கதையாசிரியர் தொகுப்பு: ம.இராஜ்குமார்

1 கதை கிடைத்துள்ளன.

அழகான ராட்சஸி

 

 காலை நேரம். இனிமையான காதல் பாடல்களை ஒலிக்க விட்டுக்கொண்டே சென்றது பேருந்து. ஏதோ ஒரு நிறுத்தத்தில் அந்தப்பெண் ஏறினாள். அதுவரை காதல் பாடல்களை கேட்டுக்கொண்டே கனவில் மிதந்துகொண்டிருந்த ரஞ்சித்துக்கு அவள் தேவதையாய் தெரிந்தாள். அவனுக்குள் திடீரென ஒரு உற்சாகம் தொற்றிக்கொண்டது. சாதாரணமாக ஒரு பெண்ணை ரசிப்பதை விட, காதல் பாடல்கள் பிண்ணணியில் ரசிக்கும் போது அவளே நம் காதலி போன்றதொரு பிம்பம் ஏற்படுமல்லவா அப்படித்தான் ரஞ்சித்தும் நினைத்துக்கொண்டான். மை தீட்டியதால் கண்கள் பார்ப்பதற்கு அழகாய் இருந்தது. மெல்லிய