கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.பொன்னுத்துரை

3 கதைகள் கிடைத்துள்ளன.

O, பூஜ்யமல்ல!

 

 (1998 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “கிலைட்டி ஸியாமினி சோமநாதர்!” வழக்காளியச் சத்தம் போட்டுக் கூப்பிடுறாங்க. வாய்க்குள்ள நுழயாட்டிலும் என்ன வடிவான பேர்? என்னப் பாக்கியமண்டு தான் கூப்பிடுறாங்க. சிவபாக்கியம், தவபாக்கியம், தங்கப்பாக்கியம் எண்டு வடிவாக் கூப்பிட்டா நல்லா இருக்குமே எண்டு சிலவேள நான் யோசிப்பன். எனக்கு வடிவான பேர் புடிக்கும். அதுக்கென்ன செய்யிற? மாங்காட்டுப் பள்ளிக்குடத்தில் ரெண்டு எழுத்துப் படிக்க அப்பன் அனுப்பேக்குள்ள, வெத்திலத் தோட்டத்துக்குள்ள கள்ளமொளிச்ச எனக்கு


ஆண்மை 13

 

 ஈச்சேரில் விழுந்த” சந்திர சேகரம் கோழி உறக்கத்தை வாலாயம் பண்ணி, அதனைச் சுகிக்கின்றார். யாழ்தேவியிலே பகற் பயணம். அகோர வெயில். காட்டு வெக்கை. இத்தனைக்கும் மேலாகச் சிவசம்பு சாப்பாட்டுக்கடைச் சோற்றைக் கொறித்தார். மனசார ஒரு மயக்கம். சாய்வு நாற்காலியிற் தாம் தூங்குவதான நினைப்பே அவருக்கு யாரோ உடம்பைப் பிடித்து விட்டது போன்ற சுகத்தைக் கொடுத்தது. வள்ளிசாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அவருடைய குடும்பம் தாயடி வீட்டிலே வந்திருக்கிறது. பெத்துப் பெருகிய குடும்பம். அவருடைய மனைவி சரஸ்வதி மூலம்


அணி

 

 ஏன் வாசலிலேயே நின்று விட்டீர்கள்? உள்ளுக்கு வாருங்கோ ஐயா. இன்றைக்கு நான் மட்டுந்தான் வேலை செய்யிறன். தம்பிக்கு ‘சேவ்’. கையோடு முடிந்துவிடும். இளமட்டங்கள் சில, எங்களுடைய ‘ஸ்டை’ யிலைப் பார்த்துத்தான் உள்ளே வாருங்கள். ‘ஜங்கி ஸ்ட’லில் என்று சொல்லி, நாக்கு வழிப்பதைப் போல அந்தரப்பட்டு, ஒரு படத்தையும் அதில் நடிக்கும் நடிகனின் பெயரையும் சொல்லி, அப்படியே வெட்டிவிடும்படி சில விறுதாக்கள் கேட்கும். அதை ஏன் ஐயா கேட்கிறீர்கள்? மயிரைக் கவனமாகச் சீவி விடவில்லை என்பதைக் காட்டிக்கொள்ள, ஒரு