கதையாசிரியர் தொகுப்பு: ஸ்ரீ.தாமோதரன்

369 கதைகள் கிடைத்துள்ளன.

கடைசி கடிதம்

 

 இப்பொழுதெல்லாம் இங்கிருக்கும் எல்லோரின் பார்வையிலும் இவனை கண்டவுடன் பரிதாப உணர்வை வெளிப்படுத்துவதை காண்கிறான். பார்த்து விட்டு போகட்டும், இதுவரை முரடன், கொலைகாரன், முட்டாள், இப்படி எத்தனை எத்தனை பேச்சு பேசியிருக்கிறார்கள். இப்பொழுது மட்டும் என்ன பெரிய பரிதாபம்.! கோபம் கோபமாக வந்தது. பக்கத்தில் இருந்த சிறிய ஸ்டூலை எட்டி உதைத்தான். அருகில் இருந்தவன் முறைத்தான். இருந்தாலும் சட்டென ஒரு பரிதாப பார்வையுடன் அங்கிருந்து நகர்ந்து விட்டான். அவன் இவனை எதிர்த்திருந்தால் கூட கண்டு கொண்டிருக்கமாட்டான், இப்படி பரிதாபமாய்


எண்ணங்கள் வித்தியாசமாய்

 

 பதினைந்து வருடங்களுக்குள் மூன்று, நான்கு முறை நூலகத்தில் இருந்து எடுத்து வந்து வாசித்த நூல் தோப்பில் முஹம்மது மீரானின் “அஞ்சு வண்ணம் தெரு” என் மனதின் ஓரத்தில் உறுத்தலாய் இருக்கும் கதாபாத்திரம் “மம்மதும்மா” அவள் தன்னை காப்பாற்றி கொள்ள போடும் வேஷமான, ஆங்கார கோபம், அதன் வெளிப்பாடு, அதே நேரத்தில் அவளின் உள்ளுக்குள் வெளி கிளம்பும் ஆசைகள், நிறைவேற முடியாமல் போகும் அமுங்கி போகும் நிலை. (நாஞ்சில் நாட்டின் சிறு தெருவில் தறி நெசவு செய்யும் ஏழை


கெளரவம்

 

 எப்படி இருக்கிறாய் பார்வதி? கேட்டவளின் முகம் பார்த்த பார்வதி நல்லா இருக்கேன், புன்னகையுடன் சொன்னாள். நீங்க? எனக்கென்ன, ம்..புன்னகையை முயற்சி செய்து முகத்தில் வரவழைத்து, நல்லாத்தான் இருக்கேன், சமாளித்தாள் கமலா வாங்க, வெயிலுக்கு குளிர்பானம் ஏதாவது சாப்பிடலாம் அழைத்தாள் பார்வதி. வேண்டாம், வேண்டாம் எனக்கு சளி பிடிக்கும் உனக்கு தெரியுமே. பரவாயில்லை, சூடா காப்பியாவது குடிக்கலாம் மீண்டும் வற்புறுத்தினாள் பார்வதி. இல்லை பார்வதி பத்து நிமிசம்தான் நடந்தா வீடு வந்திடும், உன்னை எப்பவாவது பார்க்க முடியுமான்னு நினைச்சுக்குவேன்,


கால்வாய்

 

 முதலிலேயே சொல்லி விடுகிறேன், இந்த கதையெல்லாம் நம்பமுடியாது என்று. அதை பற்றி கவலை இல்லாமல் இந்த கதையை சொல்லத்தான் போகிறேன். வீட்டை விட்டு ஓடிப்போக தயாராகி விட்டான் கோபால். உடனே காதல் அது என்று நினைத்து கொள்ளாதீர்கள். அவனை பொறுத்தவரை ஒரு வேலை, அது கிடைக்கவே மாட்டேனென்று அடம் பிடிக்கிறது. இதற்கும் பொறியியல் பட்டதாரி இவன். இந்த நாட்டில் இஞ்சீனியர்களுக்கே தேவையில்லாமல் போய் விட்டதா? எத்தனை நாள் வீட்டில் உட்கார்ந்தே சாப்பிடுவது. யாரும் எதுவும் சொல்லவில்லை என்றாலும்


பணக்கட்டு

 

 மேசை ட்ராயரில் போட்டு வைத்த பணம் இவள் மனதை இம்சை படுத்தி கொண்டிருக்கிறது. ஒரு இலட்சம் ரூபாய் ஒரே கட்டாக இரண்டாயிரம் ரூபாய் தாளாக சுகமாய் படுத்து உறங்கி கொண்டிருக்கிறது. காலை பத்து மணி இருக்கலாம், இவள் அலுவலகத்தில் “கணிப்பொறியின்” முன்னால் உட்கார்ந்து எப்பொழுதோ வாங்கி போட்ட நிலத்தின் பழைய சரித்திரங்களை எடுத்து தொகுத்து வைத்து கொண்டிருந்தாள். இந்த நிலத்தின் உரிமையாளர் எங்கோ அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு இவர்கள் அலுவலகத்தில் அதை பார்த்து எவனாவது மறு விற்பனை


புது பொண்டாட்டி

 

 மாரியப்பனுக்கு தன் மனைவியை புரிந்து கொள்ளவே முடியவில்லை. என்ன சொன்னாலும் சண்டைக்கு வருகிறாள். அவன் அம்மாவையே எதிர்த்து பேசுகிறாள். அம்மாவின் வாய்க்கு அந்த தெருவே பயப்படும், அப்படிப்பட்ட அம்மா மருமகளை கண்டு விட்டாள் அமைதியாகி விடுவாள். அப்பன் அந்த பக்கமே வருவதில்லை. ஆட்டோ ஓட்டுவது இராத்திரி தள்ளாடி தள்ளாடி வந்து சத்தமில்லாமல் நல்ல பிள்ளையாய் வந்து படுத்து தூங்கி விடுவது. காலை ஏழு மணிக்குள் ஆட்டோவை எடுத்து பறந்து விடுவது இப்படி தப்பித்து கொள்கிறார். இவன்தான் ருக்மிணியிடம்


இறுக்கம்

 

 “இன்னைக்கு எங்க ஆபிஸ்ல” உற்சாகமாய் ஆரம்பித்த மைதிலி தன் கணவன் முகத்தை பார்த்தாள். அவன் செல்போனில் ஏதோ கவனமாக படித்து கொண்டிருந்தான். தன் வாயை இறுக்கி கொண்டாள். அந்த நிகழ்வு கொஞ்சம் வேடிக்கையானது, ஆனால் அதை இவனிடம் சொல்ல நினைத்தாலும் அவன் அதை கவனிக்காமல் இருந்ததால் இந்த முடிவுடன் தன்னை சமையலில் ஈடுபடுத்தி கொள்ள சமையல் அறைக்குள் நுழைந்து விட்டாள். அங்கே போனாலும் இராத்திரி என்ன செய்யறது? இந்த கேள்வி..! மீண்டும் அவனிடமே சென்று கேட்பதற்கும் தயக்கமாக


டாக்டருக்கு நேர்ந்த சிக்கல்

 

 “டாக்டர்” தயக்கமாய் எதிரில் நின்ற செவிலியரை நிமிர்ந்து பார்த்தவருக்கு அவள் நின்ற நிலைமையிலேயே புரிந்து விட்டது. எப்ப? இப்பத்தான் டாக்டர், உடனே உங்க கிட்டே ஓடி வந்தேன். சட்டென்று எழுந்த டாக்டர் “ஸ்டெத்துடன்” விரைந்தார், செவிலி அவர் பின்னால் ஓடினாள் அரை மணி நேரம் கழிந்திருந்தது. வேர்த்த முகத்துடன் அவரது அறையில் அமர்ந்தவருக்கு அடுத்து என்ன செய்யலாம்? யோசித்து யோசித்து தலை வலித்ததுதான் மிச்சம். “டாக்டர்” யாரோ இரண்டு பேர் உங்களை பார்க்கணும்னு வெளியே நிக்கறாங்க. வார்டுபாயின்


பழி உணர்ச்சி

 

 கிட்டத்தட்ட ஒரு மாதமாய் தேடிக்கொண்டிருந்த “மாறன்” இதோ என்னெதிரே நின்று கொண்டிருக்கிறான். ஆனால் அவன் முகத்தில் என்னை பார்த்தவுடன் வந்திருக்க வேண்டிய மரண பயத்தை பார்க்க முடியாதது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அவனை அணு அணுவாக சித்திரவதை செய்து கொல்வதற்காக சிறையிலிருந்து விடுதலையாகி இந்த ஒரு மாதமாய் அலைந்து கொண்டிருக்கிறேன். நான் அவனை எங்கு பார்த்தாலும் கொன்று விடுவேன் என்று தெரிந்தும் அவன் என்னை வியப்பாய் பார்த்து நின்று கொண்டிருப்பது எனக்கு ஏமாற்றத்தை தானே கொடுத்து கொண்டிருக்கும்.


சூழல், சூழல்

 

 இரவு பனிரெண்டுக்கு மேல் இருக்கலாம், அநேகமாக அந்த நகரம் உறக்கத்திற்கு போயிருந்தது. பாதையோரம், அல்லது உள்புறத்தில் இருக்கும் எல்லா கடைகளும் அடைக்கப்பட்டு இருட்டுக்குள் போயிருந்தன. அந்த நகரங்களுக்குள் நடுவில் சென்று கொண்டிருந்த பிரதான சாலைகளில் மட்டும் விளக்கு வெளிச்சங்கள் அழுது வடிந்து கொண்டிருந்தன. சர்..சர்..ரென கார்கள் அந்த சாலையில் வேகமாக சென்றும் கொண்டிருந்தன. மற்றபடி சரக்கு வாகனங்களோ, இரு சக்கர வாகனங்களின் வரத்துக்களோ, அந்த சாலையில் சத்தம் காட்டாமல் இருந்தன. நகரத்தை விட்டு சுமார் நான்கு கிலோ