கதையாசிரியர் தொகுப்பு: தேமொழி

17 கதைகள் கிடைத்துள்ளன.

பழங்கணக்கு

 

 மாமா வந்திருந்தார். சாப்பாட்டு அறை மேஜைக்கருகில் அமர்ந்து அம்மா கொடுத்த காஃபியைக் குடித்துக் கொண்டே மேஜையை நோட்டம் விட்டார். அவரது வீட்டிற்கு எங்கள் வீட்டு சாப்பாட்டு அறையின் மேஜை போலவே ஒன்று செய்ய விரும்பினார். “அம்மாடி, ஒரு அளவு நாடா எடுத்துட்டு வாம்மா.” “இதோ மாமா, இந்தாங்க, என்ன செய்யப்போறீங்க?” “ஒரு தாளும் பேனாவும் எடு, நான் இந்த மேஜை அளவை அளந்து சொல்றேன், குறிச்சுக்கோ.” “சரிங்க மாமா, சொல்லுங்க.” “அகலம் ….ம்ம்ம்.. (என்று ஹம் செய்துவிட்டு)


பொங்கல் கொண்டாட வந்திருக்காக!!!

 

 சாம்பல் வண்ண புத்தம் புது மார்க் டூ அம்பாசடர் கார் கீழப் பாலத்தில் வருவது தெரிந்தது. அதன் மேலே சாமான்கள் வைக்கும் கேரியரில் சில ட்ரங்க் பெட்டிகள் வைத்து விழாமல் நன்கு கட்டப் பட்டிருந்தது. வலதுபக்கம் திரும்பியவுடன் சாலையில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு கார் ஊருக்குள் நுழைந்தது. மரத்தடியில் கோலிகுண்டு விளையாடிய சிறுவர்கள் ஆரவாரம் செய்த வண்ணம் அதனைத் தொடர்ந்து ஓடத் தொடங்கினர். அந்த சிறிய ஊருக்கு எப்பொழுதாவதுதான் நகரில் இருந்து வண்டிகள் வரும். வண்டி மரகதத்தின்


கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு?

 

 காலை நேரத்தில் பள்ளிக்குக் கிளம்ப வேண்டிய பரபரப்பில், அலுவலத்திற்கு செல்ல வேண்டிய அவசரத்தில் வீடு களேபரமாக இருந்தது. மேகலையின் தம்பியும், தம்பி மனைவியும் வீடு முழுவதும் ஓடி ஆடிக் கொண்டிருந்தார்கள். அவர்களது ஐந்து வயது மகள் மஞ்சரி தன் பங்கிற்கு பள்ளி கிளம்ப அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தாள். காலை மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்சில் வந்து இறங்கி இருந்தாள் அத்தை மேகலை. அவள் வெளி நாட்டில் இருந்து கொண்டு வந்து பரிசாகக் கொடுத்த ‘ஹாலோ கிட்டி’ பொம்மையுடன் விளையாட வேண்டும்,


யாருக்காக அழுதாள்?

 

 இருக்கையை விட்டு எழுந்த வண்ணம் வாயில் பென்சிலைக் கவ்விக் கொண்டு மேஜையில் கிடந்த தாள்களையும், நோட்டுப் புத்தகங்களையும் பையில் திணித்தேன். அவிழ்ந்திருந்த கூந்தலை வாரிக் கொண்டை போட்டு பென்சிலை அதில் செருகினேன். முதுகில் பையை சுமந்து கொண்டு, கைபேசியை ஜீன்ஸ் பேண்ட்டில் உள்ள ஒரு பக்க பையில் செருகிக் கொண்டேன். அடுத்த பக்கப் பையில் சில்லறைகள் வைத்திருக்கும் சிறிய பர்ஸும் வீட்டுச் சாவியும் இருக்கிறதா என நிச்சயப் படுத்திக் கொண்டேன். நாற்காலியின் சாயுமிடத்தில் தொங்கிய, பெரிய, மஞ்சள்


நீ என்றுமே என் மகன்தான்

 

 மணி மாலை ஐந்து மணியை நெருங்கியது. நார்மா அன்று வேலை செய்தவரை போதுமென்ற முடிவுடன் அனைத்தையும் ஒழுங்கு செய்துவிட்டு, கணினியை நிறுத்திவிட்டு, கைப்பையை எடுத்துக் கொண்டு அறையை விட்டுக் கிளம்பினாள். “பை, பை, நார்மா, நாளை பார்க்கலாம்,” என்று புன்னகைத்தாள் உடன் பணி செய்யும் ரோஸ். மெலிதாக வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் தலையை அசைத்துவிட்டு வெளியே வந்தாள் நார்மா. குளிரூட்டிய கட்டிடத்தில் இருந்து வெளியே வந்ததும் கோடை வெயில் தகித்தது. கார் நிறுத்துமிடத்தை நோக்கி நடந்தாள். மகளின்


சொல்லவா கதை சொல்லவா?

 

 அறிவுரைகள் நன்மை தருபவை. தீய செயலுக்குத் தூண்டும் ஆலோசனைகளுக்கு அறிவுரைகள் என்ற தகுதியை நாம் வழங்குவதில்லை. கூனி, சகுனி ஆகியோர் கூறியவற்றை, அந்த ஆலோசனைகளை, உலக மக்கள் போற்றபடவேண்டிய நல்ல அறிவுரைகள் என நம் முன்னோர்கள் நமக்குப் போதித்ததில்லை. அறிவுரைகளைப் பலரும் கொடுத்தவண்ணமே இருப்பார்கள். அது மிகவும் சுலபம், அறிவுரைகளை கடைபிடிப்பதே சிரமம். அறிவுரை கொடுப்பவர்களே அதைக் கடைபிடிக்க மறந்தும் விடுவார்கள். “சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்”, என்கிறது திருக்குறள். அனைத்து அறிவுரைகளுமே


அம்மா சொன்ன “கதை”

 

 வழக்கம்போல உணவருந்தும் அறையில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். பிள்ளைகள் அனைவரும் அப்பாவுடன் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிப்போம். அம்மா பரிமாறுவார்கள். ஏதாவது கதை பேசியவண்ணம் சாப்பாடு நடக்கும். சிலசமயம் பேச்சு எங்கு அராம்பித்தது எங்கு முடிகிறது என்று தெரியாத அளவிற்கு எங்கெங்கோ சென்று எங்கேயோ முடிந்திருக்கும். வழக்கமாக அப்பாவிற்கு விரைவில் சாப்பிட்டு முடித்துவிடும் பழக்கம் (அம்மா அதை விவரிப்பது, “சாப்பாட்ட அள்ளி வீசிட்டு போறாங்க”). கையில் கிடைக்கும் அந்த வாரம் வெளிவந்த வார இதழ்களில், குமுதமோ ஆனந்த


சான்றோனாக்குதல் தந்தையின் கடன்

 

 தேசத்தந்தை காந்தியும் தந்தை பெரியாரும் தீவிரமா விவாதித்துக் கொண்டிருந்தார்கள். “ஐயா, நீங்க சுதந்திரம் வாங்கினவுடனே காங்கிரஸ கலைக்க சொன்னீங்க. நானும் திராவிட இயக்கம் அரசியலில், தேர்தலில் ஈடுபடாம மக்களுக்கு உழைக்கும் இயக்கமாக மட்டுமே இருக்கணும்னு சொன்னேன். நீங்க சொன்னதையும் யாரும் கேக்கல, நான் சொன்னதையும் கேக்காம திராவிட முன்னேற்றக் கழகம்னு பிரிஞ்சி போயி இந்த கூத்தாடிங்க மக்களைப் பாடாப் படுத்திக்கிட்டு இருக்காங்க” என்றார் பெரியார். பொறுமையாக கடலை சாப்பிட்டுக்கொண்டு பொக்கை வாய் திறந்து சிரித்தார் தேசத்தந்தை. “சரி,


சிறந்த நிர்வாகி

 

 நான் படித்த முதுநிலை நிர்வாகயியல் வகுப்பில் நடந்த நிகழ்ச்சி. ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்காக, அதில் நிர்வாகத் திறமையை வளர்த்துக் கொள்ள விரும்புபவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட வகுப்பு. சேரும் மாணவர்களுக்கோ படித்து தகுதியை வளர்த்துக் கொள்ள ஆசை. ஆனால் அதற்காக வேலையையும் விடமுடியாத சூழ்நிலை. அதாவது கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்ற கூட்டத்தை சேர்ந்தவர்களுக்காக, மீசை நனையாமல் கூழ் குடிப்பதற்கென்று வடிவமைக்கப் பட்ட சிறப்பு “உறிஞ்சு குழல்” வகுப்பு. அனைவரின் வசதியையையும் உத்தேசித்து பணி முடிந்து வந்த பின்


அம்மனோ சாமியோ!!!

 

 என் சிறு வயதில் ஒரு நாள்… வயது எனக்கு அப்பொழுது என்ன ஒரு எட்டோ அல்லது ஒன்பதோ இருந்திருக்கலாம் என நினைக்கிறேன், சரியாக நினைவில்லை, அந்த நாள் வழக்கம் போல் ஒரு சாதாரண முக்கியத்துவம் இல்லாத நாளாகத்தான் தொடங்கியது. பள்ளியில் இருந்து திரும்பிய பிறகு வீட்டின் கொல்லைப்புறம் விளையாட ஆரம்பித்தேன். உடன் விளையாடியவர்கள் என்னைவிட ஒரு வயது சிறிய தங்கை, ஐந்து வயது சிறிய தம்பி மற்றும் எங்கள் அண்டை அயல் வீட்டுச் சிறுவர் சிறுமியர் கூட்டம்