கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 15, 2023

10 கதைகள் கிடைத்துள்ளன.

குமாரமூர்த்தி மாமா

 

 குமார மூர்த்தி மாமா மோசம்போட்டர்.. . அப்பா செத்தபோது வாணியிண்ட அடி வயிற்றில இருந்து உருண்டு திரண்டு துன்பக்கனல் ஒண்டு நெஞ்சை எரிச்சுப்ப் புறப்பட்டுதே அதுபோல … …பெருமூச்சால் அந்த கனலினை அணைக்க முயற்சி செய்தும் அவளால ஏலாமல் போட்டுது. அவளிண்ட . மனம் நிலைகொள்ளாம தத்தளித்துக் கொண்டிருந்துச்சுது. மாமாவுக்கு கன்னங்கரிய கருங்காலி போல உறுதியான உடல்வாகு. தீட்சன்னியமான ஊடுருவிநோக்கிற கண்கள் …..ஒரு புன்னகையால தன்னுள்ளே ஒளிந்திருக்கிற ஆன்மாவிண்ட தூய்மையை வெளிப்படுத்துற அபூர்வ மனிசரில அவர் ஒருத்தர்..


நுளம்பு

 

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மச்சக்காளையால் நிம்மதியாகத் தூங்கமுடியவில்லை. ஆணியில் தொங்கிய சட்டைப்பையிலிருந்து கண்ணை எடுக்கவும் முடியவில்லை. “என்னடா இது, பெரிய ரோதனயா இல்ல போச்சு? என்று மனசெல்லாம் சலித்துக்கொண்டாலும், கனத்துப்போன மனசு தூக்கத்தை மட்டும் அண்டவிடவில்லை. புரண்டு புரண்டு படுத்தும் கண் இமைகள் அமட்டவில்லை. பரோட்டாக்கடை வைத்திருக்கும் தாவூதுக்கு மச்சக்காளை வெறும் வாடிக்கையாளன் மட்டுமல்ல. இவன் தலையைக்கண்டாலே, “வா, மச்சான்! டீ சொல்லட்டா?” என்று வாஞ்சையோடு அருகே


குப்பண்ணா உணவகம் (மெஸ்)

 

 (2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மாம்பலம் பேருந்து நிலையத்தை ஒட்டி இருக்கும் காவலர் குடியிருப்பின் ஓரம், கொஞ்ச தூரம் நடந்தீர்களானால், உங்களுக்கு குப்பண்ணா உணவுக்கூடத்தைப் பார்க்காமல் இருக்கமுடியாது. இப்போது பெரும் வியாபார மையமாக மாறி விட்ட தியாகராய நகரின் பூர்வாசிரமப் பெயர்தான் மாம்பலம். அன்று காலாற கைவீசி நடக்கலாம். இன்று அடிப்பிரதட்சணம் கூட பிரம்மப்பிரயத்தனம்தான். குப்பண்ணா தன் பனிரெண்டாவது வயதில் மதராசுக்கு, அதாவது இன்றைய சென்னைக்கு வந்தார். இதில்


தாத்தாவின் கதை

 

 பள்ளிக்கூட மணி அடிப்பதற்கு முன்பே, தாத்தாவின் வருகையை எதிர்பார்த்து வாசலை பார்க்கத் தொடங்கிவிடுவது வழக்கம். கேட்டை கடந்து வெளியே வரும்போது, இரண்டு பொட்டலங்களுடன் தாத்தா காத்திருப்பார். எப்போது வந்திருப்பார் என்று நாங்கள் கேட்டதே இல்லை. ஆனால் எல்லா நாட்களிலும் தாத்தா எங்களுக்கு முன் வந்து காத்திருப்பார். தினமும் காலை வீட்டிலிருந்து பள்ளியில் எம்.ஐ.டியில் டிராப் செய்வது அப்பாவின் வேலை என்றால், பள்ளியிலிருந்து எங்களை வீட்டுக்கு அழைத்து செல்வது தாத்தாவின் வேலை. சைக்கிள் கேரியரில் முதலில் என்னை தூக்கி


நிழல்களும் நிஜங்களும்

 

 திடீரென விழிப்பு வர எழுந்த கமலாத்தா முன் அறையில் இன்னும் டி.வி ஓடிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்தாள். ஆயா வாயை பிளந்து கொண்டு டி.வியை பார்த்தவாறே தூங்கிக்கொண்டிருந்தாள். சட்டென கோபம் வர டி.வியை அணைத்தாள். அணைத்த சத்தத்தில் விழித்துக்கொண்ட ஆயா “அட டி.வியைத்தான் கொஞ்சம் போடேன், பார்த்துக்கிட்டிருக்கேனுல்ல” “ஆயா” இப்ப மணி என்ன தெரியுமா? வாயை மூடிகிட்டு தூங்கு, காரமாய் சொல்லி விட்டு போய் படுத்துக்கொண்டாள். இனி தூக்கம் வந்த மாதிரிதான். இந்த ஆத்தா ஏன்


கொரோனா காலம்!

 

 கிராமத்திலிருந்த நான்கு ஏக்கர் நஞ்சை நிலத்தையும் ஐம்பது லட்சத்துக்கு விற்று, ஐம்பது லட்சம் வங்கியில் கடன் பெற்று, சி.என்.சி மிஷின் வாங்கி,கோவையில் வாடகை கட்டிடம் மாதம் ஐம்பதாயிரம் வாடகையில் எடுத்து தொழில் ஆரம்பித்தான் ரகுவரன். வீடும் வாடகை தான். “உன்கிட்ட வேலைக்கு வரும் ஆட்களே காரில் போகும்போது, நீ கார் வாங்காமல் இருந்தால் எப்படி?” என நண்பர்கள் உசுப்ப, “தள்ளுபடி இருக்கு சார் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க ” என கார் டீலரிடமிருந்து அடிக்கடி அழைப்பும்


ததும்பி வழியும் உயிர்

 

 (2017ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜொகூர் பாருவில் உள்ள ‘லார்க்கின்’ பேருந்து நிலையம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. நுழைவுச் சீட்டு விற்பனையாளர்களின் முகவர்கள் “கோலாலம்பூர்… கோலாலம்பூர்…! பத்து பஹாட், பத்து பஹாட்…!” என்று கூவி பயணிகளின் கவனத்தை ஈர்க்க முயற்சித்துக் கொண்டிருந்தனர். இடையிடையே சிங்கப்பூருக்குத் திரும்புகிறவர் களுக்கு, அவர்கள் குடியிருப்புப் பேட்டைவரை அனுப்பும் வாடகை வண்டிகளுக்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தனர் வேறு ஒரு குழுவினர். வழியனுப்ப வந்த உறவினர் கூட்டம்,


செல்ஃபி

 

 ராசு கையில் இறுக்கமாகப் பிடித்திருந்த கத்தியின் முனை என் குரல்வளையை லேசாக முத்தமிட்டது. உள்ளுக்குள் பயம் பூதாகார ரூபம் எடுத்தது. செல்லம்மாள் எப்படி இருக்கிறாள் என்று கண்ணை மட்டும் வலப்பக்கம் திருப்பிப் பார்த்தேன். அவள் பயத்தில் பாதி செத்திருந்தாள். வழிந்த பய வியர்வையைத் தடுக்க முடியாமல் இமைகள் தோற்றன. நான் ராசுவைப் பார்த்தேன். “ஜமீனு சொன்னபோதே கேட்டுருக்கோணம். இப்ப பயத்துல அரைல களியரதால என்ன ப்ரோசனம்?” கரகரத்தான் ராசு. “இவன்ட என்னத்தடி கண்ட? ஜமீனு ஒனக்காக என்னவெல்லாம்


தேன் கூடுகளின் வீடு

 

 இதாலோ கால்வினோ – ஆங்கிலம் வழி மொழியாக்கம்: ஜெகதீஷ் குமார் தொலைதூரத்தில் இருந்து பார்ப்பது சிரமமாக இருக்கிறது. ஏற்கனவே ஒருவர் இங்கு வந்திருந்தாலும் கூட திரும்பிச் செல்லும் வழியை நினைவுபடுத்திக் கொள்ள முடியாது. ஒருகாலத்தில் இங்கு ஒரு பாதை இருந்தது. ஆனால் நான் அதன் மீது முட்புதர்களை வளர்த்து அதன் தடயங்களை அழித்து விட்டேன். நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் என் வீடு அமைந்திருக்கிறது.. புதர்களின் கரையில் மறைந்து, பள்ளத்தாக்கிலிருந்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு அடுக்குக் கட்டிடமாக,


கபிலர்

 

 இராமநாதபுரம் மாவட்டத்தில் பிரான் மலை என்று ஒரு மலை இருக்கிறது. அதற்கு மிகப் பழைய காலத்தில் பறம்பு மலை என்று பேர். அங்கே பாரி என்ற சிற்றரசன் ஒருவன் ஆண்டு வந்தான். இப்போது ஜமீன்தார் என்று சொல்லுகிறோமே, அவர்களைப் போன்றவர்களே அந்தச் சிற்றரசர்கள். அந்தக் காலத்தில் அவர்களை வேளிர் என்று சொல்வார்கள். மகள் என்றால் ஒருத்தியையும் மகளிர் என்றால் பலரையும் குறிக்கும் என்று உங்களுக்குத் தெரியும் அல்லவா? அந்த மாதிரியான பெயர்களே வேள், வேளிர் என்பவையும். பாரி