கதையாசிரியர் தொகுப்பு: சதீஷ்குமார்.ஜி.பி

1 கதை கிடைத்துள்ளன.

உதிர்ந்த சருகுகள்

 

  வழக்கமாக வீட்டில் கேட்கும் டிவி அல்லது ரேடியோவின் ஒலி இன்று காலை இல்லை. அண்ணனும் அண்ணியும் ஊரிலிருந்து வருவதாக மகிமாவிடமிருந்து தகவல். அம்மாவிடம் சொன்னபோது பெரிதாக சட்டை செய்யவில்லை. ‘எவன் வந்தா உனக்கென்ன, நீ போயி உன் சோலியை பாரு’ என கூறிவிட்டு பாத்திரங்களை கொண்டு கழுவப்போய்விட்டாள். இது எதிர்பார்த்ததுதான் என்றாலும், இவ்வளவு சுலபமாக புறந்தள்ளிவிட்டு வழக்கம்போல தன் வேலையை பார்க்க சென்றுவிடுவாள் என நினைக்கவில்லை. மகிமா மட்டும், குளித்து முடித்து, கொஞ்சம் புது டீ-ஷர்ட்டும்,