கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2022

217 கதைகள் கிடைத்துள்ளன.

காகிதப்பூக்கள்

 

 (2017ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உப்புமாவைக் கிளறிக்கொண்டே ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன். சாம்பல் நிற மேகங்கள் வானின் நீலத்தை மூடிக்கொண்டிருந்தன. விடியற்காலையில் கனத்த மழை பெய்து அன்றைய ஞாயிறைச் சோம்பலாக்க முயற்சித்துக்கொண்டிருந்தது. சீதாவிடம் துவைத்த துணைகளை வீட்டிற்குள்ளேயே காயவைக்கச் சொல்லவேண்டும். சீதாவை நான் கூப்பிடுவதற்குள் கூடத்திலிருந்து மூர்த்தியின் குரல் முந்திக்கொண்டு வந்தது. “தீபா, இப்ப நீ கிளம்பலேன்னா நான் விட்டுட்டுப் போயிடுவேன், என்னோட ‘கோல்ஃப்’ வகுப்புக்கு இப்பவே ரொம்ப


ஃபீனிக்ஸ்

 

 (2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கடந்த சில நாட்களாய் மனம் ஒரு நிலையில் நில்லாமல் பேயாய் அலைந்தது. பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கையா என்று தான் சாதாரணமாக எல்லோரும் கேட்பர். ஆனால் பிரச்சனையே வாழ்க்கையாகிப் போன எனக்கும் கூட மனக் கலக்கம் ஏற்படுவது தான் என்னைப் பல முறை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். மனத்தின் மென்மை இன்னும் முற்றிலும் போய் விடவில்லை என்பதற்குச் சாட்சிகளாக அவ்வப்போது இத்தகைய சலனங்கள் ஏற்படத் தான்


இலவசம்!

 

 நிரஞ்சன் நியாய விலைக்கடை முன் வரிசையில் நின்றிருந்தான். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து நிரந்தர வருமானமும், சேமிப்பும் இல்லாமல் வேறு வகையேதுமின்றி வாழ முடியாதவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு உதவி பணம் கொடுப்பதை வாங்கவே கூட்டம் கூடியிருந்தது. சிலர் முககவசம் அணிந்திருந்தனர்,சிலர் அணியாமலும் நின்றிருந்தனர். அந்தக்கூட்டத்திலேயே நிரஞ்சன் வித்யாசமாக,அதாவது விலையுயர்ந்த ஆடை அணிந்து காரிலும்,வீட்டிலும் குளிர்சாதனம் பயன்படுத்தியதால் முகம் மற்றவர்களைப்போல் வியர்வை வடிந்து வாடிப்போய் இல்லாமல் பொழிவுடன் இருந்தது. ஐபோனில் நண்பனிடம் பேசுவது,வாட்ஸ் அப் பார்ப்பதுமாக அடிக்கடி


பட்ட காலில் படாது

 

 இன்று நான் மிக சோகமாக இருந்தேன். இது புதியதல்ல. இன்று மட்டுமா? என்றுமே தான். நான் சோகமே உருவானவன். கன்னத்தில் கை வத்து விட்டத்தை பார்ப்பது எனக்கு ஆகி வந்த கலை. எனக்கு ஏன் இந்த சோதனை மேல் சோதனை? அடுக்கடுக்காக பிரச்னைகள்?. ஒன்றிலிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என வெளியே வந்தால், இன்னொன்று வாசலில் காத்துக் கொண்டிருக்கிறது. விடமாட்டேன் உன்னை என்கிறது. எனக்கு போதாத காலம். கிரகம் சரியில்லை. மனைவிக்கு தீராத உடல் நல பிரச்னைகள். குடும்பத்தில்


நிம்மதி வேணும்

 

 அலுவலகத்தில் ஒரு மணி நேரம் முன்னதாக போக அனுமதி கேட்டு நின்ற தேவசகாயத்திடம் ‘அக்கவுண்டண்ட்’ கேட்டார், எப்படி இருக்கு உங்க அப்பாவுக்கு? அப்படியேதான் இருக்கு சார், இரண்டு மூணு நாள் கழிச்சுத்தான் சொல்ல முடியும்னு டாக்டர் சொல்லியிருக்காரு. வீட்டுக்கு கூட்டிட்டு போயிடறெயா? இல்லை சார் வீட்டுல இரண்டு பேரும் வேலைக்கு போயிடறோம், பசங்களும் ஸ்கூலுக்கு போயிடறாங்க. யார் சார் பார்த்துக்குவாங்க? அதனால ஹாஸ்பிடல்லயே இருக்கட்டும்னு முடிவு பண்ணிட்டேன். ரொம்ப சிரமம்தான் உனக்கு, என்ன சார் பண்ண முடியும்?


தொலைத்த நண்பன்….!

 

 ஒரு வாரமாகவே பிச்சுமணியின் நினைவாகவே இருக்கிறது. அவனுடைய வெகுளித்தனமான சிரிப்பும், சற்றே நீண்ட முகமும், சிரிக்கும்போது சேர்ந்து சிரிக்கும் கண்களும், ஒடிந்து விழுவதைப் போன்ற ஒல்லியான தேகமும்! கொஞ்சம் முகம் வாடியிருந்தாலும், “டேய்..நந்து! என்னடா? என்ன முகமே சரியில்ல! சொல்லுடா? என்ன பிரச்சனை?” என்று கரிசனத்தோடு கேட்கும் குரலும். எப்படி மறக்க முடியும்? பிச்சுமணி, நீ எங்கடா இருக்க? இப்போ என்ன பண்ணிட்டிருக்க? இந்த நந்தகுமார ஞாபகம் வச்சிருக்கியா? அவனை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்று வெறியே வந்துவிட்டது.


லதாவின் சிநேகிதி…

 

 அழகிய வீடு, வாசலில் பாஸ்கர் M.com என்று பலகையில் வீட்டில் இருப்பவரின் பெயரை தகவலாக தெரிவித்துக்கொண்டிருந்தது. வீட்டினுள்ளே அலங்கரிக்கப்பட்ட சுவர்கள், பெரிய வரவேற்பறையில் கச்சிதமாக குஷன் சோபா, இதில் அமர்ந்தபடி, தன் மனைவியை… லதா…லதா…என சமையலறையிலிருந்தவளை அழைத்தார் பாஸ்கர். என்னங்க..? எனக்கு பசிக்குது, ஏதாவது! டிபன் செய்யேன். டிபனா…? மாவு எதுவும் இல்லையே . ரவை தான் இருக்கு ., உப்புமா செய்யலாம்னா, உங்களுக்கு பிடிக்காது. என்ன செய்யுறது ? இருங்க… மதியம் வைத்த சாம்பார், ரசம்,


கன்ஸர்வேடிவ் – ஒரு பக்க கதை

 

 ‘இந்த அல்ட்ரா மாடர்ன் பெண் யாரு?’ அலுவலகத்தில் தன் முன் மிடுக்காக நின்றவளைப் பார்த்துக் குழம்பினான் சத்யம். “சார்.. ஐம் ரேணுகா….” என்று ஆன் செய்த ‘டாப்’பை அவனிடம் கொடுத்தாள். கல்யாணத்தரகர் வாட்ஸ்ஸப்பிய அதே புகைப்படம். சத்யம் மேலும் குழம்பினான். “உங்க விருப்பப்படி பட்டுச்சேலை, க்ளோஸ்டு ஜாக்கெட், பின்னிய கூந்தல், மல்லிகைச்சரம், தோடு, மூக்குத்தி, வளையல்னு. போட்டோஷாப் செய்த என் போட்டோதான்..” சத்யம் அதிர்ந்தான். “மிஸ்டர் சத்யம்.. பெண்பார்க்க வரும்போது இந்த போட்டோஷாப் பெண்ணா நான் மாறணுமாம்..அம்மாவோட


தன்வினை

 

 அப்பாவின் சடலம் நடுக்கூடத்தில். சடங்குகள் முடிந்து மரப்படுக்கையி லிட்டார். சி(ச)தை எரிந்தது. அன்றிரவே ஆரம்பமானது சொத்து தகராறு. இரண்டு மகன்கள். ஒரு மகள். அம்மா போய் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. மூத்தவன் வாதம் செய்தான் சொத்தை சமமாக பிரிக்கவேண்டும் என்ற சொன்ன தங்கையிடம். எப்போதுமே அவனுக்கு அவளை பிடிக்காது. உனக்கு விமர்சையா கல்யாணம் பண்ணி குடுத்தாச்சு. அம்மாவோட நகை கூட நிறைய நீ தான் அபேஸ் பண்ணிட்டு போய்ட்ட. இப்ப ரூல்ஸ் பேசாத. உனக்கு ஒண்ணும்


ஊர்வசியின் சாபம்

 

 (1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) [இந்தச் சம்பவத்தைக் குறித்து மற்றவர்களுக்குத் தெரியக் கிடைக்காத சில விவரங்கள் எனக்கு எங் ஙனம் கிடைத்தன என்று தெரிவிக்க க எனக்கு அதி காரம் இல்லை. ஆனால் இதற்கு முன் வெளியிடப்பட்ட ''ஊர்வசி" என்கிற சரித்திரத்தைப் படித்தவர்கள் அதிலிருந்து தங்கள் இஷ்டம்போல ஊகித்துக்கொள்வதில் எனக்கு ஆக்ஷேபம் இல்லை. கொனஷ்டை.] முதற் காட்சி காலம்:- பாண்டவர்கள் வனவாசம் செய்து கொண்டிருக்கையில், கௌரவர்களுடன் இனிச் செய்யவேண்டிய யுத்தத்திற்காக