கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 1, 2023

10 கதைகள் கிடைத்துள்ளன.

கோமரம்

 

 (ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தலைவர் போல, நடிகர் போல, வாரிசுகள்தான் அடுத்துப் பொறுப்பேற்பார்கள் கோமரம், சந்நதம், அல்லது ஆராசனைக்கும். நாம் குறித்த மூன்று சொற் களும் அர்த்தமாகவில்லை என்றால் மலையாளச் சொல் வெளிச்சப்பாடும் புரியாது உமக்கு. எனவே சாமியாடுதல் என்று சொல்லிச் சென்றுவிடலாம். வலிய சிவ வைணவத் திருத்தலங்களிலும் சாமியின் கருவறையில் நின்று முப்போதும் திருமேனி தீண்டு வதற்கும் பாரம்பரிய உரிமைகள் உண்டு எனச் செவிப் பட்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் சாமி


தேங்காய்ச் சில்லு

 

 மணி எனக்கு குரு மாதிரி. அவனிடமிருந்து முறையாக எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும்அவனைப் பார்த்து எப்பவும் எனக்கொரு குட்டி பிரமிப்பு உண்டு. பள்ளி முடிந்தவுடன் நான் அவனுடன் ஊர் சுற்றக் கிளம்பி விடுவேன். தாத்தாவுக்கு நான் அவனுடன் பழகுவது பிடிக்காது. “பொறுக்கிப் பசங்களோட என்ன ஊர் சுத்தறது? அவனோட உன்னப் பார்த்தேன், தொலைச்சுப்புடுவேன் படுவா” என்பார். ஆனாலும் தாத்தா இல்லாத சமயம் பார்த்து, தப்பித்து எப்படியும் அவனோடு இணைந்து விடுவேன். இருவரும் சேர்ந்து ஆற்றங்கரைக்குப் போய் நாவல் பழங்கள்


மாற்றம் மட்டுமே மாறாதது!

 

 அய்யனாரு கோயிலை ஒட்டிய நிழல் மரத்திற்கு அடியில், கூட்டமாய்ப் பெண்கள் அமர்ந்திருந்தார்கள். நேரம் இன்னும் இருப்பதால் முனைக் கடையில் பாடிய எம்.ஜி.ஆர். பாடலை ரசித்துக் கொண்டு அமர்ந்து இருந்தார்கள். ஆனாலும் மனசுக்குள் எப்போதும் கும்மியடிக்கும் உற்சாகம் இல்லை. அய்யாவுச் செட்டி வயலில் இன்று கடைசி அறுப்பு. கடைசி அறுப்பு என்றால், இந்த வருடத்தின் கடைசி அறுப்பு மட்டுமில்லை, காலம் காலமாய் பலபேரின் வயிறு நிறைத்த, வளம் கொழித்த அந்த பூமிக்கே அது கடைசி அறுப்பு. நினைக்கும் போதே


அவள் ஒரு அதிசயப் பிறவி

 

 (திரு.பொன் குலேந்திரன் அவர்கள் அக்டோபர் 11, 2023 அன்று இயற்கை எய்தினார். அவரது குடும்பத்தினருக்கு சிறுகதைகள்.காம் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்!) “சதீஷ் உனக்கு என்னுடன் வேலை செய்யும் அஞ்சலியைத் தெரியுமா”? “தெரியாதே .நான் ஒருபோதும் அவளை சந்திக்க வில்லை .ஏன் அப்படி என்ன விசேஷம் அவளிடம் ரவி “? “உனக்கு தெரியுமா அவள் நாளை நடக்கப் போவதை இன்றே சொல்லிவிடுவாரள் ஏதோ அவ்வளவு தீர்க்க தரிசனக்காரி அவள்”. “என்ன தீர்க்கதரிசனம் என்று சொல்லு ரவி”.


மீனாட்சிப் பாட்டி

 

 (1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திடுக்கிட்ட மீனாட்சிப் பாட்டிக்கு அடிவயிற்றில் குபீரென்றது. ஏற்கெனவே பதைபதைத்துப் போயிருந்த அவள் இதயம் கழன்று விடுவதைப் போல் கடகடவென்று ஆடியது. கொட்டும் மழையில் எதிர்பார்த்துக் காத்திருந்த அவளின் ஒரே உறவான லெட்சுமி இப்படி வந்து சேரும் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை. லெட்சுமி சற்றுத் தொலைவில் வரும்போதே ஓடிப்போய் அதைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். “ஏண்டா கண்ணு, எந்தப் பாவி இப்படி ஒங்காலை அடிச்சி


உணர்வோடு விளையாடும் பறவைகள்

 

 நான் வீடு தேடிக்கொண்டிருந்தேன். வீடு அம்சமாக அமைந்திருந்தால் அது என் பணியிடத்துக்குத் தொலைவில் இருந்தது. அணுக்கத்திலும் பொதுப்போக்குவரத்து வசதிகளுடனும் அமைந்தவை சுமாரானவையாகவும், மின்னுயர்த்தி வசதிகள் இல்லாமல் 3வது / 4வது தளத்திலும் இருந்தன. கடைசியில் ஹன்னா என்றொரு பெண் தன்வீட்டை பகுதியாக வாடகைக்குக் கொடுக்கவிருப்பதை Zweitehand பத்திரிகையின் சிறு விளம்பரப்பகுதியில் பார்த்தேன். அநேகமாக வீட்டைப் பகுதியாக வாடகைக்குக் கொடுப்பவர்கள் ஆண்களுக்குத் தரமாட்டார்கள். இருந்தும் ஒரு வெளிநாட்டு ஆணுக்கும் வாடகைக்குத்தருவியாவென்று ஹன்னாவுக்கு மின்னஞ்சல் எழுதினேன். அன்றே பதில் வந்தது.


நேரம் தப்பிய பொழுது

 

 வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருக்கும் நான், என்னை இறக்கிவிட்டுச்சென்ற பஸ்ஸின் பின்விளக்கின் வெளிச்சம் மறையும் மட்டும் சற்று நேரம் பஸ் தரிப்பிடத்தில் நின்றுகொண்டிருக்கிறேன் நினைவுகள் வீட்டை நோக்கி வட்டமிட்டுகொண்டிருக்கிறது. நள்ளிரவை அண்மித்த நேரம் நான் மட்டும் அந்த பஸ் தரிப்பிடத்தில்….வீட்டுக்கு எப்படி போவது,வாப்பாவிடமிடமிருந்து என்ன சொல்லி தப்பிப்பது, உம்மா என்ன சொல்வாவோ “உனக்கு எத்தனை நாளைக்குத்தான் சொல்வது வாப்பாவைப்பற்றி தெரியும்தானே நேரகாலத்தோடு வீட்டுக்கு வரத்தெரியாதா..” கோபித்துக்கொண்டு நிற்பாவே எப்படி சமாளிக்கலாம்.. மனம் குழம்பியவனாக நடந்துகொண்டிருக்கிறேன். இரவு ஒன்பது மணிக்குள்


கள்ளும் முள்ளும்!

 

 சங்கரனுக்கு சிறுவயதில் கிராமத்தில் வாழ்ந்தபோது நடந்த சம்பவங்கள் நிழலாடின. அன்று நடந்த விசயங்கள் இன்று தவறாகப்பட்டன. ‘சிறுவயதில் இயல்பாக திட்டமிடாமல் செய்த செயல்களை தவறு என்பதா? அறியாமை என்பதா?’ என நினைத்தவர் சரியான வார்த்தை பிடிபடாமல் தவித்தார். இன்று அறுபது வயதில் நகரத்தில் சகல வசதிகளுடன் பூரணமாக வாழ்ந்தாலும், கிராமத்தில் உள்ள பூர்வீக குல தெய்வ கோவில் விழா பல வருடங்கள் கடந்து நடப்பதால் அங்கு வந்தவருக்கு ஊரே அடையாளம் தெரியவில்லை. கிராமம்‌,நகரம் என பிரித்துப்பார்க்க முடியவில்லை.


அவள் சொர்க்கம்

 

 (1967ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) செல்லம்மாளுக்கு என்ன வயசு இருக்கும் என்பது அந்த ஊரில் யாருக்குமே தெரியாது. அவள் வயசு அவளுக்கே தெரியாது. அதைத் தெளிவுபடுத்தக்கூடிய ஜாதகமோ, குறிப்போ எதுவுமே கிடையாது. அவள் வயசை திட்டமாகத் தெரிந்து வைத்திருந்தவர் ஒருவர்தான்; அவளுடைய அண்ணாச்சி பரமசிவம் பிள்ளை. ஆனால், அந்த விஷயத்தை எதிலும் குறித்து வைக்காமலே அவர் இறந்து போய்விட்டார். அவர் போயும் வருஷங்கள் பல ஆகிவிட்டன. அந்தக் கணக்கும்


தேடியது, வக்கீலை!

 

 (1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “பலமான அடி! இரத்தம் வெள்ளம் போல வந்தது. டாக்டர் ! கொஞ்சம் அவசரமாக வரவேண்டும் . ஆசாமி மூர்சசையாகிவிட்டிருக்கிறான்.” “ஏன் சார்? அடிபட்டது யாருக்கு?” “இந்த ஆளுக்கு ” “இல்லை, நீ போடுகிற கூச்சலைப் பார்த்தால், உனக்குத் தான் அடிப்பட்டது, அதனாலே தான் இப்படி அலறுகிறாய் என்று நினைத்தேன். இங்கிதமே தெரிவதில்லை. வேறு எந்த இடத்திலே வேண்டுமானாலும் கூவலாம் கொக்கரிக்கலாம், டாக்டர்கள் இருக்கும்