கதையாசிரியர் தொகுப்பு: அ.முத்துலிங்கம்

107 கதைகள் கிடைத்துள்ளன.

கடைசிக் கைங்கரியம்

 

 (1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அழடா, தணிகாசலம், அழு . மரம் போல மௌனம் சாதிக்காதே! உன் சொந்த மனைவி, உன் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுப்பதற்கு உன் தாலிக்கயிற்றுக்குத் தலையை நீட்டிய உத்தமி, இதோ பிணமாய்க் கிடக்கிறாள். நீயானால் மௌனமாக , தூரத்து வெளியைப் பார்த்துக்கொண்டிருக்கிறாயே . உன் நெஞ்சம் என்ன இரும்பாகிவிட்டதா! அல்லது நீதான் என்ன சிலையாகி விட்டாயா? மனிதப் புழுவே, நீ அழு; அழத்தான் வேண்டும்.


ஐவேசு

 

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இத்துடன் மூன்றாவது தடவையாக நான் என் சாமான் களைத் தொலைத்துவிட்டேன். சிலகாலமாகத் தொலைப் பதில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தேன். இதுவே இப்ப நல்ல பழக்கத்தில் வந்துவிட்டது. பயிற்சி பலன் தரும். ஒரு சுற்றுலா பயணிக்கான தகுதிகள் எனக்கு இல்லை. அடிக்கடி சாமான்களைத் தொலைத்தபடி இருப்பேன். இதன் காரணமாக என்னைச் சுற்றி இருப்பவர்கள் மிக சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நான் மறந்துபோய் வைக்கும் அல்லது எடுத்துவிடும்


பக்குவம்

 

 (1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘கந்தர் மடம் செல்லம்மா’ ‘அஞ்சு’ ‘கொட்டடி ஆச்சிப்பிள்ளை’ ‘அஞ்சு’ ‘கொக்குவில் வேலாயுதபிள்ளை’ ‘பத்து’ ‘சீட்டுக்கார நல்லாம்பிப் பகுதி’ ‘இருபது’ ‘சங்கக்கடை ரத்தினம் பெண் சாதி’ ஒவ்வொருவரும் வந்து காசைப் போடப்போட, சின்னத்துரை கொப்பியில் எழுதிக் கொண்டே வந்தார். துரையப்பாதான் பெயர்களை உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தார். குனிந்த தலை நிமிராமல், வெற்றிலைச் கருளைக் கையிலே ஏந்தியபடி நின்று கொண்டிருந்தாள் அவள். அந்தச் சின்னஞ்சிறு உடலை


அம்மாவின் பாவாடை

 

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அம்மாவிடம் ஒரு பாவாடை இருந்தது. எப்பொழுது பார்த்தாலும் அம்மா அதற்கு நாடா போட்டபடியே இருப்பாள். அது சாதாரண நாடா அல்ல; அம்மா அசட்டையாக இருக்கும் சமயங்களில் பாவாடையின் மடிப்புக்குள் போய் ஒளிந்து கொள்ளும். அம்மா நாடாவை இன்னொரு முறை போடுவாள். இது அடிக்கடி நடக்கவே நாடாவில் நெடுகலும் இருக்கிறமாதிரி ஒரு மடிப்பு ஊசியை அம்மா குத்திவைத்துவிட்டாள். நாடா உள்ளே போவதும், அம்மா மடிப்பு


அக்கா

 

 (1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாங்கள் எல்லாரும் வெறும் மேலுடன் தான் திரிவோம். எனக்கு வெறும் மேல் தான் பிடிக்கும்; சட்டையே பிடிக்கா. கிட்ணனும் அப்பிடித்தான்; வெறும் மேலுடன் தான் வருவான். ஆனா கிட்ணன் நல்ல வடிவு. வெள்ளையாய் இருப்பான். ஏனெண்டால் அவன் அம்மா நல்ல வெள்ளை; என்னுடைய அம்மா கூட நல்ல வெள்ளை; அப்பாதான் கறுப்பு; பல்லுத் தீட்டுவமே கரி. அதைப் போல. சனிக்கிழமை அம்மா முழுக


விருந்தாளி

 

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) – கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்து கொண்டிருங்கள். – நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம். – மாட்டு மந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான். – வெண்ணெயையும், பாலையும், சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து


நாளை

 

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த இடம் ஒரு கணத்தில் பரபரப்பானது. ‘எழுந்திரு, எழுந்திரு’ என்று பெரியவன் அவசரப்படுத்தினான். சின்னவன் சோர்வினால் கண்ணயர்ந்திருந்தான். அவனை அந்நிலையில் விட்டுவிட்டு ஓடுவதற்கு இவனுக்கு மனம் வரவில்லை . தூரத்தில் வாகனங்கள் நிரையாக வருவதாக ஒருவன் கூறினான். அவனை நெருக்கி விசாரித்தபோது அவன் தான் பார்க்கவில்லையென்றும் இன்னொருத்தன்தான் பார்த்ததாகவும் சொன்னான். சனங்கள் ஒவ்வொரு திசையில் ஓட ஆரம்பித்தனர். தங்களுக்கு வேண்டிய மாதிரி வரிசை


உன்மத்தராயிருந்தோம்

 

 (1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “கச்சி ஏகம்பனே” முறையிட்டுக் கொள்வதற்கு அவரைவிட வேறு யார் இவ்வளவு மலிவாக அகப்படுவார்கள். ஏகம்பனாம், ஏகம்பன்! பக்திப் பெருக்கினால் கண்ணீர் சொரிய , மயிர்க் கால்கள் எல்லாம் குத்திட்டு நிற்க, உணர்ச்சி வசப்பட்டு ‘கச்சி ஏகம்பனே’ என்று அழைக்க வேண்டிய அந்தப் புனிதமான திருப்பெயரை, உம்முடைய ஊத்தை வாயால் வெறுமனே உச்சரிக்கிறீரா? சீ, துப்பிவிடும், அந்த வார்த்தையை. பிரலாபிக்கிறாராம்! துக்கப்படுகிறாராம்! கள்ளிப் புதரும்,


கோடை மழை

 

 (1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இலங்கை ‘மாப்பை’ விரித்து வைத்து அதன் தலையில் யாழ்ப்பாணத்தைத் தேடிப் பிடித்து, சிகப்பு பென்சிலால் பெரியதொரு புள்ளி போட்டு, ‘இதுதான் கொக்குவில்’ என்று பீற்றிக் கொள்ளும் அளவிற்கு பிரபலமானதல்ல எங்கள் ஊர். ஆனால் ‘மாப்பை’ எடுத்துப் பிரிக்காமல், பென்சிலால் கோடு இழுக்காமல், இது கொக்குவில் என்று சொல்லாமல் விடக்கூடிய அளவிற்குப் பிரபலமற்றது என்றும் கூறிவிட முடியாது. அர்த்தநாரிசுவரர் போன்று, கொக்குவில், ஒரு பக்கத்திலும்


வெள்ளிக்கிழமை இரவுகள்

 

 ஏதோ காட்டு மிருகம் துரத்தியதுபோல் உள்ளே பாய்ந்தாள் ஆகவி. பன்னிரண்டு வயதுதான் இருக்கும். அவளுடன் வந்த காற்றும் உள்ளே நுழைந்தது. புத்தகப் பையைத் தூக்கி கீழே எறிந்தாள். எதையோ தேடுவதுபோல் இரண்டு பக்கங்களும் பார்த்தாள். பத்து மைல் தூரம் ஓடிவந்ததுபோல் அவளுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. தாயார், சமையல் அறையில் இருந்து மெள்ள எட்டிப்பார்த்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இப்படி நடப்பதுதான். பள்ளியில் இருந்து வரும்போதே சண்டைபிடிக்க ஏதாவது காரணத்துடன் வருவாள். அகிலா, தனியாக கனடாவுக்கு அகதியாக வந்தபோது