கதையாசிரியர் தொகுப்பு: கி.வா.ஜகந்நாதன்

63 கதைகள் கிடைத்துள்ளன.

மாடு பெற்ற புலவர்

 

 சோழ நாட்டில் உறையூரில் கிள்ளிவள்வன் என்ற சோழ அரசன் செங்கோல் ஒச்சி வந்தான். அவனுக்குத் தமிழ்ப் புலவரிடம் மிக்க அன்பு. எந்தக் காரியம் இருந்தாலும் அதை விட்டு விட்டுத் தமிழ்ப் புலவர்களுக்கு உபசாரம் செய்வான். அவனைச் சார்ந்தவர்களும் அரண்மனைக்கு எந்தத் தமிழ்ப் புலவர் வந்தாலும் வரவேற்று, உபசரித்து, அரசனிடம் அழைத்துச் செல்வார்கள். ஐயூர் என்பது சிறிய ஊர். அங்கே ஒரு புலவர் இருந்தார். அவர் பெரிய புலவர் பெருங் கவிஞர். ஆனால் காலில்லா முடவர். அவர் தம்


அது மட்டுமா?

 

 (1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி, கந்தசாமியின் அகக்கண் முன் வந்தது. அதே வாத்தியார் சுப்பராயர் தாம் தம்முடைய ஒரு சாண் பிரம்புடனும் கயிறு கட்டிய பழைய மூக்குக்கண்ணாடியுடனும் காட்சியளித்தார். இவ்வளவு வருஷங்களில் வீசைக்கணக்கான நாசிகா சூரணத்தை ஏற்றுமதி செய்த அவர் திருமூக்கு முன்னைக்கு இப்போது பெரிதாகி இருந்தது. தாலூகா போர்டு எடுபடுவதற்கு முன் தர்மபுரி தாலூகாவைச் சார்ந்த காவாப்பட்டியில் அவர் தலைமை


நவராத்திரிப் பொம்மை

 

 (1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நவராத்திரி காலத்தில் ஸம்பாதிப்பது தான் உருப்படியாக நிற்கும். ராத்திரி பகலென்று பாராமல் உழைத்தால் பலனுண்டு. அவளுக்கு அவளுடைய கைதான் சொத்து. தன்னுடைய கைத்திறமையினால் அவள் ஜீவித்து வந்தாள். அவள் புருஷன் இருந்த காலத்தில் அவள் இருந்த நிலையே வேறு ; இப்போது இருக்கும் நிலையோ வேறு. ஆனால் இரண்டு காலங்களிலும் அவள் மனம் வைத்து உழைப்பதில் மாத்திரம் வஞ்சகம் செய்வதில்லை. மண் பொம்மைகளைச்


கிழவியின் நிழல்

 

 (1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வெயில்; படை பதைக்கும் வெயில். அந்த வெயிலில் கொத்தர்களும், கல் தச்சர்களும் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு வேலை யிலே கண். வெயிலின் வெம்மையை அவர்கள் அவ்வளவாக உணரவில்லை. ஆயிரக்கணக்கான கூலி யாட்கள் அங்கே வேலை செய்து கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான சிற்பியர் தங்கள் கலைத்திறனைக் காட்டினர். சிவபாதசேகரன், சோழ சக்கரவர்த்தி, இராஜராஜ சோழன் நெடுநாட்களாக எண்ணி எண்ணிச் சங்கற்பம் செய்து கொண்ட காரியம்


வேத முதல்வன்

 

 (1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இறைவன் எங்கும் நிறைந்தவன், எல்லாப் பொரு ளாகவும் நிற்பவன். அவனுக்குள் எல்லாம் அடங்கி நிற்கின்றன. அவன் எல்லாவற்றிலும் கரந்து நிறைந்து நிற்கிறான். பூலில் மணம் போலவும் எள்ளுள் எண்ணெய் போலவும் நெருப்பில் வெப்பம் போலவும் எல்லாப் பொருள்களிலும் நிறைந்து விளங்குகிறான் என்று நூல்கள் கூறும். வேதங்கள் எல்லாம் அக் கடவுளைத் துதிக் கின்றன. அந்த வேதத்தை உலகத்துக்குத் தந்த முதல்வன் அவன் தான்.


மனை விளக்கு

 

 (1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இல்லற வாழ்வில் ஈடுபட்டு இன்பம் காணும் அந்தக் கட்டிளங் காளைக்கு எதனாலும் குறைவில்லை. அழகுப் பிழம்பாகத் திகழும் காதலியைப் பெற்றபின் அவனுடைய இன்பத்துக்கு வேறு என்ன வேண்டும்? உலகம் அறிய மனைவியாக அவளை ஏற்றுக் கொண்டான். அழகிய இல்லத்தில் அவளோடு வாழப் புகுந்தான். அறத்தை வளர்த்து இன்பக் கடலில் துளைந்தாடும் வாழ் விலே அவன் ஈடுபட்டான். தம் முன்னோர் ஈட்டி வைத்த பொருள்


வழிபடு தெய்வம்

 

 (1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காதலனும் காதலியும் பிறர் அறியாதவாறு அன்பு செய்து பழகினார்கள். அவர்களுடைய காதல் வைரம் போல உறுதியாகி வந்தது. இனிமேல் இரகசியமாகச் சந்தித்து அளவளாவுவதை விட்டு, உலகறிய மணம் செய்து கொண்டு வாழ வேண்டுமென்று அவன் நினைத்தான். ஆனால் காதலியினுடைய தாய் தந்தையர் வேறு யாருக் கோ அவளை மணம் செய்விக்கும் எண்ணம் உடையவர் களாக இருந்தார்கள். காதலிக்கு உயிர்த்தோழி ஒருத்தி இருந்தாள். தலைவி


கலுழ்ந்தன கண்

 

 (1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) களவின்பத்தை நுகர்ந்து வந்த காதலர்களுக்கு இடையீடில்லாமல் கணவனும் மனைவியுமாக இருந்து இன்புற வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது. ஒரு நாளைப் போலவே நள்ளிருளில் கரடுமுரடான வழியில் தான் வருவ தைக் காதலன் பொருட்படுத்தவில்லை. அவளோ, அவ னுக்கு ஏதேனும் இடையூறு நேர்ந்தால் என் செய்வது என அஞ்சினாள். இனி வரவேண்டாம் என்று சொல்லி அவன் வருவதை நிறுத்தலாமா? அப்புறம் அவள் வாழ் வதே


தப்பினேன்!

 

 (1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காதலனும் காதலியும் வீட்டுக்குப் புறம்பே தினைப் புனத்தில் சந்தித்து வந்தார்கள். இந்தக் களவுக் காதல் தலைவியினுடைய உயிர்த் தோழிக்கு மாத்திரம் தெரியும். அயலார் அறியாமல் அவர்கள் சந்தித்துக் குலவுவதில் பல இடையூறுகள் இருந்தன. ஒவ்வொரு நாளும் தலைவன் வந்து போவதென்பது இயலுவதா? அவன் எத்தனையோ பொறுப்புள்ள கடமைகளை மேற்கொண்டவன். அவற் றைக் கவனிக்கும் நிலையில், சில நாட்கள் வந்து தலைவியைச் சந்திக்க முடிவதில்லை.


யாமத்து மழை

 

 (1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தோழி : உன்னுடைய காதலன் பெரிய வளப்பம் மிக்க மலை நாட்டை உடையவன்; இயற்கை எழில் குலுங்கும் மலைகளை உடையவன். தலைவி : அப்பெருமானுடைய அன்பு வளத்தை நான் அறிவேன். அவருடைய ஊரை யார் அறிவார்கள்? நாட்டைத்தான் யார் அறிவார்கள்? தோழி : நீதான் அறிந்து கொள்ளப் போகிறாயே! தலைவி : அது எவ்வாறு? அவர் இன்னும் திருமணத்துக்கு உரிய முயற்சிகளைச் செய்யாமலே