கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.ஜெயலட்சுமி

2 கதைகள் கிடைத்துள்ளன.

தள்ளு வண்டி

 

 மாடியில் ஜன்னல் வழியாக எதிரே தெரியும் குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். ராமர் கோவிலில் ஆண்களும் பெண்களும் வேக வேகமாக பிரதக்ஷ¢ணம் செய்து கொண்டிருந்தார்கள். என் பார்வை கோவிலின் அருகேயிருந்த மைதானம் நோக்கிச் சென்றது.தள்ளுவண்டியில் வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.உள்ளேயிருந்து என் மனைவி”என்ன வேடிக்கை பாக்கறேள்? என்றவாறே வந்தாள். ஒண்ணுமில்ல,நம்ம ஹரியோட தள்ளுவண்டி வியாபாரத்தப் பாத்துண்டிருக்கேன்.என்னமாத்தான் வியாபாரம் பண்ணறான்! ”ஆமாம்,ரொம்ப நன்னா வியாபாரம் நடக்கறது.பக்கத்தில ஒரு எடம் வாங்கியிருக்கானாம்.சீக்கிறமே அங்க ஒரு கேண்டீன் ஆரம்பிக்கப்போறானாம்.அவன் அம்மா சொன்னா.” என்றாள்


ஸஹாரா

 

 ”ப்ரியா இந்தியாவுக்கு என்னிக்கு வராள்?” கேட்டுக்கொண்டே காலண்டரைப் பார்த்தேன். மறு முனையிலிருந்து ஏப்ரல் 16ம் தேதி என்று பதில் வந்தது.ப்ரியாவுக்கு 21ம் தேதி இண்டர்வ்யூ இருக்கு.விசா ரிநியூ பண்ண வேண்டும். அத்னால் அவர்கள் கண்டிப்பாக 21ம் தேதி டில்லியில் இருக்க வேண்டும்.அதன் பின் சவுத் டூர் போக வேண்டும்.பழநி, சமயபுரம்,திருச்சி போக வேண்டும்.ப்ரியாவின் 2வது குழந்தை மயங்க்(சந்திரன் என்று அர்த்தமாம்)கின் முதல் பிறந்த நாள்20ம் தேதி வருகிறது.அதை டில்லியில் அவ்ள் மாமனார் வீட்டில் கொண்டாட வேண்டும்.இதற்கு நடுவில்