கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 7, 2023

10 கதைகள் கிடைத்துள்ளன.

பெண்ணே! நீ பெரியவள்தான்!

 

 (1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “பெண்களையெல்லாம் கேலியும் கிண்டலும் செய்து கதை. கட்டுரைகள் எழுதிவரும் இந்த எழுத்தாளர் (அதாவது நான்) தனக்கு எப்படியான பெண்னைத்தான் தேர்ந்தெடுக்கப் போகிறாரோ? அவளை எப்படி எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கப்போகிறாரோ?” அவரிடம் (அதாவது என்னிடம்) அகப்படவிருக்கும் அந்தப் பரிதாபத்துக்குரிய பெண்ணுக்காக நாம் இப்பொழுதே எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்க வேண்டியது தான். “போங்கோடி. நீங்கள் ஒன்று, அந்த ஆள் (நான்) ஏற்கனவே யாரோ ஒரு


பாடும் விழிகள்

 

 கோவையிலிருந்து சேலம் நோக்கி,ஒரு பேருந்து பயணம்… இருவர் அமரும் இருக்கையில் என்னோடு அமர்ந்திருந்த அந்த மனிதருக்கு சுமாராக நாற்பது வயது இருக்கலாம்.எதையும் தொட்டுத் தொட்டுப் பார்த்து உணரும் அவரது நடவடிக்கை,அவர் கண் பார்வையில்லாதவராக இருக்கக்கூடும் என்று எனக்குத் தோன்றியது. கறுப்பு நிறத்தில் கண்ணாடி வேறு அணிந்து இருந்தார். ஆனால் அவரது உடை மற்றும் தோற்றம் நேர்த்தியாக இருந்தது. பொதுவாகக் கண் பார்வையில்லாதவராக இருந்தால்… அவராகவே தன்னை தயார்ப் படுத்திக்கொள்வதில் சற்று சிரமாக இருக்கும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அவரிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன். “சார்,


கண்களில் பூத்த மலர்!

 

 வயலுக்குள் நாற்று நட்டு விட்டு எட்டு வைக்க எழுந்த குந்தவைக்கு குறுக்கு புண்ணாக வலித்தது. கண்ணுக்கு எட்டியதூரம் யாரும் தட்டுப்படவில்லை. மாடுகள் மட்டும் காலையில் போட்டு வந்த தட்டின் அடிப்பாகத்தை வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக மென்று திண்பதை கண்டாள்! ‘காலையில் சேவல் கூவ கேட்டதும் எழுந்த மனுசன் குளிக்காமக்கூட அன்றவாருக்கு மேல அழுக்கு வேட்டிய கட்டிட்டு,மொபட்ட தள்ளி ஸ்டார்ட் பண்ணிட்டு போனவர்தான், மதியம் ரெண்டாச்சு காணல. கூடவே எந்திரிச்ச நானும் வீட்டக்கூட்டி,வாசக்கூட்டி,மாட்ல பாலக்கறந்து, குழந்தைய குளிக்கவச்சு,சோறூட்டி,


மிஸஸ் ராதா

 

 (ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ராதா ஒரு புதிர்‌ தேன்துளி தின்னத்‌ தின்னச்‌ சிறிதுமே திகட்டாது. — தேவர்‌ தந்த பூமாலை சூடவும்‌ திகட்டாது. மனைவி தந்த வெற்றிலையின்‌ மகிழ்ச்சியும்‌ திகட்டாது. தாய்‌ ஊட்டும்‌ பால்சோறு சாப்பிடத்‌ திகட்டாது. தந்தை தந்த பொன்னாடை தரிக்கத்‌ திகட்டாது. காவிரி தேவி புகழ்‌ பாடப்‌ பாடத்‌ திகட்டாது. – குடகர்‌ பாட்டு மொழிபெயர்ப்பு ரித்த பாம்புச்சட்டையைப்‌ போல்‌ உலர்ந்து தோட்டங்‌ களை ஊடுருவிக்கொண்டு செல்லும்‌ அந்தச்‌


அந்திநேரத்து நிஜங்கள்

 

 செய்ததமிழ் தனையறிந்து பதினெண் பேரைச் செம்மையுடன் காண்பதற்கு மூலங் கேளு சைதன்ய மானதொரு தன்னைப் போற்றிச் சதாகாலம் ஒம்சிங்ரங் அங்சிங் கென்று மெய்தவறாப் பூரணமா யுருவே செய்தால் வேதாந்தச் சித்தரைத்தான் வசமாய்க் காண்பாய் உய்தமுடன் அவர்களைத்தான் வசமாய்க் கண்டால் உத்தமனே சகலசித்துக் குதவி யாமே. -சித்தர்கள் பெரிய ஞானக்கோவை ( ரத்தின நாயக்கர் அண்டு சன்ஸ் ) நிஜானந்த போதம். கதவு தட்டப்பட்டச் சத்தம் கேட்டு மும்முரமாக கதை எழுதிக்கொண்டு இருந்த நான் நிமிர்ந்தேன். “போய்விடு” என்று


யௌவனம்

 

 கோட்டைப் புகையிரத நிலையம் ஒரே ஆரவாரமாக இருந்தது. இவன் சன நெரிசலில் முண்டியடித்துக் கொண்டு புகையிரதத்தினுள் ஏறிக்கொண்டான். ‘ஹாண்ட் பாக்’கை மேலே வைத்துவிட்டு ‘கோணர் சீற்’றைக் கைப்பற்றிக் கொண்டான். இருக்கும் இடம் வசதியானதும் சுற்றுமுற்றும் பார்த்தான். இவனது இருக்கையின் அருகருகே இரண்டு வயது முதிர்ந்தவர்கள். எதிராக இருந்த மற்ற ‘கோணர் சீற்’றில் வாட்ட சாட்டமான ஒரு இளைஞன். அவன் தனது பார்வையை வெளியே எறிந்துவிட்டுக் காத்திருந்தான். அந்த எறிதலில் ஏதோ விஷேசம் இருப்பது கண்டு இவனும் அத்திசை


தினவு

 

 சத்தத்தைக் குறைச்சு வைச்சும் ஃபோன், லேசாகச் சிணுங்குகிறது! ‘ஹலோ…’ சே…அலுப்புக் களைப்பெண்டு, ஒரு கொஞ்சநேரம் நித்திரைகொள்ள விடாதுகள்! ‘ஹலோ…ஹலோ…. ஆர்… சுபாவே கதைக்கிறது?’ ஏதோ புதுசா இண்டைக்குத் தான் இவர் என்ரை குரலைக் கேக்கிறார்! ‘ஓமோம் சொல்லுங்கோ நடா அண்ணை… சுபாதான் கதைக்கிறன். ஏன் குரல் தெரியேல்லையே?’ பாசாங்குக்குக் கதைக்க, எனக்கும் நல்லாப் பழக்கிப் போட்டாங்கள். ‘மகள் கதைக்கிறா எண்டு நினைச்சுப் போட்டன். ரெலிபோனிலை குமரி மாதிரியெல்லே உம்மடை குரல் கேக்குது…ஹி…ஹி…ஹி’ சிலேடையும் சேட்டையும் சேர்ந்த, நரிச்


நல்லதோர் வீணை செய்து

 

 காலையில் பிடித்த மழை, கொஞ்சமாவது நிற்க வேண்டுமே? இல்லை. கொட்டித் தீர்த்துவிடுவேன் என்பது போல் விடாமல் பெய்து கொண்டிருந்தது. தார் பூசிய சுவர் போல் வானம் மேகங்களால் இருண்டு கிடந்தது. மலைக்குளிர் வேறு சேர்ந்து கொண்டால் கேட்கவா வேண்டும்? “ஏன் இங்கு வந்து மாட்டிக் கொண்டோம்?” என்று ஆகிவிட்டது எனக்கு. தேயிலை எஸ்டேட்டின் நடுவில் இடிந்த அந்தச் சின்னஞ்சிறிய தகரக் கொட்டகை இருந்தது. அதில் ஒழுகிய இடம் போக மிஞ்சிய ஒரே ஒரு மூலையில் நானும் டிரைவரும்


நானும், ஜெயனும், திருச்சியும்

 

 இன்று அவன் மரணமடைந்த செய்தி கிடைத்தபோது நான் நொறுங்கிபோனேன்.கடந்த சில ஆண்டுகளில் நான் இழந்த சொந்தங்கள் அநேகம். வாப்பா ,உம்மா ,மூத்த சகோதரர் ,சகோதரிகள் என்று, பாதிப்பேருக்குமேல் போய்சேர்ந்துவிட்டார்கள். அவர்களின் இழப்பிலிருந்து மீண்டுகொண்டிருந்த நேரமிது. மனைவியும் மகளும் அவர்களின் பிரிவின் துயரை மறக்கச்செய்து கொண்டிருக்கிற நேரம். எனக்கு அதிகம் நண்பர்கள் எப்போதுமே கிடையாது. என் வாழ்நாள் முழுதும் இருந்த எனது நண்பர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இப்படி அபூர்வமான எனது நண்பர்களில் ஜெயன் முதன்மையானவன். அன்று வகுப்பில்


குமரிக்கோட்டம்‌

 

 (1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முன்னுரை காலம் மாறுகிறது என்பதை அறிய மறுக்கும் வைதீகர்களில் சிலருக்குத் தமது சொந்த வாழ்க்கை யிலேயே,நேரிடும் சிலபல சம்பவங்கள், மனமாற்றத்தை ஆச்சரியகரமான விதத்திலும் வேகத்துடனும் தந்துவிடுகின்றன. ‘குமரிக்கோட்டம்‘ இக் கருத்தை விளக்கும் ஓர் கற்பனை ஓவியம். இதிலே காணப்படும் சீறும் தந்தை, வாதிடும் மகன், வசீகர மங்கை, ரோஷம் நிரம்பிய அண்ணன், இவர்களை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் காணலாம். பெயர்கள், குழந்தைவேலர் என்றிராது;