கதையாசிரியர் தொகுப்பு: தயாஜி வெள்ளைரோஜா

6 கதைகள் கிடைத்துள்ளன.

விடைபெறும் கேள்வி?

 

 வணக்கம் தோழி. நான் நலம். நீ இங்கு நலமாக இருக்க உன்னைப் போல் நானும் இறைவனை வேண்டுகின்றேன். பார், அன்று நீ சொல்லிக் கொடுத்தது போலவே கடிதத்தைத் தொடங்கிவிட்டேன் என நினைக்கின்றேன். உனக்கு மகிழ்ச்சிதானே? அப்படியென்றால் அந்த மகிழ்ச்சியை தொடர முடியாததற்கும் நான்தான் காரணம். என்னை மன்னித்துவிடு. ஓ……… உனக்கு மன்னிப்பு என்றால் பிடிக்காதுதானே. மறந்துவிட்டேன் மன்னித்திடு. ச்சே; பாரேன் நான் திருந்தவே இல்லை. ‘திருந்தவே இல்லை’ இந்த வார்த்தைதானே என் வாழ்க்கையையே இந்த நிலைமைக்கு மாற்றி


பதக்கம் எண் 13

 

 கம்பியூட்டர் தயார் நிலையில் இருக்கிறது. எனக்கு தேவையான வடிவத்தை உருவாக்கிவிட்டேன். அடர்த்தியான புருவம். தெளிவான கண்கள், மடங்கியும் மடங்காத காது, மழுங்கடிக்கப்பட்ட தாடை, நேற்றுதான் திருத்திய தோற்றத்தில் தலைமுடி, வயதை கணிக்கச் செய்யும் மீசை. எல்லாம் சரியாக இருக்கிறதா என ஒருமுறை பார்க்க வேண்டும் என்பது கட்டளை. பாதுகாப்பும் அதுதான். பார்த்தாகிவிட்டது. மீண்டும் ஒருமுறை எல்லா நாளிதழ்களிலும் வெளிவந்திருந்த செய்திகளை பார்வையிட்டேன். நேரம் குறித்தாகிவிட்டது. மலாக்காவிற்கு செல்வதற்கு தயாராய் வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டேன். காரில் இருந்து


‘பலிக்கும்’ ஜோதிடங்கள்

 

 ஜோதிடம், எண்கணிதம், ஜாதகம் போன்றவற்றில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா..?. அதில் நம்பிக்கை உள்ளவர்கள், இப்படி வாங்களேன் உங்களுக்குக் கைகொடுக்கனும். நம்பிக்கை இல்லாதவங்களும் வாங்க உங்களுக்கும் கைகொடுக்கனும். இரு தரப்பினர்க்கும் கைகொடுக்கறேன்னா காரணம் இல்லாமல் இருக்குமா.? காரணத்துக்கு ஒரு கதை இருக்கிறது. கதையைச் சொல்லவா? அந்த தோட்டத்துக்கு இரு ஜோதிடர்கள் வந்தாங்களாம். இருவரும் ஒரே குருகிட்ட பாடம் படிச்சவங்களாம். தோட்டத்திற்கு நுழைஞ்சதும் அவங்களுக்கு தாகமா வந்துச்சாம். அப்போ ஒரு வீட்டு வாசல்ல நின்னுகிட்டு தண்ணி கேட்டாங்களாம். அந்த நேரம்


கையெழுத்து…

 

 இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், வீடு சத்தமாக இருந்தது. மற்ற நாட்களெல்லாம் வீட்டில் ஆள் நடமாட்டம் குறைவு என்பதால் இன்று மட்டும் இப்படி ஒரு இரைச்சல். சத்தமில்லாத நாள்களில் வீட்டில் ஏற்பட்டிருக்கும் அலங்கோலத்தை எல்லாம் இன்றைக்குத்தான் மாற்றியமைக்க வேண்டும். ஆறுநாட்கள், கொஞ்சம் கொஞ்சமாக வீட்டில் உள்ளவர்கள் சேர்த்து வைத்த சோம்பேரித்தனம், வீட்டின் திரைத் துணியிலும் தொலைக்காட்சி மேல் இருக்கும் தூசியிலும், சமையல் அறை எண்ணெய் பிசுபிசுப்பு கொண்ட அடுப்பிலும் ஒட்டிக் கொண்டிருந்தன. அவ்வபோது செய்திருக்க வேண்டியதை செய்திருந்தால் இன்றைய


நானும் கடவுள்

 

 மனிதனை சிலையாக்குவது சாத்தியமா..? விஞ்ஞானப்படி விளக்கம் கிடைக்குமா..? ஒருவேளை……….. உடம்பில் யாரும் வர்மத்தை பயன்படுத்தியிருப்பார்களோ..? நரம்பு ஏதும் கோளாறா..? மருத்துவர்கள் முதல் வியாதிக்காரார்கள்வரை இதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கின்றார்கள். பிறகென்ன… மனிதனை சிலைபோல நின்றவாக்கிலேயே படுக்க வைத்திருக்கின்றார்கள். அந்த மனிதன் யார் என்பதைவிட முக்கியமான ஒன்றை உங்களிடம் சொல்கின்றேன். நான் சொல்லப்போவது மூட நம்பிக்கையோ மாய மந்திரமோ இல்லை என்பதை உங்களிடம் முதலில் உறுதி செய்துக் கொள்கின்றேன். இதையெல்லாம் சொல்வதற்கு நான் யார்..? நான் கடவுள்..! நம்பிக்கையில்லையா..? எனக்கும்கூட


அவளும் அவனும்

 

 அவள்- மலை, பனியுடன் காற்று, பரவசமான குருவிங்க சத்தம்…இதையெல்லாம் நாளைக்கு நான் பாக்கபோறதில்லை ஆனா.. அதே சமயம் என் பிரச்சனை எதுவும் என்னுடன் இருக்காது. கடைசி உறக்கம்; இதுதான் எனக்கு…. அவன்- ஹெலோ… அவள்- (மௌனம்) அவன்- ஹெலோ உங்களைத்தாங்க..? அவள்- யாருங்க நீங்க ..? எதுக்கு என்னைத் தொல்லைப்படுத்தறிங்க..? அவன்- அயயோ.. தொல்லையெல்லாம் இல்லைங்க.. தனியா சாகலாம்னுதான் வந்தேன்; துணையா நீங்களும் கீழே குதிக்கப்போறிங்கன்னு நெனைக்கறேன் அதான். சாகறதுக்கு முன்னமே பேரை தெரிஞ்சிக்கிடா செத்த பிறகு