கதையாசிரியர் தொகுப்பு: சாந்தி முருகன்

6 கதைகள் கிடைத்துள்ளன.

செஞ்சோற்று கடன்

 

 மனோகருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை ஆனால் ஒன்றுமட்டும் தெளிவாக புரிந்தது… அவளை பழி வாங்க வேண்டும் என்பது மட்டும்…. போலீஸ் கேஸ் ஆகிவிட்டது அதுவும் மகளிர் காவல் நிலையத்தில் அவளை அடித்தததாகவும் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும். கேஸ் கொடுத்தவள் ஒன்றும் உத்தமி அல்ல ஒரு கை குழந்தையை விட்டுவிட்டு உடல் தினவு எடுத்து கள்ளக் காதளனான மனோகரின் அண்ணன் உடன் ஓடிவந்தவள் தான்… இராணு அதிகாரியான மனோகர் ஊருக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியிருந்தது கடைசியாக மூன்று


மனிதாபிமானம்

 

 சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக வேலை பார்த்து கொண்டிருந்த ரமேஷிற்கு குஜராத்தில் காந்திநகரில் ஒரு கல்லூரியில் படிப்பிற்கு ஏற்றால் போல விளையாட்டு துறை இயக்குனராக வேலை கிடைத்ததும் சென்னையில் இருந்து புறப்பட்டு வந்தடையும் முன்பே கல்லூரி நிர்வாகத்தின் உதவியோடு பார்த்து வைக்க பட்டிருந்த வீடு இருக்கும் அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் பேஸ்மென்ட்டில் லிப்ட் முன்பாக நின்று கொண்டு டெம்போவில் இருந்து இறக்கிவைத்த பொருள்களை சரிபார்த்துவிட்டு ஒவ்வொன்றாக லிப்ட் வழியாக பதினஞ்சாவது மாடியில் இருக்கும் தனது


பொய்மையும் வாய்மையிடத்து

 

 அலுவலகம் முடிந்து வீட்டை வந்தடைந்ததும் வீட்டின் வெளியே வைத்திருந்த பூவை எடுத்துக்கொண்டு உள்ளே நுழையும் போதே ஜெஸி.. .. ஜெஸி…..என்று கத்திக்கொண்டு சாப்பாட்டு பையயை தூக்கி எறிந்த சிவா பரபரப்பாக காணப்பட்டான். கே டி வியில் பதினஞ்சு முறை பார்த்து இத்துப்போன ஏதோ ஒரு பழைய படம் சத்தமாக ஓடிக்கொண்டிருந்தது… பார்க்க யாருமே இல்லாமல் ஓடிக்கொண்டிருந்த டிவியின் ரிமோட்டை தேடலானான், டிவி பார்க்கலேன்னா நிப்பாட்டி தொலைய வேண்டியதான தியேட்டரிலும் இந்த படம் இப்படி ஆளில்லாமல்தான் ஓடியிருக்கும் போல


மந்திரம்மாள்

 

 மதுரையில் ரயில்வேசில் கார்டாக பணிபுரியும் நானும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் என் மனைவி சாந்தாவும் அன்று கந்த சஷ்டி என்பதால் வீட்டிலே பூஜைக்கான ஏற்படுகளை செய்து கொண்டிருந்தோம், வழக்கமாக மாலை ஆறு மணிக்கு வேலை முடித்து செல்லும் வேலைக்காரி முத்தம்மாள் ஐந்து மணிக்கெல்லாம் என் மனைவியிடம் அம்மா நான் இன்னைக்கு சீக்கிரம் வீட்டுக்கு போகணும் என்றாள். மனைவி சாந்தா மறுப்புச் சொல்லும் பெண்ணல்ல, இருந்தாலும் ஏதாவது பிரச்சனை என்றால் உதவலாமே என்பதற்காக என்ன விசயம் எதுனா


நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

 

 நானும் என் நண்பன் சங்கரும் சிறு வயது முதலே நல்ல நண்பர்கள் பள்ளியில் படிக்கும்போதே மிக நெருக்கமாக பழகுவோம், நாங்கள் பள்ளிக்கு எடுத்து ச்செல்லும் மதிய உணவைக்கூட பகுந்துதான் உண்ணுவோம் சில நாட்களில் இருவரில் யார் ஒருவர் மதிய உணவு எடுத்து வரா விட்டாலும் இருப்பதை பகுர்ந்து, அனுசரித்தும் அனுபவித்தும் சாப்பிடுவோம். நாங்கள் இருவருமே கொஞ்சம் நடுத்தர வர்க்கம் தான் எங்கள் இருவரின் எண்ணங்களும் எப்போதும் ஒன்றாகவே இருக்கும் நாங்கள் பனிரெண்டாம் வகுப்பு வரை ஒன்றாகத்தான் படித்தோம்


தாமரை இலையும் தண்ணீரும்

 

 சும்மா கிடந்த சங்க ஊதிக்கெடுத்தான் ஆண்டி என்பது போல, தூங்கிக்கொண்டிருந்த மகனை எழுந்திருடா, என்ன புள்ள நீ, மார்கழி மாசத்தில கோவில்ல இருந்து எத்தனை பாட்டு ச்சத்தம் கேட்டாலும் எழுந்திருக்க மாட்டேங்குற, பக்கத்து வீட்டு பிள்ளைங்கெல்லாம் காலையில எந்திரிச்சி குளிச்சிட்டு நல்ல பிள்ளையாட்டம் கோவிலுக்குகெல்லாம் போறாங்க, நீயும் இருக்கியே என்றாள் அம்மா சும்மா இரும்மா எந்த பிள்ளைங்க போகும்? காலங்காத்தால தூங்க விடும்மா என்றான் வேண்டுமென்றே யார் யார் போகின்றார்கள் என்று தெரிந்துகொள்ள. எந்த பிள்ளைகளா? உன்