கதையாசிரியர் தொகுப்பு: இதயா ஏசுராஜ்

2 கதைகள் கிடைத்துள்ளன.

நீர் வளையம்

 

 தோளைத்தட்டி யாரோ உசிப்பியது போலிருந்தது. பதறியவாறு எழுந்து உட்கார்ந்ததும் புறவுலகின் வெளித்தோற்றத்தை உடனடியாக அவளால் ஜீரணிக்க முடியவில்லை. சிம்னி விளக்கிலிருந்து கசிந்து கொண்டிருக்கும் சிறிதளவான வெளிச்சத்தின் ஊடாக மண் சுவர்களாலான குறுகிய பரப்பளவுள்ள அக்குடிசையின் அடையாளம் அன்னியத்தன்மையோடு அவளை வெறித்துப் பார்த்தது. பார்வையை சுழற்றியவளின் கவனம் பக்கவாட்டில் நிலைகொண்ட போது இடுப்பு வேட்டி அவிழ்ந்து கிடப்பது தெரியாமல் வாய்பிளந்தபடியே தூங்கும் கதிர்வேலு தெரிந்தான். இவ்வளவு நேரமும் பீதியில் நடுங்கிக்கொண்டிருந்த நெஞ்சில் இப்பொழுது பேரமைதி உண்டானது. அத்தோடு முகத்தில்


ஆயுதம்

 

 ஷிவானி இப்படியொரு கள்ளத்தனத்தை தனக்குள்ளே பதுக்கி வைத்திருப்பாள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அவள் எங்கள் வீட்டுக்கு வருகின்ற ஒவ்வொரு முறையும் என்னிடம் உரையாடுவதைக் காட்டிலும் அப்பாவுடன் சிரித்து பேசி அரட்டையடிக்கின்ற பொழுதுகள் தான் மிக நீண்டதாக இருக்கும். சில நாட்கள் கல்லூரி விட்டதும் என்னுடனே வருவாள். விடுமுறை நாட்களிலும் வருவாள். நான் இல்லாத நேரங்களிலும் அவள் அடிக்கடி வந்து போயிருக்கிறாள் என்பது பின்னாளில் எனக்கு தெரியவந்தது. அவளுடன் பேசுகின்ற தருணங்களில் அப்பாவின் முகம் பிரகாசமடைவதை நான்