கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 23, 2023

10 கதைகள் கிடைத்துள்ளன.

கொரோனா நாட்கள்

 

 ஒன்று வண்டி ஓட்டுவது என்றாலே கப்பல் ஓட்டுவது போல் தான் எனக்கு. கப்பல் ஓட்டுவது கடினமான வேலையா என்று தெரியாது. அவ்வளவு பெரிய கடலில் மிதந்து போவதை நினைக்கும் போது பயமாக தான் இருக்கிறது. அதனால் கப்பல் ஓட்டுவது கடினமான வேலை என்று மனதில் நிலைத்துவிட்டது. நம்மை பயமுறுத்தும் விஷயங்கள் எல்லாமே நமக்கு கடினம் தான் போல! வண்டி ஓட்டும் போதெல்லாம் யாராவது வந்து இடித்து விடுவார்களா, அல்லது நான் யார் மேலேயாவது இடித்து விடுவேனா என்ற


நம்ப முடியாத சாதி

 

 (1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆஸ்பத்திரி வார்ட்டில் மருந்து நெடி எனக்குப் பழகி விட்டது. அச்சிடன்ற் வார்ட்டில் நான் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களாகின்றன. சிறிய விபத் துத்தான். என் வலது கால் எலும்பு முறிந்துவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கணப் பொழுதில் அந்த விபத்து நடந்து முடிந்துவிட்டது. எனது வீட்டிற்கும் நான் கல்வி கற்பிக்கின்ற பாடசாலைக்கும் இரண்டு மைல்கள் இடை வெளித் தூரம். வழக்கமாக பஸ்ஸில்தான் பயணம் செய்து


சாதனைப் பெண்!

 

 கல்லூரி கனவுகளுடன் கார்கி காலை ஏழு மணிக்கே ஹாஸ்டலில் தயாரானதை உடனிருக்கும் மாணவிகள் ஆச்சர்யமாக பார்த்தனர்! நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கார்க்கிக்கு நன்றாக படித்து வேலைக்கு சென்று சம்பாதித்து குடும்ப நிலையை உயர்த்த வேண்டுமென்பது லட்சியமாக இருந்தது! தாய்,தந்தை இரண்டுபேருமே வசதியில்லாததால் படிக்க முடியாதவர்கள்,தன் பெண்ணை படிக்க வைத்து உயர் நிலைக்கு கொண்டு வரவேண்டுமென்பதற்க்காக வேலைக்கு சென்று பெறும் சம்பளத்தை சிக்கனமாக செலவழித்து,சேமித்து,பணக்கார குழந்தைகள் படிக்கும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர். பள்ளித் தேர்வில் முதலாவதாக தேர்ச்சி


பகுத்தறிவின் சிறப்பு – ஒரு பக்க கதை

 

 ‘அம்மா… எங்க கிளம்பிக் கிட்டு இருக்கீங்க’ என்று நறுமுகை கேட்க, ‘மாலதி அக்காவுக்குக் குழந்தை பிறந்திருக்கு பார்க்கப் போறேன்’ என்றார் அம்மா. ‘சரி, சீக்கிரமா வந்துருங்க..’. ‘வந்தர்றேன் ஹீட்டர் போட்டு வை வந்ததும் குளிக்கணும்’. ‘குழந்தையைத் தான பார்க்கப் போறீங்க அதுக்கு எதுக்கு வந்து குளிக்கவேண்டும்..?’ என்று கேள்வி கேட்டாள் நறுமுகை. ‘அதெல்லாம் தீட்டு.., உனக்குப் புரியாது.’ என்றார் அம்மா. நறுமுகை சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். ‘ம்மா… முறையாகப் பார்த்தால் குழந்தையைப் பார்க்கப் போறவங்க


நான்!

 

 மாலை வேளை ! பேருந்தை எதிர்பார்த்து நிறைய பேர் காத்திருந்தனர் போக்கு வரத்து நெரிசலும் மிகுந்து இருந்தது. நானும் பேருந்துவை எதிர்பார்த்து காத்திருந்தே. எதிரில் ஒரு கூட்டம், சுமார் நான்கைந்து பேர்கள் இருக்கலாம். ஒருவர் தோள் மேல் ஒருவர் கை போட்டுக்கொண்டு வெடிச்சிரிப்புடன் நடந்து வந்து கோண்டிருந்தனர். அவர்கள் நடந்து வரும் தோரணையை பார்த்து எனக்கு இரத்தம் கொதித்தது, என்ன ஒரு அகம்பாவம், வருவோரையும் போவோரையும் இடித்துக்கொண்டு முறைப்பவர்களை பார்த்து நக்கலான பார்வை, அவர்களுக்குள் கிண்டல், சத்தமிட்ட


ஓடிப்போனவள் திரும்பிய போது

 

 (1985 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜனசந்தடி இல்லாத ரயில் நிலையங்களின் பிளாட்பாரத் தில், அந்தக் குளிர்ச்சியான சிமெண்ட் சாய்வு பெஞ்சுகளில் உட்கார்ந்து அனுபவித்திருக்கிறீர்களா? மனிதர்கள் அமர்ந்து அமர்ந்து, சாய்ந்து, தேய்த்து, வழவழப்பும் குளிர்ச்சியும் கூட்டி வைத்திருக்கிற சிமெண்ட் பெஞ்சுகளில், அகலமான உட்காரும் இடங்களும், மிக நீளமான சாய்வு இடமும் உள்ள சிமெண்ட் பெஞ்சுகனில், நீங்கள் குழந்தையாய் இருந்தபோது அம்மா மடியில் படுத்த சுகத்தை, நீங்கள் ஆளான பின், உங்களின்


இட்டிலி

 

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மின்சார விசைப்படகிலிருந்து ஒரு துள்ளு துள்ளிக்குதித்து கீழே இறங்கியபோது பீய்ச்சித்தெறித்த தண்ணீர்த் திவலையில், கால் முட்டிவரை நனைந்துவிட்டது. நேரம் இன்னும் புலரவில்லை. என்றாலும் ஈர பேண்டுடன் பிரயாணப்பையைத் துக்கிக்கொண்டு நடப்பது கொஞ்சம் சிரமாகத்தான் இருந்தது. இருள் பிரியாத இந்த நேரத்திலும், சில்வண்டுகளா, இல்லை ட்வீட்டிப் பறவைகளா, என்று அனுமானிக்க முடியாத அந்த கிறீச்சிடல் ரீங்காரம் சிவநேசனை மிகவும் கவர்ந்தது. சுற்றிலும் கடல் சூழ்


ஷெல் ஷாக்!

 

 அருணும் தன் தாய்மேல் பாசத்தைக் கொட்டினான்..! கொட்டுகிறான்..! கொட்டுவான்..! இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டு வந்த பூமிகா தன்னை எவ்வாறெல்லாம் சித்திரவதை செய்கிறாள் என்பதை ஒரு சதவீதம் கூட அறியாதவன் அருண். அன்னபூரணியம்மா ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள். துளசி மாடத்துக்குக் கோலம் போட்டுவிட்டுத் திரும்பும்போது, “துளசியம்மா; உனக்கு இதுதான் என்னோட கடைசி பூஜையா இருக்கும். இருக்கணும்..!” விண்ணப்பம் போலவும், வேண்டுதல் போலும் அவளது உள்ளக்கிடக்கை வெளிப்பட்டது. அதே சமயம் ஆழ்மனம் விழித்துதெழுந்து


சன்னலின் உள்ளே வந்த வெளிச்சம்

 

 “சங்கமித்ரா நீ செய்யறது உனக்கே நல்லா இருக்கா?” என்றாள் வர்ஷணி தன் தோழியிடம். முகநூலில் மூழ்கி இருந்த சங்கமித்ரா தன் முகத்தை வர்ஷணி இருந்த பக்கம் திரும்பியவாறு, ”முட்டாள் புருஷன். காது கேட்காத மாமியார். அவங்களோடு கஷ்டப்படற எனக்கு வடிகால் இது மட்டும்தான். நான் என்ன செய்யட்டும்” என்று பதிலிறுத்தாள் பைரவி. சங்கமித்ராவும் வர்ஷணியும் திருச்சியில் உறையூரில் ஒரு வீட்டின் அடுத்தடுத்த போர்ஷனில் வசிக்கும். நெருங்கிய தோழிகள். மனம் விட்டுப் பேசும் வழக்கம் உண்டு… சங்கமித்ரா ஒரு


அன்புடன் நிம்மியிடமிருந்து

 

 (1976 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நான் அந்த அறையைப் பெரிதும் விரும்பி வாடகைக்கு எடுத்த தின் நோக்கமே அது மாடியறையாக இருக்கிறது என்பதினால்தான். மாடிகளில் வசிப்பவர்கள் தான் மனிதர்கள், மற்றவர்கள் மாக்கள் என்பது என்னுடைய நெடுநாளைய சித்தாந்தம. மாடி பால்கனியின் உயரத்தில் நின்றுகொண்டு தெருவில் நடமாடும், மற்ற காரியங்களில் ஈடுபடும் மனிதர்களைப் பார்க்கும்போது அவர்களின் சிறுமை, அவர்கள் செயல்களின் வெறுமை இவை எனக்குத் துல்லியமாகவே புலப்படுகிறது. மனிதர்களின் நடமாட்டங்களை