கதையாசிரியர் தொகுப்பு: ரா.கி.ரங்கராஜன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

சாந்தி பிறந்த நாள்

 

 (1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நகப் பாலிஷை மெல்லிய ஸில்க் கைக்குட்டையினால் மேலோடு துடைத்துப் பள பளவென்று மெருகேற்றிக்கொண்டாள் சாந்தி. பத்து மடங்குக்குக் கர்வம் அவள் தலைக்கேறியது. இந்த விரல் நுனிகளைப் பிடித்துக்கொண்டு விட்டாரானால், பிரியும் நேரம் வருகிற வரையில், சங்கர் விடுவதே கிடையாது. “உங்களுக்கு என் மீது காதலா, என் விரல்கள் மீதா?” என்று சாந்தியே கேட்பதுண்டு. “விரல்களின் மீது தான்,” என்று தயங்காமல் சொல்வான் சங்கர்.


பல்லக்கு

 

 நோக்கும் திசையெல்லாம் கூப்பிய கரங்கள், கசகசவென வியர்வை வடித்தது ஜனக்கூட்டம். “அப்பனே! என்னை ஆண்டவனே!” என்ற பிரார்த்தனைகள். “என் கஷ்டத்தை நீக்கு! காணிக்கைச் செலுத்துகிறேன்” என்ற இறைஞ்சல்கள். “ஆகட்டும். ஆகட்டும்!” என்று துரிதப்படுத்தினார் தர்மகர்த்தா தேவரங்கம். நூறு நூறு கிண் கிணி மணிகள் ஆர்த்தன, சிசர்களின் சிறுநகை போல, கண்ணாடிப் பட்டைகளும், ஜிகினாப் பூக்களும் இனவெயிலின் ஒளிபட்டு, கண் கூச மின்னின. கம்பீரமாய் எழுந்தது. சௌரி ராஜப் பெருமாளின் ஸப்தஸ்தானப் பல்லக்கு. பெருமாளின் ஏழுர் விஐயம் முடிந்து


ஆசையின் எல்லை

 

 ராமநாதனுக்கு வெயிலோ, உடம்பை எரிக்கும் அந்த அனல் காற்றே ஒன்றும் விசேஷமாகப் படவில்லை. தூரத்தில், அந்தண்டைக் கோடியில், ‘கார்டு’டன் வம்பு அடித்துக் கொண்டிருந்த ஸ்டேஷன் மாஸ்டரையும், அவருடைய கோலத்தையும் பார்த்துத் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான். வண்டி முழுவதும் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தபோது, இவன் மட்டும் இன்பலாகிரியில் கிறங்கிக் கிடந்தான். போன வாரம்தான் சுவாமி மலைக்குப் போய்விட்டு வந்தான். அதற்குள்ளாக மறுபடியும் பிரயாணம்!… சுவாமிமலையை விட்டுப் புறப்படுவதற்கு முதல் நாள் இரவு. கையில் பால் டம்ளருடன் ருக்கு நின்றுகொண்டிருந்தாள். ராமநாதனுக்கும்