கதையாசிரியர் தொகுப்பு: ஸ்ரீ

5 கதைகள் கிடைத்துள்ளன.

யதார்த்தம்

 

 நந்தினி B.Sc. கம்ப்யூட்டர் ஸயின்ஸ் முடித்து விட்டு அடுத்ததாக M.Sc. பண்ணலாமா, MBA பண்ணலாமா இல்லையென்றால் வேலைக்கு முயற்சி செய்யலாமா என்று யோசித்து முடிவுக்கு வர முடியாமல் குழம்பிக் கொண்டிருந்தாள். “நந்தினிம்மா, உனக்கு போஸ்ட்!” தபால்காரரின் குரலில் மகிழ்ச்சியும் பரபரப்பும் இருந்தன. ஆச்சரியத்தோடு வாசலுக்கு விரைந்தாள். அந்த தபால்காரர் பல வருடங்களாக அந்த ஏரியாவிலேயே இருப்பவர். நந்தினியை பள்ளியில் சேர்க்கும் பருவத்துக்கு முன்பிருந்தே பார்த்துக் கொண்டிருப்பவர். அந்த ஏரியாவில் இருக்கும் ஒவ்வொருவர் வீட்டைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்பவர்,


தமிழ்

 

 ஈசிச் சேரில் சாய்ந்தவாறு பேப்பர் படிப்பது போலப் பாவனை பண்ணிக்கொண்டிருந்தார் தமிழரசு. ஆனால் அவர் கவனமெல்லாம் தூணுக்குப் பின் பதுங்கிக் கொண்டு தன் பெரிய கருவண்டுக் கண்களில் பயமும் ஆர்வமும் கலந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அச்சிறு பெண்ணின் மேல்தான் இருந்தது. நெல்மணி மூக்கும், கொழுவிய கன்னங்களும், துறுதுறுவென்ற கண்களும், பட்டுப்பாவடை உடுத்திய பாங்கும் அவருக்குத் தன் மகளே சிறு வயதுத் தோற்றத்தில் கண்ணெதிரே வந்து விட்டாற்போல் பிரமை ஏற்பட்டது. சோகை வெளுப்பாக இல்லாமல் சற்றே ரோஜா


பைத்தியம்!

 

 அன்று முதல் வகுப்புக் கிடையாது என்பதால் சற்றே தாமதமாகக் கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் பவித்ரா. வாசலில் கேட் உலுக்கப்படும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தவள் முகம் சுழித்தாள். “அம்மா! உன்னோட வளர்ப்புப் பையன் வந்தாச்சு, போய்ப் படையல் வை!” என்று எரிச்சலோடு மொழிந்தாள். உள்ளே இருந்து தட்டில் சாதம், குழம்பு எல்லாம் எடுத்து வந்த வேதம், “என்னடி பேச்சு இது, எவ்வளவு சொன்னாலும் மாத்திக்க மாட்டியா? அவன் உன்னை என்ன பண்ணான்? ஏதோ அவன் பாட்டுக்கு வந்து


கறுப்பினழகு!

 

 ஸ்வேதா அலுவலகத்துக்குக் கிளம்பும் அவசரத்திலிருந்தாள். “அம்மா என் டிபன் பாக்ஸ் எங்கே? டைமாகுதும்மா!” என்று குரல் கொடுத்தாள். “ஏண்டீ கத்தறே! நேத்து நான் படிச்சிப் படிச்சி சொன்னதெல்லாம் மறந்து போச்சா? இன்னிக்கு உன்னைப் பெண் பார்க்க வராங்க! அரை நாள் லீவு போட்டுட்டு வந்திடுன்னு நேத்தே சொன்னேனில்லை?” என்று சற்றே கோபமானார் வனஜா, ஸ்வேதாவின் அம்மா! பதிலுக்கு ஸ்வேதாவும் கோபமாக ‘நானும்தான் நேத்தே இதுல எனக்கு இஷ்டம் இல்லை, என்னால வர முடியாதுன்னு சொல்லிட்டேனே! இப்ப கல்யாணத்துக்கு


முரண்

 

 “ஸ்… ஆ ஆ!” மெலிதாய் கூவினாள் கவிதா. ஹாலில் முகச்சவரம் செய்துகொண்டிருந்த ரமேஷ், அவளது குரல் கேட்டு பதட்டமாய்ச் சமையலறைக்கு விரைந்தான். “என்ன ஆச்சு கவி?!” “ஒண்ணுமில்லேப்பா, இட்லி குக்கர் திறக்கும்போது ஆவி கைல பட்டுடுச்சி” விரலை ஊதியவாறே சொன்னாள் கவிதா. “ஹையோ, என்னம்மா இது, பார்த்து வேலை செய்யக் கூடாதா? இனிமே நீ சமையல் வேலையெல்லாம் செய்ய வேண்டாம். பேசாம ஒரு ஆளைப் போட்டுக்கலாம். முதல்ல கையைக் காட்டு, பர்னால் போட்டு விடறேன். சாயந்திரம் சரியாகலைன்னா