கதையாசிரியர் தொகுப்பு: உஷா முத்துராமன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

சின்ன வயசும் பெரிய மனசும்!

 

 ஐந்தாம் வகுப்பு படிக்கும் தீபாவுக்கு அடுத்த வாரம் நடக்க இருக்கும் இங்கிலீஷ் பரீட்சைக்கு நோட்ஸ் வேண்டும். கேட்டு கேட்டுப் பார்த்தும் அவள் அம்மா வாங்கித் தரவேயில்லை. அதனாலேயே அவளுக்கு வீட்டுக்கு போகவே பிடிக்கவில்லை. ஏதோ ஒரு புத்தகம் அவள் கால்களுக்கு அடியில் கிடந்தைப் பார்த்தாள். ‘என்ன புத்தகம்? யாருடையது?’ என்று அதை எடுத்தாள். அது அவள் அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்த இங்கிலீஷ் நோட்ஸ். அந்த நோட்ஸ் அவள் வகுப்பில் படிக்கும் கலாவினுடையது. ‘ஆஹா, மறந்துட்டு போயிட்டா போல


மூன்று ரூபாய்ப் பாடம்!

 

 ‘‘அம்மா, போயிட்டு வரேன்…’’ ஸ்கூல் பையை முதுகில் மாட்டிக்கொண்டு தயாரானான் ரவி. ‘‘பஸ் பாஸ் வாங்கிக்கச் சொன்னால், கேட்காமல் தினமும் காசு கொடுத்தே டிக்கெட் வாங்கறியே” என்று புலம்பினார் அம்மா. ‘‘பாஸ் வாங்கினா குறிப்பிட்ட பஸ்ஸ§க்குக் காத்து நிக்கணும். இப்போ கிடைக்கிற பஸ்ஸிலே ஏறிப் போயிடலாம். சமயத்துல யார்கிட்டேயாவது லிஃப்ட் கேட்டுப் போனால் காசும் மிச்சம்’’ என்று தன் சாமர்த்தியத்தை சொன்னான் ரவி. ‘‘என்னமோ நீ ஒழுங்கா படிக்கணும். ஆமாம், ஏதோ நோட்டு வாங்கணும்னு சொன்னியே மறக்காம


திருடிய பணம்!

 

 அந்த அபார்ட்மென்டில் மொத்தம் 32 வீடுகள். அந்த வீடுகளில் இருக்கும் குழந்தைகள் கீழே உள்ள இடத்தில் விளையாடுவார்கள். அதிகம் சண்டை போடாமல் சமர்த்தாக விளையாடுவார்கள். அந்தக் குடும்பங்களிலுள்ள பெற்றோர்களில் சிலர், அம்மா அப்பா இருவருமே வேலைக்குச் செல்பவர்கள். சில அம்மாக்கள் வீடுகளில் இருந்தனர். அன்று ஞாயிற்றுக்கிழமை. மாலை மணி ஆறாகி விட்டதால் அங்கு விளையாடிக்கொண்டு இருந்த குழந்தைகள் தங்கள் வீட்டை நோக்கிச் சென்றார்கள். சுரேஷ், அந்த அபார்ட்மென்டில் இரண்டாவது மாடியில் மூன்றாம் நம்பர் வீட்டில் இருந்தான். அவன்