கதையாசிரியர் தொகுப்பு: ஜெகன்ஜி

9 கதைகள் கிடைத்துள்ளன.

சீருடை

 

 மூட்டையை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு வரும் துரும்பனை கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தார் காயலான் கடைக்காரர். கடைக்குள் வந்து தோளில் இருந்த சிறிய மூட்டையை மெதுவாக கீழே இறக்கினான். பிறகு மூட்டைக்குள் இருந்து ஒவ்வொரு காலி மது பாட்டிலையும் எடுத்து வெளியில் வைத்தான். கடைக்காரர் பார்வையாலேயே கணக்கு போட்டார், மொத்தம் பத்து பாட்டில்கள். டேய்.. இந்தா முப்பது ரூபா.. காயலான் கடைக்காரர் நீட்டிய பணத்தை வாங்காமல் அமைதியாக அவர் முகத்தையே பார்த்து கொண்டு நின்றான் துரும்பன்.


அஞ்சுவது அறிவார் தொழில்

 

 என்னங்க.. இங்க வந்து பாருங்க..காலையிலேயே ஆரம்பிச்சிட்டாங்க.. புனிதாவின் அழைப்பை கேட்டு கிச்சன் போர்ட்டிகோவிற்கு வந்தான் சரவணன். என்ன ஆச்சு..என்று கேட்டவனிடம், பக்கத்திலிருந்த காலி மனையை நோக்கி கை காட்டினாள். அங்கு மூன்று மதுப்பிரியர்கள் மது அருந்தி கொண்டு இருந்தனர். நீங்க ஆம்பளைங்க எல்லாம் சேர்ந்து போய் கேட்க கூடாதா.. என்று கேட்ட புனிதாவிடம் ஒன்றும் சொல்லாமல் போய் சோபாவில் அமர்ந்தான். இவர்கள் வசிக்கும் தெருவில் ஒரு பெரிய காலி மனை இருக்கிறது. அதை சுற்றி ‘ப’ வரிசையில்


நேர்த்திக்கடன்

 

 அர்ச்சனா வாசலில் செருப்பை கழற்றி விட்டு வீட்டிற்குள் நுழைந்தாள். மணி சரியாக இரவு எட்டு பத்து. அர்ச்சனாவின் பதினோரு வயது மகன் நகுல், கணவன் நிரஞ்சன் மற்றும் மாமியார் ஹாலில் அமர்ந்திருந்தனர். நிரஞ்சன் போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். உஷ்..அப்பாடா..என்று சோபாவில் அமர்ந்தவளை பார்த்து “என்ன டிபன் செய்ய போற?”..என்றான் நகுல். இரு ஏதாவது செய்யறேன்..என்றவளிடம் “ஏதாவது டேஸ்டா செய்” என்றான் சத்தமாக. நான் தான் வெங்காயம் தக்காளி எல்லாம் ஏற்கனவே வெட்டி வச்சிட்டேனே.. குருமா வைக்க


தெளிந்த மனம்

 

 சொன்னா கேளுடா..இன்னும் மூணு நாளைக்கு அம்மாகிட்ட தூங்க கூடாது. ஏன் பாட்டி? என்றான் நகுல். “அவ தீட்டுடா..கிட்ட போனா உன் துணியிலயும் ஒட்டிக்கும். நீ வேற வீடு பூரா அலைவ..” என்றாள் குணவதி. “அவ்ளோ தான” என்று மட மடவென்று ஆடைகளை களைந்து விட்டு ஓடிச் சென்று அம்மாவை கட்டி பிடித்து கொண்டான் நகுல். சிரித்து கொண்டே தன் நான்கு வயது மகனை வாஞ்சையாய் அணைத்தாள் சுபா. சுகவனம்! அந்த வட்டாரத்தில் ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரிந்த வீடு.


பொறுப்பு

 

 என்னங்க..ஞாயித்து கிழமை காஞ்சிபுரம் போயிட்டு வரலாங்க.. இல்லமா..அன்னைக்கு நானும் எங்க குரூப் மெம்பர்ஸும் மெரினா பீச்ச சுத்தம் செய்ய போறோம். நிறைய வி.ஐ.பி எல்லாம் வர்றாங்க.. ப்ளீஸ்’ங்க..இப்படி பொறுப்பில்லாம பேசறீங்களே.. இங்க பாரு சுசி, நீ தான் கொஞ்சம் கூட சமூக பொறுப்பில்லாம பேசற..ரொம்ப கஷ்டப்பட்டு பெர்மிஷன் வாங்கி இருக்கோம். அங்க வந்து பாரு, எவ்ளோ பேரு இன்டெரெஸ்ட்டா கலந்துக்குறாங்கன்னு.. உங்ககிட்ட பேச முடியாது. நீங்க பீச்சுக்கே போங்க, நானும் ப்ரவீனும் அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்துடறோம்.


இதுவும் கடந்து போகும்

 

 ராகவன் கண்ணை மூடி கொண்டு அமர்திருந்தார். முந்தைய நாள் இரவு திடீரென்று பவித்ராவின் அலறல் சத்தம் கேட்டு, சந்தோஷின் அறைக்குள் ஓடினார். அங்கே பாதி கண்களை மூடியபடி, வாயில் பால் போன்ற திரவம் வழிய, தலை தொங்கியவாறு சந்தோஷ் கட்டிலில் கிடந்தான். அவன் உடல் வேகமாக அதிர்ந்து கொண்டிருந்தது. பவித்ரா ஐயோ ஐயோ என்று கதறிக்கொண்டே, அவனை தூக்கி உட்கார வைக்க முயன்று கொண்டு இருந்தாள். பதறியபடியே இருவரும் அவனை காரில் ஏற்றிக் கொண்டு, அருகில் இருந்த


உளைச்சல்

 

 சந்தியா..ப்ளீஸ்..கொஞ்சம் யோசியுங்க.. இல்லைங்க சுபாஷ்…நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்தேன்.. தீர்மானமாக கூறினாள் சந்தியா. அடுத்த ஆறு மாசத்துல ப்ரோமோஷனும் சம்பள உயர்வும் இருக்கு, நான் ஏற்கனவே உங்க பேரை ரெகமெண்ட் பண்ணிட்டேன்..அதுவும் இல்லாம நீங்க, ரொம்ப வருஷமா இங்கேயே இருக்கீங்க. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி உங்க கணவர், அவரோட கம்பெனியில அதிக சம்பளத்துக்கு வேலை வாங்கி தந்தாரு, அப்பவும் நீங்க போகல..இப்போ திடீர்னு ரிசைன் பண்ணா என்னங்க அர்த்தம்.. சாரி சுபாஷ்..எனக்கு கொஞ்ச


இந்த நாள் இனிய நாள்

 

 தனுசு ராசி அன்பர்களே! உங்களுக்கு இன்று.. பிரபல ஜோதிடர் வாய் திறக்கவும், என் மனைவி டிவியை ஆப் செய்யவும் சரியாக இருந்தது. பார்த்துகிட்டு இருக்கேன்’ல..என்றேன் கோபமாக. தினமும் இதை கேட்காவிட்டால் எனக்கு அந்த நாளே ஓடாது. நேரமாச்சு..நான் பதிவு செய்து அனுப்பறேன்..பொறுமையா ஆபீஸ்’ல உக்கார்ந்து கேளுங்க என்றாள் கிண்டலாக. வழியில் பைக் பஞ்சராக, சரி செய்து கொண்டு அலுவலகம் வருவதற்கு காலை பத்து மணியாகி விட்டது. பார்க்கிங் ஏரியாவில் பைக்கை நிறுத்திவிட்டு நான் வேலை செய்யும் பில்டிங்கை


தானசீலன்

 

 பாம் பாம்…பேருந்துகளின் ஹாரன் சத்தம், விர்ர்ரூம்..கிரீச்.. சர்ர்க்க்…டூ வீலர்களின் உறுமலும் பிரேக் சத்தமும் அந்த காலை நேரத்தை பரபரப்பாக்கி கொண்டிருந்தன. காலை ஏழு முப்பத்துக்கே வெகு வேகமாக இயங்க ஆரம்பித்து விடுகிறது கோவை மாநகரம். ஜெயன் மேன்ஷனை விட்டு வெளியே வந்தான், விக்ரம் மேன்ஷன் இரண்டடுக்கு மாடிகளை கொண்டது. மொத்தம் 21 ரூம்கள். கிரௌண்ட் ப்ளோர் ஏழு, முதல் மாடியில் ஏழு, இரண்டாம் மாடியில் ஏழு ரூம்கள். ஒரு ரூமில் இரண்டு பேர் தங்க மட்டுமே அனுமதி.