கதையாசிரியர் தொகுப்பு: அரும்பின் பரிமளம்

2 கதைகள் கிடைத்துள்ளன.

கேளுங்கள் தரப்படும்

 

 பல வேகத்தடைகளைத் தாண்டி நகரினூடாக ஊர்ந்து வந்த அந்தப் பேருந்து நகராட்சி பேருந்து நிலையத்தினுள் நுழைந்து நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் வரிசையில் தனக்கான இடைவெளியில் சொருகிக் கொண்டு நின்றது. கியர் ராடுக்கு நேர்முன்னால் எஞ்சின் முடியின் மீது தொங்கிக்கொண்டிருந்த ஓட்டை வாஸரை பிடித்து இழுத்து ஓடிக்கொண்டிருந்த எஞ்சினை நிறுத்தினார் ஓட்டுநர். ‘‘வண்டி ஒரு கால்மணி நேரம் நிக்கும். முன்னாடி டயம் வண்டிகள்ளாம் போனப்பறந்தான் கௌம்பும். எடவெளி ஓட்டல்ல எங்கயும் நிக்காது“ என பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டு நடத்துனர் இறங்க,


தகனம்

 

 சுகமான ஒரு பயணத்தின் முடிவு சமீபித்த கணத்தில்தான் அந்தச் செல்லிடப்பேசி செய்தி எனக்குச் சொல்லப்பட்டது. மனதிலிருந்த உற்சாகம் அனைத்தும் வடிந்து போய்விட்டது. சின்னக் குழந்தை கண்கள் விரிய ஊதிக்கொண்டிருக்கும் பலூன் அளவு பெரியதாகி திடீரென வெடித்து விடுகிறபோது ஏற்படுகின்ற வெறுமை உணர்வு என்னிடத்தில் வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது. மகிழ்வுந்தின் சன்னல் வழியாக குளிராக உள்நுழைந்து எனது தலைமுடியை அலைத்துக் கொண்டிருந்த காற்று ஏற்படுத்திக் கொண்டிருந்த சுகானுபவம் அப்படியே நின்றுபோயிருந்தது. வண்டிக்குள் இருந்த என்னுடைய குடும்பத்தினர் செல்லிடப்பேசியின் செய்தியறிந்து ஆளாளுக்குப்