கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 5, 2023

10 கதைகள் கிடைத்துள்ளன.

நாற்பது வருட தாபம்

 

 (2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஸீனத் அமன் நடித்த ‘யாதோங்கி பாராத்’ என்ற இந்திப் படம் வெளி வந்தபோது சக்கைப்போடு போட்டது. அதைத் தொடர்ந்து நாலு தமிழ்ப் படங்கள் அதே செய்தியை வெவ்வேறு கோணத்தில் தந்து வெற்றி பெற்றன. அந்த படங்களில் வருவது போல ஒரு சம்பவம் என் வாழ்விலும் நடந்தது. அதுவும் சமீபத்தில், கனடா வந்த பிறகு. அதை எழுதினால் யாரும் நம்ப மாட்டார்கள். ஏனென்றால் எழுத்தாளர்களுக்கு


கலாசாரப் புயல்

 

 (2001 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “பொன்னைப் பாதுகாக்கலாம் பாருங்கோ. ஆனால் பெண்ணைப் பாதுகாப்பது தான் பெரிய பொறுப்பு” புருஷன்காரன் இல்லாமலே தனது ஒரே மகளின் பூப்புனித நீராட்டு விழாவை மிக மிக ஆடம்பரமாகவும் சிறப்பாகவும் ஒப்பேற்றிவிட்ட பெருமிதத்தில் தலைகால் புரியாமல் இருந்த ரஞ்சிதாவின் மீது, இளம் வயதினளும் பக்கத்து வீட்டில் புதிதாகக் குடும்பம் நடத்துபவளுமான ‘மிஸிஸ்’ ஆரோக்கியநாதன் சொல் எறிகணை ஒன்றை நாசூக்காக ஏவி வைத்தாள். இதனைக் கேட்ட


பௌணர்மி புன்னகை!

 

 பிரகாரத்தில் வீசிய காற்று இதமாக இருந்தது. சித்திரை மாதத்து வெயில் உக்ரமாக பார்வைக்கு தென்பட்டாலும், வெப்பத்தில் கடுமை இல்லை. வடபழனி சிவன் கோயில் பிரகாரம் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். இன்னும் மண்டபத் தூணில் முகுது சாய்த்து அமர்ந்தால் வசதியாகவும் இதமாகவும் இருக்கும். சுற்றிலும் பார்த்தேன். எல்லா தூண்களிலும் முதுகு சாய்த்திருந்தார்கள். கையில் மொபைலோடு பேஸ்புக்கிலோ வாட்ஸ்அப்பிலோ இணைந்திருந்தார்கள். சமூக வலைத்தளப் பிரியர்களுக்கு கோயில் வசதியான இடம். கும்பிடு போட்டுவிட்டு பிரகாரத்தில் அமர்ந்தால் மணிக்கணக்காக பிக்கல் பிடுங்கல் இல்லாமல்


மாத்ருபதத்தை மண்டியிட வைத்த மிஸ்டர் கிச்சா

 

 (2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தன்னுடைய பேரன் கிச்சா சாப்பாடு, தூக்கம் என்பதையே முழுநேர உத்தியோகமாகக் கொண்டிருந்துவிட்டால், வருங்காலத்தில் அவனை ‘வேலைக்குப் போகாமலேயே ரிடையர் ஆனவன்’ என்று ஊரார் எங்கே தூற்றி எள்ளி நகையாடுவார்களோ என்ற பயத்தில் எச்சமிப் பாட்டி அவனை அவ்வப்போது ஏதாவது ஒரு இடத்தில் வேலையில் சேர்த்துவிடுவாள். ஆனால், கிச்சா எந்த ஒரு ஆபீஸிலும் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேல் வேலை பார்த்ததில்லை. அப்படியொரு ராசி


அப்பா

 

 “தூங்கறவாள எழுப்பறது மஹாப் பாவம், தெரியுமோ”, தூங்குபவர் யாராக இருந்தாலும் அப்பா வழக்கமான சொல்வது. இதைச் சொல்லும் போது மட்டும் அவரது சாந்தமான குரல் சற்றே உயர்ந்து ஒலிக்கும். பெரியப்பாவிடம் அப்பா யாரும் புரிந்து கொள்ள முடியாத ஒரு மரியாதை வைத்திருந்தார். இருவருக்குமே ஓய்வூதியத்தில் ஜீவனம் என்ற ஒரே ஒற்றுமையைத் தவிர குணத்தில் நேர் எதிர். அப்பாவுக்கு இஷ்ட தெய்வம் அனந்த சயனத்திலிருக்கும் ஸ்ரீரங்கம் ரங்கனாதர் என்றால் பெரியப்பாவிற்கு எல்லா விதமான உக்ரமூர்த்திகளும். துருவக் கரடியைப் போலத்


கறுப்புப்பூனை

 

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உலுக்கி எழுப்பினாற்போல், திடுக்கிட்டுப்போய் எழுந்த மேகநாதனுக்கு அந்த ஓலம், நாடி நரம்புகளையெல்லாம் ஊடுருவி, விதிர்விதிர்க்கச் செய்யும், வேதனையாக இருந்தது. அவனால் தாங்கவே முடியவில்லை . கடந்த ஒரு வாரமாகவே இப்படி அடிவயிற்றிலிருந்து பிளிறிக்கொண்டு எழும் இந்த அவலம், ஒரு பூனையின் ஓலம் என்றால் நம்பவா முடிகிறது? எல்லாம் சபிக்கப்பட்ட அந்த ஞாயிற்றுக்கிழமையில்தான் நடந்தது. விடுப்பு நாளானதால் ஹாய்யாக கட்டிலில் படுத்துக்கொண்டு பத்திரிகை படித்துக்கொண்டிருந்தான்


புன்னகைக்கும் இயந்திரங்கள்

 

 (2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) (ஸ்மைலிங் மெஷின்ஸ்) “சமூக விஞ்ஞானி முனைவர் ராம் அவர்கள் நாளை காலை 8.00 மணிக்கு அரசாங்க ஆடிட்டோரியத்தில் தன் கண்டுபிடிப்புக்களைச் சமர்ப்பிக்கிறார். அன்று மாலை 5 மணிக்கு அரசாங்கம் சில முக்கிய முடிவுகளை அறிவிக்க இருக்கிறது” நகரின் முக்கிய இடங்களில் லேசர் எழுத்துக்கள் வெற்றுவெளியில் தோன்றி நகர்ந்து கொண்டிருந்தன மீண்டும் மீண்டும். ஒரு நிமிடம் நின்று பார்த்துக் கொண்டிருந்து விட்டுத் தொடர்ந்தேன். பெருமிதமாய்


மரு(று)மகள்!

 

 “வா கோமதி… நீ வருவேன்னு தான் நானும், சாப்பிடாம உட்காந்து இருக்கேன்; தட்டு போடட்டுமா…” வாஞ்சையுடன் கேட்ட அண்ணி வசந்தாவை, அன்பு மேவ பார்த்தாள் கோமதி. வசந்தா சமையல் அறைக்குள் சென்று, தட்டை எடுத்து வந்து பரிமாறுவதற்குள், கோமதியின் கண்கள், வீட்டை அலசின. கொஞ்சம் உள்ளடங்கி இருந்தாலும், விசாலமான, காற்றோட்டமான அழகான வீடு. இரண்டு படுக்கையறை, ஹால் வசதியுடன் அக்காலத்திலேயே சவுகரியமாக வீட்டை கட்டியிருந்தார் வசந்தாவின் கணவன். அதை, மகன்கள் இருவரும் எடுத்துக் கட்டி, மேல்தளத்தில் பெரியவனும்,


மனவெளி

 

 எப்படியாவது சுரேனிடம் சொல்லிவிட வேண்டும். முதலிரவன்றே இதைச் சொல்லவேண்டுமா என்று ராஜியின் மனதில் ஒரு எண்ணம் ஓடியது. இன்றேதான் சொல்லவேண்டும். அப்புறம் சொல்லி என்ன பயன்? தன் புகுந்தவீட்டின் பால்கனியில் நின்று வெளியே பார்த்துக்கொண்டிருந்த ராஜியின் மனதில் நினைவுகள் பின்னோக்கி ஓடின. சுமார் ஒரு மாதம் முன்னர் தான் சுரேனின் வரன் வந்தது. பிறகு இரு குடும்பத்தாரும் பொது இடமான மலை மந்திரில் சந்தித்துக் கொண்டது, இவர்கள் இருவரும் பேசிக்கொண்டது என்று ஆரம்பித்து மடமடவென்று விஷயம் முன்னேறி


அவனைச் சுற்றியே!

 

 அல்லாஹ் அக்பர்… அல்லாஹு அக்பர்… அல்லாஹஹ அக்பர் – ஹஜ்ரத்தின் குரல் இனிமையாக அதிகாலை நேரத்தில் சங்கீதம் போல காதுகளில் நுழைந்தது. அந்த வீட்டின் திண்ணையில் பாய் நெசவு செய்து கொண்டிருந்த பீவீ பாத்துமாள் சேலைத் தலைப்பைத் தலையிலே போட்டுக் கொண்டார். பாயை மீண்டும் பின்ன ஆரம்பித்து, ’சேக்கு பாங்கு சொல்லியாச்சு…. எழுந்திரு’பக்கத்து அறையில் படுத்திருந்த மகனுக்குக் குரல் கொடுத்தார். தூக்கத்திலிருந்தாலும் பாங்கு ஒலிக்கின்றதை அவன் செவிகள் பின் உணர்ந்து கொண்டுதான் இருந்தன எழுப்பிய குரலும், பாய்