கதையாசிரியர் தொகுப்பு: சுதாகர் ஜெயராமன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

அக்கினிப்பிரவேசம்

 

 சென்னை சென்ரல் ரயில் நிலையம். ராமுசார், என்றழைக்கப்படும் ராமச்சந்திரன் சென்னைக்கு சில முறை வந்திருந்தாலும், சென்ரல் ரயில்வே ஸ்டேசனுக்கு முதன்முதலாய் வருகிறார். எண்ணிலாப் பேருக்கு அடையாளம் தந்த சிங்காரச் சென்னையின் கம்பீர அடையாளமாய் நிமர்ந்து நிற்கும் சென்ட்ரல் இரயில் நிலையக் கட்டிடத்தை பார்க்கும், ரசிக்கும், பிரம்மிக்கும் மனநிலையில் இல்லை அவர். ஸ்டேசனில் நுழைந்ததும் – இதுவரை அவர் பார்த்து உணர்ந்திருந்த, இதோ இப்போது வந்து இறங்கிய டவுன்பஸ் வரை அவருடன் தொடர்பில் இருந்த தமிழகத்திற்கு மிக அந்நியமான


அன்பெனும் மாமழை

 

 விடிய கருக்கல்ல எந்திரிச்சு சாப்பிடாம கொள்ளாம சந்தைக்கு வெள்ளாடு விற்க வந்த சோனைமுத்தையாவிற்கு, காலையில் இருந்து பச்சத்தண்ணி கூட வாயில் படாத வறட்சியால் எச்சில் முழுங்குவது கூட சிரமமாகி நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டி மயக்கத்தை உண்டு பண்ணியது. உக்கிரமாய்ப் பெய்த வெய்யிலால் வியர்த்து உப்பு காய்ந்த உடம்பில் அரிப்பின் ரணத்தை உண்டாக்கியது . அகோரமாய்ப் பசித்து கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. உடலெங்கும் சூடு கண்டு எரிந்தது. மயக்கம் வரும்போலிந்தது. ஆனால், இன்னும் ஓட்டியாந்த ஆடு போனியாகவில்லை.


இப்பவும் நிலா தொடர்கிறது!

 

 எனக்கெல்லாம்… இத்தனை சிறு வயதில் இவ்வளவு யோசனைகள் இருந்ததில்லை. பரீட்சைக்கு படிக்கிறான்களோ இல்லையோ விடுமுறையில் என்ன செய்வது என்பது பற்றி ஏகப்பட்ட யோசனைகள் என் பசங்களுக்கு. அவனுங்களுக்கு சினிமா போவது பீச்சுக்குப் போவது ஷhப்பிங்மால் போவது எல்லாம் சாதாரண வார விடுமுறை கொண்டாட்டங்களாம். கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவது செல்போனில் கேம்ஸ் விளையாடுவது என்பதெல்லாம் அன்றாட விசயங்களாம். சப்பை மேட்டராம். சத்தியமா ‘சப்பை மேட்டர்’ என்ற வார்த்தை மூன்றாவது படிக்கும் இரண்டாவது வாலு சொன்னது. எப்போதும் எதிர்எதிர் கருத்துக்களுடன்