கதைத்தொகுப்பு: குடும்பம்

6504 கதைகள் கிடைத்துள்ளன.

சுந்தரி

 

 (1936ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கோடை மிகக் கடுமையாகக் கண்டுவிட்டது. எழுது வதற்கு ஆரம்பிக்கும் எவ்வித முயற்சியும் எள்ளளவும் பயனாகாததைப்பற்றி யோசித்தேன். அதற்கு இரு வகைக் காரணம் வெகு யுக்தியாகக் கண்டுவிட்டேன். மூளை, மூளையாக இல்லாது, வயல்களைப் போல் கட்டி தட்டிப் போயிருக்கலாம். அல்லது பேனாவின் மசி உறைந்து, எழுத ஓடாதிருக்கலாம். என் எழுதுகோலை எடுத்து இரண்டுதரம் வேகமாக உதறியதில், பேனாவைப் பற்றிய தகராறை ஒரு வகையில் தீர்த்துவிட்டேன்.


யார் குழந்தை?

 

 ரியாட்டின் ஒற்றை வழிப் பாதையில் எனது கார் விரைந்து கொண்டிருந்த போது நான் எதிர்பாராத அந்த சம்பவம் நிகழ்ந்தது. வீதி ஓரத்தில் தனியே நின்ற ஒரு பெண் பெருவிரலை உயர்த்தி என்னிடம் உதவி கேட்டாள். பெண் என்றதும் பேயும் இரங்கும் என்று சொல்வார்களே, ஏனோ அது போல அப்படி ஒரு இரக்கம் எனக்கு அப்போது வரவில்லை! அன்னியப் பெண்களைத் தகுந்த காரணம் இல்லாமல் காரிலே ஏற்றிச் செல்வது சட்டப்படி தடைசெய்யப் பட்டிருக்கிறது என்பதை இங்கே வேலைக்கு வந்த


புனர் மரணம்!

 

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மூக்க பிள்ளை செத்துப் போனார். அப்படித்தான் நினைத்தார்கள் எல்லோரும். ‘ஹூம் அவ்வளவு தான்!’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘அப்பாடா, ஒரு மட்டுக் கிழம் உயிரை விட்டது’ என்று முணுமுணுத்தார்கள் கூடியிருந்தவர்கள். பார்க்கப் போனால் மூக்க பிள்ளை பொல்லாதவர் அல்ல. சர்வாதிகாரியோ, வல்லாளகண்டனோ அல்ல, சர்வ சாதாரண மனிதர். அறுபது வயதுக்கு மேலாகி, தேகத்து எலும்புகள் எல்லாம் தோலைக் கிழித்து வெளிப் பாய்வது போல்


புத்தாண்டுப் பரிசு

 

 ஜோசப், க்ளாரா தம்பதியரின் மாலை நேரக் நாற்சந்திக் கடை; மாலை நாலு மணிக்குத் துவங்கும். மிகச் சரியாக மூணரை மணிக்குப் பற்ற வைக்கும் அடுப்பு சரியாக ஏழு மணிக்கு அணைந்து விடும். மெது வடை, மசால் வடை, போண்டா, மிளகாய் பஜ்ஜி நான்கே ஐட்டங்கள்தான். நாற்சந்தியே இவர்கள் தயாரிப்பில் கமகமகம வென மணக்கும். அவர்களுக்கென நிரந்தரக் வாடிக்கையாளர்கள் உண்டு. நாற்சந்தி என்பதால் தற்காலிகக் கஸ்டமர்களும் நிறையவே வருவார்கள். புரச இலைத் தொன்னையில் பலகாரத்துடன், தேங்காய் சட்னி, பொதினா


தரும சங்கடம்

 

 (1922ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “உடம்பு சரிப்படவில்லை யென்று கடிதம் வந்திருக்கிறதே. நான் போய் பார்த்துவிட்டு வரட்டுமா? கடிதம் வந்து நாலுநாளாகிறது. ஒரு பதிலும் போடவில்லையே. நான் போடவும் கூடாதென்று சொல்லுகிறீர்கள்”. “கடிதம் என்ன போட இருக்கிறது? அவளைப்பற்றி நமக்கென்ன கவலை?” “ஏண்டா, அதைத்தான் தொலைத்துத் தலைமுழுகி யாகி விட்டதே. அதைப்பற்றி என்ன ஸதா ஞாபகம்? கூடாது என்று தானே பிறந்தகத்திற்கு அவளை அனுப்பினது. பிறகு அவள் எப்படி


சிகிச்சை

 

 (1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பெண் பார்ப்பதற்கு அழகாக இருந்தாள். கொடி மாதிரி உடல்வாகு, அதற்காகவே மலர்க்கொடி என்று பெயர் வைத்திருப்பார்கள் போல் இருக்கிறது. ராஜம் அப்படித்தான் நினைத்தாள். மலர்க்கொடியை அவளுக்குப் பிடித்துவிட்டது. தாய்க்குப் பிடித்தால் சேகருக்கும் பிடித்த மாதிரி தான். மறுக்கமாட்டான். தாய் சொல்லைத் தட்டக் கூடிய பிள்ளை இல்லை. இரண்டு மூன்று மாதமாகவே ராஜத்திற்கு இதே வேலை. மகனுக்குப் பெண் பார்க்கும் வேட்டையில் ஈடுபட்டு இருக்கிறாள்.


புதுயுகப் பெண்

 

 (1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அதப் பெரிய வீட்டின் மரண அமைதியைக் குலைத்துக்கொண்டு சுவர்க்கடிகாரம் ஓலமிட்டது. இரவு மணி பதினொன்று. சமையற்கார ‘ஆயா’வும் வேலைக்காரப் பையனுங்கூடத் தூங்கி விட்டார்கள். கடிகாரத்தின் ‘டிக் டிக்’ ஓசை பெரிதாக கொதித்துப் பொங்கிய அந்த வீட்டு ‘எஜமானி’யின் இதயத் துடிப்புப் போலக் கேட்டுக் கொண்டிருந்தது. தானேதான் அந்த வீட்டு ‘எஜமானி’ என்று நினைத்தபோது அந்த நிலையிலும் கண்மணிக்குச் சிரிப்பு வந்தது. சிரிப்பா அது?


கண்ணம்மா!

 

 “ஏண்டி,ஏட்டக்கீழ வச்சுப்போட்டு ஊட்டக்கூட்ட மாட்டியாக்கும்?”என்று அதட்டிய அம்மாவை மிரட்சியுடன் பார்த்து விட்டு,துடைப்பத்தைக்கையிலெடுத்தாள் நான்காம் வகுப்பில் படிக்கும் ஒன்பது வயது நிரம்பிய ஏழைப்பெண் கண்ணம்மா. “ஏண்டி கண்ணு,அடி உன்னத்தான்,அடுப்புல இருக்கிற சோத்தக்கிளறி உடு.பத்தாமயே பத்துன வாசமடிக்கும் கூப்பன் அரிசி சோறு.வேற பத்திப்போச்சுன்னா வாயில வைக்க முடியாது.இந்தக்கிரகம் வேற அழுது தொலைக்குது.இரு பாலைக்கொடுத்துட்டு வாரேன்” என்று சலித்துக்கொண்ட படி குழந்தைக்கு பாலூட்டினாள் கண்ணம்மாவின் தாய் செல்லாள். தாயின் பேச்சைத்தட்ட முடியவில்லை கண்ணம்மாவுக்கு. கண்ணம்மா பிறந்த பின் தன் கணவனுடன் ஆறு


உன் விழியில் என் கண்ணீர்!

 

 “அம்மா! ஓடிவா! முத்துமாமா! வாம்மா!” *** தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை சந்தேகம் இருந்தால் பாருங்கள்! அரசனின் மகனல்ல அம்பிகாபதிஈஈஈஈ அமர காவியம் பாடினாள் அமராவதி இறைவனின் சாலையில் விதித்த விதி ஈஈஈஈஈஈஈஈ அரசன் தலையிட்டால் அதுதான் கதி ஈஈஈஈ அதுதான் கதி… பணம் உள்ள இடம் உலகை ஆட்டலாம் பகுத்தறிவுள்ள உறவும் ஆடுமா மனமேஏஏஏ ….. நதி செல்லும் வழிதன்னை யார் சொன்னது ஒரு வானும் நிலவும் சேர யாரைக் கேட்பது…. தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த


வித்தியாசமான மாமனார் வித்தியாசமான மகள்

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) செந்தில் யோசித்தான். மனைவியை வேலைக்கு அனுப்பலாமா? ஹைட்ரஜன் பலூன் களாய் உயரப் பறக்கும் விலைவாசியை அவள் உதவியுடன் எட்டிப் பிடிக்க வழி செய்து கொண்டால் என்ன? பஸ் ஓடிக் கொண்டிருந்தது. மயிலைக்குப் போக வேண்டும். ‘படவா ராஸ்கல் ஸார் அந்த மானேஜர்…ஆபீஸ் முடிஞ்சப்புறம் தான் ஸ்பொஷல் நோட்ஸ் தர்றானாம்…அதுவும் ஸ்டெனோ தான் இருக்கணுமாம்….’ நின்று கொண்டிருந்த இருவர் பஸ் குலூக்கலுடன் பேச்சையும் குலுக்கினர்.