கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 13, 2023

10 கதைகள் கிடைத்துள்ளன.

நாற்பதிலும் ஆசை வரும்..!

 

 (2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உடம்பெல்லாம் ஒரே வலி. முதல் நாள் இரவில் என் மனைவி அப்படிச் சொல்லியதை நினைத்தபோது என் மீதே எனக்கு ‘சே’ என்று வந்தது. அப்படி என்ன சொல்லி விட்டாள்? ‘உங்களுக்கு வயசாகி விட்டது. இனிமெ இதெல்லாம் அடிக்கடி வச்சுக்கக் கூடாது.’ அவள் சொல்றது சரிதான், ஆனா ஆசை விடமாட்டேன் என்கிறதே என்று நினைத்துக் கொண்டே கடிகாரத்தைப் பார்த்தேன். 7.30 ஆகிவிட்டிருந்தது. ஐயோ நேரம்


காலண்டர் பாவா

 

 (ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆனப் பாறை ஊருக்குக் கீழ்ப்புறம் உள்ளது. அதன் உச்சியில் ஏறி நின்று பார்த்தால்தான் நோன்பு பிறையும் பெருநாள் பிறையும் தெரியும். மேகமூட்டம் இல்லையானால் ஒரு நூல் வானத்தில் வளைத்து வைத்தது போல் இருக்கும் பிறை. நோன்பு துவங்கும் நாளை உறுதிப்படுத்திக் கொள்ள ‘பிறை கண்டாச்சோ’ என்று ஒரு கூட்டம் விளித்துக் கூவி ஊரைச் சுற்றி வரும். பெருநாள் பிறை பார்க்கவும், ஆனப்பாறை மீது ஏறி நிற்போம். தோன்றி


தேன் நிலவு

 

 “என்ன சார்…ரெண்டாவதா ஒரு கல்யாணம் பண்ணீக்கிட்டீங்களாமே..?” “ஹி….! ஆமாம் சார்….!” “ஒருவனுக்கு ஒருத்திங்கறதுதான் நம்ம நாகரிகம்…. பண்பாடு..! “உண்மைதாங்க…. இருந்தாலும் சந்தர்ப்பம்….சூழ்நிலை…. இப்படி ஆயிட்டுது..!” “சரி…. தேன்நிலவு எங்கே?” “அதெல்லாம் ஒண்ணும் வேணாம் சார்….தேனாவது….நிலவாவது….!” “அது சரி…. ஹனிமூன்ங்கர்ற பெரு எப்படி வந்தது தெரியுமா உங்களுக்கு?” “தெரியலையே…! “கல்யாணத்துக்குப் பிறகு மணமக்கள் முப்பது நாளைக்கு தினமும் தேன் சாப்பிடறது ஒரு பழக்கமாம்! அதை ஹனிமன்த் (Honeymonth)ன்னு சொல்லுவாங்களாம்….இதுதான் பின்னாடி Honey Moonன்னு ஆயிட்டுது!” “அப்படிங்களா?” “புது மணமக்கள்


வீஜா போர்ட்(Ouija board)

 

 கதவுகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன, ஜன்னல்களும். அவர்கள் முடிவு செய்திருந்தனர், இன்று ஆவியுடன் உரையாடியே தீர வேண்டுமென்று. வீஜா போர்ட் (Ouija Board) பற்றி முதலில் படித்துவிட்டு சொன்னவன் மனிஷ் தான். அவனுக்கு எல்லாவற்றிலும் விளையாட்டு என்பதால் அவன் சொன்னதை முதலில் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. “எல்லாம் ஹம்பக். இவரு கூப்டதும் ஆவிங்கலாம் வந்து க்யூல நிக்குமாம்” சொல்லிவிட்டு சப்தமாகச் சிரித்தாள் ஜாஸ்மின். “உங்களுக்குலாம் பயமா இருக்குனு சொல்லிட்டு போ. டோன்ட் ஆக்ட் ஸ்மார்ட்” மனிஷ் இப்படி


முற்பகல் செய்யின்…

 

 ஆட்டோ ஸ்டாண்ட் அருகே… உன்னுடன் வரத்தானே இன்று லீவு எடுத்து கொண்டு கிளம்பி வந்தேன். ஆபீஸ்ல இருந்து அவசர வேலை. போன் வந்து விட்டது. கொஞ்சம் adjust பண்ணிக்கோ, please. டென்ஷன் ஆகாதே என்று அவர் தன் மனைவியிடம் சமாதானம் செய்து கொண்டு இருந்தார். இதோ பார் . “ஓம் வல்லக்கோட்டை முருகன் துணை”. உன் இஷ்ட தெய்வ முருகன் ஸ்டிக்கர் ஒட்டிய ஆட்டோ. இந்த ஆட்டோ ல ஏத்தி விடுகிறேன். நீ interview முடித்துவிட்டு வெயிட்


அகலிகா! நான் உன்னைக் காதலிக்கிறேன்…

 

 கௌதம முனிவன் நிஷ்டை கலைந்து கண்ணை விழித்தான். அந்த ஆரண்யம் மிக அடர்த்தியாக இருந்தது. எதிரில் அவனைச்சுற்றி மரங்கள் செடிகள். கொடிகள். மெல்ல யோசித்தான். தான் எங்கே இருக்கிறோம் தண்டகாரண்யம்? அல்லது மேருமலை? புரியவில்லை. கொஞ்சம் யோசித்தான். நீண்டகால தவத்தால் அவனுக்கு சக்தி பெருகி இருந்தது. தவவலிமை கூடியிருந்தது. ஆனால் அதுவெல்லாம் பிரயோக படுத்த அவன் மனம் ஒரு படவில்லை. தான் எங்கு இருக்கிறோம். எங்கே. எங்கே. எங்கே. மெல்ல யோசித்தான். நினைவு வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக


விதியின் வழியே..

 

 வீடு நிசப்தமாய் வெறிச்சோடிக் கிடந்தது. எல்லாமே முடிந்துவிட்ட உணர்வோடு கமலினி செயலிழந்து கட்டிலில் சரிந்து கிடந்தாள். இதுவரை நெஞ்சுக்குள் பூட்டி வைத்த துக்கம் விம்மலாய் வெடித்தது. இருப்பதா, இல்லையா என்ற அம்மாவின் வாழ்க்கைப் போராட்டம் ஓய்ந்து விட்டது என்று டாக்டர்கள் கையை விரித்தபோதுதான், எதுவுமே தங்கள் கையில் இல்லை என்று அவளுக்குப் புரிந்தது! தோற்றுப்போய் விட்ட உணர்வில், உடம்பும் மனதும் சோர்ந்து கிடந்தன. அம்மா..! உயிரோடும், உணர்வோடும், உடலோடும் கலந்தவா! அம்மா அருகே இருந்தபோது, அம்மாவிடம் பாசத்தைக்


தொலைக்கானல்

 

 (2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அப்பாவுக்கு நில சர்வேயர் வேலை. படித்தது என்னமோ டிப்ளமோ தான்! ஆனால் ஊரில் எல்லோரும் அவரை இஞ்சியர் என்றுதான் கூப்பிடுவார்கள். “எடே! அது இஞ்சியரும் இல்ல.. மாஞ்சியரும் இல்ல.. இன்ஜினியர்!” இந்த பொகை வண்டிய ஓட்டுவாகளே? அவுக மாதிரியா?” “அடே மாக்கான்! அது இன்ஜின் டைவரு! இவரு இஞ்சியரு” திருத்தம் சொல்லி அலுத்துப் போய்விட்டார் அப்பா! அப்பாவுக்கு இவனும் அண்ணனுமாக இரண்டு ஆண்


மனைவி – ஒரு பக்க கதை

 

 அந்த முதியவர் தட்டுத் தடுமாறியபடி தெருவில் நடந்துகொண்டிருந்தார். எனது டூவீலரை நிறுத்தி, அருகில் சென்று பார்த்தேன். அவரது காலில் கட்டை விரல் நசுங்கி ரத்தம் கசிந்துகொண்டிருந்தது. “என்னங்க ஆச்சு..?” – கேட்டேன். “வேகமா வந்த ஆட்டோ சக்கரம் கால்ல ஏறிடுச்சு தம்பி…” “வாங்க… எனக்குத் தெரிஞ்ச டாக்டர் பக்கத்துலதான் இருக்கார். கட்டு போட்டு ரத்தம் கசியறதை முதல்ல நிறுத்தணும். கூடவே டி.டி இஞ்செக்ஷனும் போட்டுக்கலாம்!” – என்றேன். வேண்டாம் என்று விலகியவரை விடாப்பிடியாக அழைத்துப் போனேன். எல்லாம்


நந்தாவதி

 

 இரவு சரியாக எட்டு மணி, கொழும்பு, கோட்டைப் புகையிரத நிலையத்தின் முதலாவது `பிளாட் பாரத்’தை அநாயாசமாக உதறி எறிந்து விட்டு, `ஜம்’மென்று புகையைக் கக்கிக்கொண்டு புறப்பட்டது மட்டக்களப்பு மெயில் வண்டி. வண்டி என்றும் போல் அன்றும் பொங்கி வழிந்தது. இந்த அம்பாறை நீர்ப்பாசன `இராட்சத அணைத் திட்டம்’ மட்டக்களப்புக்கு வந்தாலும் வந்தது மட்டக்களப்பு மெயிலின் நிலையே ஒரு பூரண கர்ப்பிணியின் நிலைதான். புறப்பட்ட ஐந்து நிமிஷங்களில், கொழும்பு நகரின் அடுத்த பெரிய ஸ்டேஷனான மருதானையை `நொறுக்கி’க் கொண்டு