கதையாசிரியர் தொகுப்பு: முனைவர் செ.இராஜேஸ்வரி

9 கதைகள் கிடைத்துள்ளன.

பட்டணமா…

 

 இன்றைக்கு தவமணி அக்காவின் போக்கு சற்று விசித்திரமாகத்தான் தோன்றுகிறது. காலையில் பத்தரை மணிக்கே வந்து தேனப்பன் சார் முன் உட்கார்ந்தவர மணி பன்னிரெண்டு ஆகியும் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. இரண்டு மூன்று நாட்களாகவே இப்படித்தான் வந்து அமர்வதும் பின்பு சற்று நேரம் நிற்பதும் கொஞ்சம் சத்தமாக பேசுவதும் கொஞ்சம் ரகசியமாக பேசுவதும் என நாட்களை கடத்திக் கொண்டு இருக்கிறாள். அந்த அக்கா இப்போது வேலை எதுவும் செய்வதாக . வேலை எல்லாம் பெண்டிங் ஆக இருக்கிறது.


தன் பிள்ளை தானே கெடும்

 

 ரமணியை அனுப்பிவிட்டு வனரோஜா வீட்டிற்குள் வந்தாள். காபி குடித்துக் கொண்டே இருந்த தனபாலன் ‘’என்னவா ரகசியமா பேசிட்டு போகுது’’ என்று கேட்டான் ‘’ஆமாம் அவளுக்கு என்ன, அவள் மாமியார் ஆம்பள புள்ள பெறச் சொல்லுதாம். ஏற்கனவே ரெண்டு பொட்டப்புள்ள இருக்கு. எந்த சொத்து பத்து வச்சிருக்கா? ஆம்பள புள்ள பெத்து அதை கட்டி ஆளப் போகுது? சும்மா கிழவி பேச்சை கேட்டுக்கிட்டு நாளை தள்ளிக்கிட்டே போறாள். நமக்கென்ன? சொன்னால் கேட்டால் தானே? இனி அஞ்சாவது மாசம் வருவாள்.


ஒரு இங்கிலீஷ் கனவு ஒரு தமிழ் கனவு

 

 அக்கா என்ன செய்றீங்க; பாப்பா என்ன செய்றா; சத்தம் கேட்டு வேக வேகமாக ராதாமணி ஓடி வந்தாள். வாசலில் கிடந்த ஸ்க்ரீனை விலக்கி வெளியே வந்து அங்கு நின்றிருந்த தன் பக்கத்து வீட்டு பார்வதியை உள்ளே வா என்று சொல்லாமல் ‘உட்காருங்க என்ன விஷயம்’ என்று திண்ணையிலேயே அமர்த்தி விட்டாள். உள்ள பாப்பா படிச்சுட்டிருக்கா; நம்ம இங்கேயே உட்கார்ந்து பேசுவோம். அவளுக்கு நாளைக்கு மேத்ஸ் டெஸ்ட். கணக்கெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு. இன்னைக்கு தான் டியூஷன்-ல மிஸ்


காதல் கிளிகள்

 

 வீடு வெறும் வீடாக இருந்தது நாளை காலை அந்தமானுக்கு பயணம் மகள் சிந்தாமணி நிம்மதியாக தூங்குகிறாள் அவளுக்கு இது பிறந்த வீடு. எனக்கு நான் கட்டுன மாளிகை. பதினைஞ்சு பதினாறு வயசுல கட்டினது. மூக்கமாவுக்கு ஐம்பது வயது ஒருக்கும் அள்ளி முடிந்த கூந்தல் சிவந்த தேகம்; தோள்களில் கிளிப் பச்சை; ஜாக்கெட் போடும் பழக்கமில்லை ஆனால் இரண்டு முந்தானை மடித்து போட்டிருப்பாள் மூக்குக்கு அருகில் ஒரு கருப்பு மறு; சிங்கப்பல் சிரிப்பு; வசீகரமான கிராமத்து முகம்; சொந்த


கதீஜம்மாவின் சந்தோஷம்

 

 தங்கக்கா, என்ன செய்றீங்க என்று கேட்டபடி உள்ளே வந்தார் கதீஜாம்மா. வாங்க, எங்க சின்னவனைக் காணோம் என்றபடி ஒரு செம்பு தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தார். அவனை ஆசான்கிட்ட உட்கார்த்தி வச்சுட்டு வந்தேன். யாரோ உள்ள இருக்காங்க அவுங்க போனதும் வந்து கூப்பிடச் சொன்னேன். இந்த கழிச்சல்ல போவாள் நேத்து அவர்கிட்ட பாதிச் சம்பளத்தை பிடுங்கிட்டா கேட்டால் மூத்தவளுக்கு கல்யாணமாம் மொத்தமா தொகை வாங்கிட்டுத் தானே அவரை விட்டாள். இப்ப மாசாமாசம் வாங்குனா எப்படி நேத்து வந்தவர்கிட்ட


டீச்சர் வீடு

 

 டீச்சர் வீட்டுக்குள் நுழைந்தேன், உள்ளே ஹாலில் சார் போட்டோ பெரியதாக இருந்தது. கிறிஸ்தவர் என்பதால் படத்துக்கு மாலை, ஊதுபத்தி, விளக்கு என்று எதுவும் இல்லை. ‘வா லதா உன் மகன் எங்கே? அவன் வரலியா என்றார் டீச்சர். அவருக்கு வயது எழுபதை எட்டியிருக்கும்.. இன்னொரு ரிட்டயர்டு டீச்சரும் இவரும் மட்டும் இருக்கிறார்கள் இந்தாங்க டீச்சர் வாடகை என்று பணத்தை கொடுத்தேன் அம்மாவும் பொண்னும் கேக்கமாட்டீங்க. அவனுங்க ரெண்டு பேரும் அமெரிக்காவுல இருக்குறானுங்க. எனக்கு பென்ஷன் இருக்கு. இந்த


யாரும்மா மைனரு?

 

 முனியன் மஞ்சனத்தி மரத்தினடியில் நின்றிருந்தான். காலை மணி பத்து. தொண்டு நிறுவனத்துக்கு வேலைக்கு வருவோர் அவனை வினோதமாக பார்த்துக்கொண்டே அவசரமாக உள்ளே நுழைந்து பையோ பன்ச் வைத்தனர். அவன் கைலியை பின்பக்கம் எற்றி கட்டியபடி ஏதோ நினைப்பில் ஒரு குச்சியை மென்ற படி நின்றிருந்தான். யாரை பார்த்தும் அவன் கைலியை இறக்கிவிடவில்லை. வணக்கம் சொல்லவில்லை. அப்பா வந்து கூட்டிக்கொண்டு செல்வதாக சொன்னாரே இன்னும் வரவில்லையே என்ற கவலையோடு இருந்தான். டார்லிங்க் செல்வி வியர்க்க வியர்க்க நடந்து வந்தாள்.


அமராவதியின் காதல்

 

 ‘அண்ணே என் கோலத்தைப் பார்த்தீங்களா’ என்று அமராவதி வீட்டுக்குள் நுழைந்தாள். “என்னாச்சு பெரியவர் தவறிட்டாரோ. நமக்கு ஒண்ணும் தகவல் வரலையே” என்று பொன்னையா வாத்தியார் யோசித்தார். அமராவதியின் சத்தம் கேட்டு வாத்தியார் சம்சாரம் ஹாலுக்கு வந்தாள். அமராவதி தலையை தட்டி அள்ளி முடிந்தாள் சேலையை முழங்காலுக்கு மேல் திரைத்துக் கொண்டு காலை நீட்டியபடி சுவரில் சாய்ந்து உட்கார்ந்தாள் மேல் சேலயை தளர விட்டாள். முந்தானையால் முகத்தைத் துடைத்தாள் வியர்வை, ஆயாசம் என்ற பெயரில் ‘தன்னை’ முடிந்ததை வெளிப்படுத்தினாள்.


பிருந்தா ஹாஸ்டல்

 

 கலாவின் காதுக்குள் வந்து அவள் கணவன் ஏதோ சொல்லியதும் அவள் சீ என்று எரிந்து விழுந்தாள். அவள் முகத்தை பார்த்ததும் பாலுவுக்கு அருவருப்பாக போய்விட்டது. என்ன கேட்டுவிட்டோம் என்று இப்படி கத்தினாள். ‘’ராத்திரி முழுக்க பாலா பாலான்னு கொஞ்சுறா, காலைல வெலகி வெலகி ஓடுறா. என்ன ஆச்சு இவளுக்கு. இன்னைக்கி ராத்திரி வாடி ஒனக்கு இருக்கு தீபாவளி’’ என்று மனதிற்குள் கறுவிக்கொண்டே சாப்பிடாமல் ஆபிசுக்குப் போய்விட்டார். கலா பிருந்தாவை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு வந்து சோபாவில் அமர்ந்தாள். டிவியை