கதையாசிரியர் தொகுப்பு: கோகிலா மகேந்திரன்

13 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு சதுரம் இருளாக ஒரு சதுரம் ஒளியேறும்

 

 “கனகராயர் இவளுடைய பயம் என்ற ஓவியத்தை பரிசுக்குத் தெரிவு செய்யாமல் இருந்திருக்கலாம்…..” “அவள் பரிசளிப்பு விழாவுக்குப் போகாமல் இருந்திருக்கலாம்….” “பயம் என்ற ஓவியமே தன்னால் முதற் பரிசுக்குரியதாய்த் தேர்ந் தெடுக்கப்பட்டது என்பதைக் கனகராயர் மேடையில் கூறாமலாவது இருந்திருக்கலாம்…” “விழா முடிவதற்கு முன்னர் எழுந்து இவள் வீட்டுக்கு வந்திருக்கலாம்” “விழா அமைப்பாளர், போட்டி நடத்திய ஓவியக் களத்தின் தலைவர், செயலர், பொருளர் எல்லாமாகிய அவர் திருவாளர் ரகுராமன் விழா முடிந்தபின் வெளியில் வைத்துத் திருவாய் மலர்ந்தருளிய குத்தல் மொழிகளைக்


ஆழ்ந்த அநுதாபங்கள்

 

 இருளும் ஒளியும் மரணத்தைத் தழுவி விட்ட…… பின் அந்தி நேரம் : முற்றத்தில் நிலா வெளிச்சத்தில் தெரிகிற – பவள மல்லிகை மரத்தில் நிலைத்த பார்வையுடன் நின்றேன். பவளமல்லிகை பூத்திருந்ததை நான் காணவில்லை! ஒரு வகை நிர்க்கதியான உணர்ச்சியால் என் கண்கள் நீர் சுரந்தன. ஆனால் நான் அழவில்லை! பக்கத்து வீட்டுப் பரமசாமி அண்ணை பேப்பர் வாங்க வந்தார். எனது நிலா முற்றம் நாய்க் குரைப்பின் அச்சத்தில் உறைந்திருந்து, இப்போது தான் சற்று விடுபட்டிருக்கிறது. “பேப்பரைக் கெதியாத்


ஒரு பிணத்தின் தரிசனம்

 

 அந்த ஊரின் வழக்க மேளங்கள் நிரையாய் அமர்ந்து திருவாசகம் படிக்கின்றன. அப்போதுதான் உள்ளே நுழைந்த நடராசர், தனது சயிக்கிளடிக்கு விரைந்தோடிச் சயிக்கிளில் தொங்கிக் கொண்டிருந்த கிழிந்த ஓலைப்பாயினுள் துளாவி, இராவணன் பூச்சிகள் நன்றாகப் படித்துக் கிழித்திருந்த திருவாசகப் புத்தகம் ஒன்றினைத் தடவி எடுத்துக்கொண்டு வந்து அந்த வரிசையில் தானும் அமர்ந்து கொண்டு கண்ணாடிக்கூட்டைத் திறந்து, பொருத்தெல்லாம் அழுக்கேறிப் போயிருந்த மூக்குக் கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொள்கிறார். பிறகென்ன? ஒரே காட்டுக் கூச்சலும் கழுதைக் கத்தலும் தான்! மருமகள் பூரணமும்


பலியாடுகள்

 

 விடிந்தால் சனிக்கிழமை! வைகாசி மாதத்தின் கடைசிச் சனிக் கிழமை. தெளிந்த வானத்தில் போட்டி போட்டுக் கொண்டு மின்னும் நட் சத்திரங்கள். ஒரு முன்னிரவுப் பொழுது! நேரம் எட்டு மணி இருக்கலாம். அந்த நேரத்தில் பொதுவாக அமைதியில் மூழ்கிக் கிடக்கும் அந்த ஊர்த்தெரு இன்று வழமைக்கு மீறிய தொரு புதுமையாய்.. பெரிய அமளிப்பட்டது. சைக்கிள் மணிகளின் கிணிங்… கிணிங்.. ஒலிகளும் ஓடிச் செல் லும் சிறுவர்களின் கூச்சலும், காலடிச் சத்தங்களும் மெதுவாக நடந்து செல்வோர் கதைக்கும் ஓசையும்…! “இந்த


அர்த்தமற்ற ஒரு வாழ்வு அர்த்தமுள்ளதாகிறது

 

 உயிருக்காகத் தானே உணவு! உணவுக்காக வேலை! நாலு பேர் பார்க்குமிடத்திற்கு வேலைக்கு வர வேண்டி இருப்பதற்காய் ஏதோ சில அலங்காரங்கள். அலங்காரம் செய்து கொள்கிறாள் என்பதனால் நயீமாவுக்கு வாழ்க்கை மிகவும் இனிப்பாயிருக்கிறது என்று யாரும் எண்ணிவிட முடியாது. பிடிக்கிறது என்பதனால்தான் எல்லாரும் வாழ் கிறார்களா? ஏதோ வாழ வேண்டுமே என்பதற்காகவும் பலர் வாழத்தான் செய்கிறார்கள். ஓடும் குதிரைக்கு முன்னால் “கரட்” கட்டித் தொங்கவிடும் கதை போல வாழ்க்கைப் பாதையின் தொலைவில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இருந்தால் தான்


மனதையே கழுவி

 

 சூரியன் சீறிச் சினந்தபடி சிவப்புப் பந்தென எழுந்துவிட்ட ஒரு காலைப் பொழுதில், நான் அந்தப் பிரபல கல்லுாரியின் அதிபர் அறையினுள் (குளிர்ந்த வாடைபோல் – மன்னிக்கவும் – தவறுதான்) நுழைந்தேன். எனக்கும் கொஞ்சம் மதிப்பு இருக்கத் தான் செய்தது. அதிபர் கதிரையைக் காட்டிச் சிரிக்க நானும் பெருமையுடன் அமர்ந்து கொண்டேன். “என்ன விஷயம்?” “இல்லை… ஒரு சின்ன விஷயந்தான் …. மாவிட்டபுரத்திலை இருந்து இடம் பெயர்ந்த ஒரு பிள்ளை ….. சரியான கஷ்டம். நான் ஒரு கவுன்சிலர்


வாழ்வும் ஒரு வலைப் பந்தாட்டம்

 

 முந்தின விடுமுறை நாளின் மகிழ்வை நினைத்து ஏங்கி, மறு நாள் பிறந்தும் விடுபடாத துயரில் மூழ்க்கிக் கிடக்கும் இந்தத் திங்கட்கிழமை, பல சமயங்களில் இவளுக்கு வெகு துயரம் மிக்கதாய் இருந்திருக்கிறது. அவற்றைப் போலில்லாமல் இந்தத் திங்கட்கிழமை மாலை உற்சாகம் நிறைந்ததாய்த் தொடங்கியிருப்பது போலவே, உற்சாகம் நிறைந்து முடியவேண்டும் என்று அவள் மனதார விரும்பினாள். இறைவனை வேண்டினாள். இலை துளிர் காலத்து அறிகுறியாய் மைதானத்தைச் சுற்றியிருந்த பெரு மரங்கள் யாவும் பூத்து நிறைந்திருந்தன. அருகே நிற்பவர்களை மணம் வீசி


மனிதம் மதலைகளிடம் மட்டும்

 

 மரணத்தின் நிறமாய்க் கனக்கும் இருளில் சொட்டச் சொட்ட நனைந்தவாறு படுத்துக் கிடந்தது அந்தக் கட்டை. தன்மீது தனக்கே ஏற்பட்டிருக்கும் சுயவெறுப்பைச் சுய மோகமாய் மாற்ற எவ்வளவோ முயன்றும் முடியாமற் போன தோல்வி மரணக் களையாய் முகத்தில் அப்பிக் கிடந்தது. எவ்வளவோ கஷ்டப்பட்டுப் படிப்பித்து நல்ல நிலைக்கு ஆளாக்கிய பிள்ளைகள் ஒருவரும் அருகில் இல்லாததால் தகிக்கும் தனிமை, தனிமையால் ஏற்பட்ட மூன்று வருடகால வெறுமை, வெறுமையில் வெதும்பி வந்த சுயவெறுப்பு ! காற்று, வெயில், மழை, குளிர் எதுவும்


உள்ளத்தால் அடிமைகள்

 

 என்னை நிழலாகத் தொடர்ந்த துன்பத்தை விரட்டியடிப்பதற் காகவோ, மறப்பதற்காகவோ அல்லது மடியச் செய்து வெற்றி கொள் வதற்காகவோ தான் இத்தனை வருடமும் நான் உற்சாகத்துடன் போராடி வந்தேன். அந்த நிழல் போராட்டம் தோற்றுப் போய்விட்டது. நிழல் போராட்டங்கள் எப்போதுமே தோல்வியில் தான் முடிவடைந்திருக் கின்றன. அந்தச் சரித்திர நிர்ப்பந்தத்திற்கு விதிவிலக்காக முயன்று தோற்றுப்போய் இப்போது நானும் அந்தச் சரித்திர அடிமைகளில் ஒருத்தியாய்… இல்லை ! அப்படி ஆகிவிடக் கூடாது! மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று எமது பெண்கள்


ஒலி

 

 ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ கண்ணன் சொன்னானாம்! தேவர்களுக்கு ஆறு மாதம் பகற்காலம், ஆறுமாதம் இராக்காலமாம்!- தேவர்களுக்கென்ன, துருவ வாசிகளுக்கும் அப்படித்தான்! வெள்ளிக்கோளில் இவர் போய் வசித்தால், இவருக்கும் நூற்றுப்பன்னிரண்டு நாள் இரவும், நூற்றுப்பன்னிரண்டு நாள் பகலுமாய் இருக்கும். இதென்ன பெரிய அதிசயமே? – அந்த ஆறுமாத இரவு முடிந்து விடியும் காலம் மார்கழியாம்! அதனால் அது சிறப்பான மாதமாம்! கண்ணனுக்கு மனச்சந்தோஷமாக இருக்கட்டும்! இவருக்கு இந்த மாதம் முழுதுமே ‘ரென்சனாக’ இருந்தது! உயரமும் அமைதியான கண்களுமாய்