கதையாசிரியர் தொகுப்பு: களந்தை பீர்முகம்மது

3 கதைகள் கிடைத்துள்ளன.

மழை

 

 மழையின் வருகையை அறிவிக்கவே இல்லை இந்த வெயில். பல ஊர்களைச் சுற்றியவன்; பல வெயில்களைப் பார்த்தவன். ஆனால் தாகம் புரட்டியது. ஒருநாளும் இல்லாத விசேசமாய் அவன் செவ்விளநீர் சீவச்சொல்லி அருந்தினான். தொண்டையின் கீழே உடம்பு முழுவதும் நனைந்து குளிர்ச்சி கொண்டது போல் இருந்தது. பத்து ரூபாய் விலை அதிகமெனத் தோன்றவில்லை அவனுக்கு. தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு வெயிலில் இருந்து தப்பித்துக் கொண்டிருந்தான் நஜீம். அவனுக்குரிய உரிமை இன்னும் நீடிப்பதான நினைப்பிற்குள் இருந்தபடியே தஸ்லீமாவின் வீட்டிற்குள் தடதடவென


பெயரில்லாத நாடகம்

 

 “நான் உங்கள மட்டும்தான் கூப்பிடறேன். வேறயாருட்டயும் சொல்லிட்டிருக்க வேண்டாம்”. இன்னும் வியப்பு தணியாத விழிகளுடன் அவன் மற்றுமொரு முறையாகத் தலையசைத்தான். நிர்மலாவின் கூரிய பார்வையில் அவன் ஆணிவைத்து அறைந்ததுபோல் உறைந்திருந்தான். இவனின் எண்ண ஓட்டங்களை உணர்ந்தறியும் முயற்சியாக சற்று மௌனம் நிலவவிட்டாள். “நீங்க ஒன்பது மணிக்கெல்லாம் வந்துட்டீங்கன்னா ரொம்ப நல்லது. அதுக்கு முன்னாலேயே வந்துட்டாக்கூட நல்லதுதான்”. ரஷ“த் சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தான். இந்தப் பத்து நிமிட நேரத்துக்குள் அவள் மூன்றாவது முறையாகவும் இதைச் சொன்னாள். ஆயினும் அவனுக்கு


கனவுகள்

 

 அந்தக் கடற்கரையோரத்து நடுத்தர நகரம் . மேற்கே தன்னுடைய பகலைத் தொலைத்துக் கொண்டிருந்தது. கதிரவனின் ஒன்றிரண்டு கிரணங்கள் மட்டுமே இன்னும் விடைபெற்றுப் போக வேண்டியிருந்தது. ஊரின் வடக்கு ஒதுக்குப்புறத்தில் நாலைந்து பேர் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் திட்டமெல்லாம் இன்னும் சிறிது நேரத்தில் திருப்திகரமாக நிறைவு பெற்ற விடும் (என்ற தன்னம்பிக்கை). ஆள் அரவம் எதிர்பார்த்தபடி அதிகமாய் இல்லையென்பதாலும் எப்போதாவது மட்டுமே சில வாகனங்கள் அடுத்துள்ள சாலையில் சென்று கொண்டிருந்தன என்பதாலும் அவர்கள் மகிழ்ச்சியுடனேயே