் விழிப்பு வந்ததும், கூடமே ஒரு பெரிய புஷ்பமாக மிருதுவான வெளிச்சத்தில் மலர்ந்திருந்தது. சுவரோரமாய் கண்ணன் சைக்கிளுக்கு ‘ஸ்பாண்டு’ போட்டுக் கொண்டிருந் தான். அவன் வந்ததுகூடத் தெரியாமல், தூக்கம் அசத்தியிருக்கிறது. அவனே கதவைத் திறந்து கொண்டு வந்தது ஆச்சரிய மில்லை . அவனிடம் ஒரு சாவியிருந்தது. மறுசாவி மருமகளிடம். என்னைப் பார்த்துப் புன்னகை புரிகிறான். கண்ணன் ஒரு