கதையாசிரியர் தொகுப்பு: இரஜகை நிலவன்

27 கதைகள் கிடைத்துள்ளன.

செக்கு மாடு

 

 அவசரமாக காபியைக் குடித்து விட்டு செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பிய போது “சாயங்காலம் வரும்போது கொஞ்சம் முட்டை வாங்கி வாருங்கள்” என்றாள் பத்மினி. ”சரி , என் செல்போன எடு” என்று கடிகாரத்தைதை மாட்டிக்கொண்டான் சூர்யா. செல்போனை சார்ஜரில் இருந்து கழற்றி சூர்யாவிடம் கொடுத்து விட்டு “ஆபிஸிலிருந்து இறங்கு போது போன் பண்ணுங்கள் கோயிலுக்குப் போய்விட்டு வரலாம்.” என்றாள் பத்மினி. “சரி” என்றவாறு கதவைத் திறந்த போது “இப்படித்தான் சரி என்று சொல்லி விட்டுப் போவீர்கள். அப்புறம்


காற்று வெளியிடை…

 

 சாகுலை கண்டிப்பாக நான் சென்னை விமான நிலையத்தில் எதிர் பார்க்கவில்லை. அவன் கடவுச்சீட்டு சரி பார்க்கும் வரிசையில் எனக்கு முன் மூன்றாவது ஆளாக நின்று கொண்டிருந்தான். ‘சத்தம் போட்டுக்கூப்பிடலாமா?’ என்று நினைத்தேன். அநாகரீகமாக இருக்கும் என்று உணர்ந்து கொண்டு பின்னால் நின்றவரிடம் “ ஒரு நிமிடம். என் நண்பரை பார்த்து விட்டு வருகிறேன்” என்றுசொல்லி விட்டு முன்னால் வந்து “என்ன சாகுல் எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். சாகுலும் என்னை எதிர்பார்க்கவில்லை என்பது அவர் முகத்தில் ஏற்பட்ட


மறையட்டும் தீயசக்தி மலரட்டும் தீபஒளி

 

 உகாண்டா விமான நிலையத்திற்குள் நுழையும் போது கணேசனுக்கு தலையை வலித்தது போல இருந்தது. நேராகப் போய் பிளாஸ்டிக் கப்பில் டீ வாங்கிக் கொண்டு பயணிகளுக்காக போட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான். செல்போன் ஒலிக்க, எடுத்துக் கேட்டான். “கணேசன் அம்மா பேசுகிறேன். நாளை மறுநாள் தீபாவளி எப்போது கிளம்புகிறாய்?” அம்மா தேவிகா கேட்டாள். “அம்மா நான் ஏர்போர்ட்டிற்கு வந்து விட்டேன். இங்கிருந்து துபாய் போய், அங்கிருந்து நாளை காலை மதுரை விமானத்தில் வருகிறேன். நீங்கள் கருங்குளம் பஸ் ஸ்டாண்டில்


முத்துமணிமாலை!

 

 இமய மலையில் இருந்து சாமியார் திரும்பி வந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக ஒரு பெரிய கூட்டம் அங்கே காத்துக் கொண்டிருந்தது. ஒரு நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கொண்டிருந்தனர். அவள் அதை பார்த்து மலைத்துப் போனதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை! இன்னும் வரிசையில் யாரும் வரும் முன், போய் நின்று விட வேண்டும் என எண்ணி, வரிசையில், கடைசியில் போய் நின்றாள். அந்த வரிசையில் நின்ற எல்லோரும், கையில் பழங்களும், பரிசுப்பொருட்களும் வைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த தேவி, கொஞ்சம் பணத்தை


கனத்துப் போன இதயங்கள்!

 

 அன்று இஃப்தார்விருந்திற்கான இந்தியன் அசோசியேசன்சிலிருந்து வந்திருந்த அழைப்பை, கொஞ்சம் சோம்பலாக இருந்த பிறகும் வெள்ளிக்கிழமையின் விடுமுறை உல்லாசமும் விட்டு விட்டுப் போக வேண்டுமா? என்று யோசிக்க வைத்தது. இருந்தாலும் இஸ்லாமிய நண்பர் பாட்ஷா அழைப்பை மறுக்க விரும்பாமல் எமிரேட்ஸ் இங்கிலிஷ் ஸ்பீக்கிங் ஸ்கூலுக்கு நண்பர்கள் ராம், அல்போன்ஸ் ஆகியோருடன் சென்றிருந்தேன். நல்ல வேளை எந்த வித டிராப்பிக்கும் இல்லாததால் 6.20க்கு போய்ச் சேர்ந்து விட்டோம். அன்று 6.22க்கு நோன்பு திறப்பதற்கு எல்லா நண்பர்களும் பெண்களும் காத்திருந்தார்கள். எல்லோரும்


நினைப்பதுவும் நடப்பதுவும்

 

 விமானத்தில் அமர்ந்ததும் “குளிர்கிறது” என்று சின்னப் பெண் நிதியாவை போர்வையால் போர்த்தி விட்டு பெரியவள் நிவேதிதாவிற்கு தண்ணீர் கொடுத்தபின் தொலைபேசியில் தொடர்புகொண்டு கணவன் சேகருடன் பேசினாள். ”இன்னும் சில நிமிடங்களில் விமானம் புறப்பட்டு விடும். இரண்டரை மணி நேரத்தில் நாங்கள் துபாய் ஏர்போர்ட் வந்து விடுவோம். டெர்மினல் ரெண்டுல பிளைட் வந்து இறங்கும்” என்றாள் கீதா. எதிர்முனையில் “நானும் அபுதாபியில் இருந்து கிளம்பி விட்டேன். நீங்கள் இறங்குமுன் நான் அங்கே ஏர்ப்போர்ட்டுக்கு வந்து விடுவேன்.” என்றான் சேகர்.


இரண்டாவது வசந்தம்!?

 

 ஷார்ஜா, மீன் காட்சி சாலையில் அலுவலகத் தோழிகளோடு மீன்களைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்த போது தன் கண்ணாடியில் பிரதிபலித்த உருவத்தைப் பார்த்து ஒருமுறை அதிர்ந்துபோனாள் ராணி. திரும்பிப் பார்த்த போது, அதே பசுத்தோல் போர்த்திய புலியாக புன் சிரிப்புடன் செல்வம் நின்று கொண்டிருந்தார். இவர் எப்போது துபாய்க்கு வந்தார்? போன முறை ஊருக்குப் போயிருந்த போது கூட இவர் கண்ணிலே விழிக்கக் கூடாது என்றுதானே சொந்த ஊருக்குக் கூட போகாமல் அஞ்சுகிராமத்தில் அக்கா புவனா வீட்டிலேயே தங்கி


நம்பிக்கை ஒளி…

 

 சாகுலை கண்டிப்பாக நான் சென்னை விமான நிலையத்தில் எதிர் பார்க்கவில்லை. அவன் கடவுச்சீட்டு சரி பார்க்கும் வரிசையில் எனக்கு முன் மூன்றாவது ஆளாக நின்று கொண்டிருந்தான். ‘சத்தம் போட்டுக்கூப்பிடலாமா?’ என்று நினைத்தேன். அநாகரீகமாக இருக்கும் என்று உணர்ந்து கொண்டு பின்னால் நின்றவரிடம் “ஒரு நிமிடம். என் நண்பரை பார்த்து விட்டு வருகிறேன்” என்றுசொல்லி விட்டு முன்னால் வந்து” என்ன சாகுல் எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். சாகுலும் என்னை எதிர்பார்க்கவில்லை என்பது அவர் முகத்தில் ஏற்பட்ட ஆச்சரிய


அம்மா என்றால் அன்பு

 

 சித்ரா ஸ்கூல் முடிந்து வந்ததும், முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். அம்மா மல்லிகா எவ்வளவு சொல்லியும் காபி, டிபன் சாப்பிடாமல், தன் தந்தை திரவியம் வருவதற்காகக் காத்திருந்தாள். “சித்ரா, எந்த விஷயமாக இருந்தாலுகம் அப்பா வந்த பிறகு பேசலாம். ஒழுங்கா அடை சாப்பிட்டு விட்டு டியூசனுக்கு போ” என்றாள் அம்மா மல்லிகா. “எனக்கு அடையும் வேண்டாம். காபியும் வேண்டாம். நான் டியூசனுக்கும் போக மாட்டேன்.” “ஏன்” “உனக்கு எதுவுமே தெரிய மாட்டேன் என்கிறது. நான் எல்லாவற்றிற்கும் டியூசன்


மனதின் மடல்

 

 என்ன செய்வதென்றே தெரியவில்லை ரேவதிக்கு. வாசித்த கடிதத்தை கைப்பையினுள் வைத்து விட்டு, தன் கையிலே மருதாணி போட்டு விட்டு கைகழுவச் சென்ற தோழிகள் வரக் காத்திருந்தாள். விடிந்தால் அமெரிக்க மாப்பிள்ளை ஆனந்திற்கும் அவளுக்கும் நிச்சயதார்த்தம்…. இந்த நேரத்தில் ஆறு மாதமாக காணாமற்போன விஜய் திடீரென்று வந்து … எத்தனையோ சொல்லிவிட்டு… கையிலே ”என்னை… என் நிலைமையை விவரித்திருக்கிறேன். அலை பேசி… நண்பர்கள்… ஏன் தொடர்பு கொள்ளவில்லை என்று கோபப்படுவாய்… அந்த அளவிற்கு கோபப்படாவிட்டால் நீ… நீயாக இருக்க