கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 2, 2022

14 கதைகள் கிடைத்துள்ளன.

உயர்ந்த உள்ளம்

 

 (2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தாயின் சொல் கேட்டு வளர்ந்த ரவி பட்டப் படிப்பை முடித்து தனியார் நிறுவனத்தில் உதவி அதிகாரியாக பணி புரிந்து வந்தான். செல்லம்மாள் தன் மகன் ரவியை படிக்க வைக்க அரும்பாடு பட்டாள். ரவி தொலைக்காட்சியில் பகுதி நேரமாக பாடகனாகவும், அறிவிப்பாளனாகவும் தன் திறமையைக் காட்டி வந்தான். இளமையும், துடிப்பும் கொண்ட ரவிக்கு பெண் கொடுக்க பலர் முன் வந்தனர். பெரிய இடத்துப் பெண்ணை


மனங்கள் மாறுமா?

 

 (1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சிலரும், இருமனம் கலந்தால் திருமணம் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால், துளசியின் வாழ்க்கையில் திருமணம் எங்கே நிச்சயிக்கப்படுகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனென்றால் துளசிக்கு இப்போது வயது இருபத்து நான்கு (24). அவள் தன் வயதைப்பற்றிக்கூட கவலைப்படவில்லை. ஆனால், தான் இப்படியே இருந்து விடுவோமோ என்ற எண்ணம் அவள் மனதின் ஒரு மூலையில் எட்டிப்பார்த்தது. காரணம்


ஆத்மாவின் சிறைச்சாலை

 

 (2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கழ்வானம் சிவந்து தீப்பிழம்பாக அனல் பரவிய போது சூரியனின் வெப்பக்காற்று உடம்பில் பட்டபோது சாந்தி தன்னையும் மீறி “ஆண்டவா! என்ன இது சோதனை?” என்று கூறியதோடு தன் மனதில் முள்ளாக குத்தி இதயமெல்லாம் வலியால் துடித்ததை மனதார உணர்ந்தாள். மருத்துவமனையை நோக்கி நடந்தாள் சாந்தி. அவன் கணவன் குமார் காலில் அடிபட்டு பெரிய விபத்தில் உயிர் தப்பியதே தெய்வ செயல். கடந்த ஒரு


அடுத்த வீடு (ஆனந்தம்)

 

 (2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பள்ளியறையின் ஜன்னல் திரைச்சீலையின் இடைவெளி வழியாக பொன்னொளி சிந்தி மலர்விழியின் முகத்தில் பட்டபோது, துள்ளிக் குதித்து எழுந்து சென்று, ஜன்னல் திரைச்சீலையை விலக்கி வானத்தைப் பார்த்தாள். அங்கே பௌர்ணமி நிலவு கர்வத்தோடு தன் எழிலைக் காட்டி மயக்கிக் கொண்டிருந்தது. அந்தக் காட்சி கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது மலர்விழிக்கு. அப்போது அதிகாலை ஐந்து மணி. இல்லத்தலைவியான மலர்விழி வழக்கம் போல காலையில் பத்தி


அர்த்தமுள்ள வாழ்க்கை

 

 (2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாழ்க்கையின் அர்த்தங்களை புரிந்து கொள்வதற்குள் வனஜாவுக்கு வயது நாற்பது ஆகிவிட்டது. அவள் இதுவரை தனக்கு எல்லாம் தெரியும் என நினைத்துக் கொண்டு தன் வீடு, தன் கணவன், தன் பிள்ளைகள் என ஒரு சிறு வட்டத்திற்குள் வாழ்ந்து வந்தாள். கட்டிய கணவன்தான் தெய்வம். அவனுக்கு வாய்க்கு ருசியாக சமைத்துக் கொடுத்து திருப்திப் படுத்துவதில்தான் அதிக கவனம் செலுத்தி வந்திருக்கிறாள். குடும்ப வட்டத்துக்குள் இருந்த


பிரகாசம்

 

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கழிந்த போர்வைக்குள் சுருண்ட படுத்திருந்தார் காசிம்பாய். நள்ளிரவு மணி பன்னிரெண்டு. சற்று தள்ளி சிறிய விளக்கொளியில் அவரின் மனைவி மைமூன் பீவி திருக்குர்ஆனை ஓதிக்கொண்டிருந்தார். புனித ரமலான் மாதத்தில் இரவு நேரங்களில் மைமூன் திருக்குர்ஆனை மெல்லிய குரலில் ஓதி மன ஆறுதல் அடைந்து வந்தார். காசிம்பாய்-மைமூன் தம்பதிகள் கடந்த நாற்பது ஆண்டுகளாக இணை பிரியாத தம்பதிகளாய் இஸ்லாத்தின் கடமைகளை செவ்வனே செய்து வந்தார்கள்.


வெட்கம் (எழுதாத சட்டம்)

 

 (2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்று சனிக்கிழமை வேகமாக எழுந்த உற்சாகத்துடன் தன் பணியை செய்யத் தொடங்கினாள். பூங்கொடி ஒரு பணிப்பெண். முப்பது வயதான பூங்கொடி மின்னலைப் போல வேலைகளை செவ்வனே செய்பவள். பணிவானவள். பத்தாம் வகுப்பு வரை படித்தவள். அவளின் அருமை அந்த வீட்டு எஜமானன் சரவணனுக்கு மட்டுமே தெரிந்தது. வீட்டு எஜமானியான கோகிலா பூங்கொடியை ஒரு பெண்ணாகவே கருதவில்லை வீட்டு வேலைகளை செய்யச் சொல்லி வாட்டி


கல் மனம் கரையுமா?

 

 (1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கண்ணாடியின் முன் நின்று தன் உருவத்தைப் பார்த்தவளுக்கு தன் கண்களையே நம்பமுடியவில்லை. அவள் உடல் இளைத்து மிக மெலிந்து காணப்பட்டாள் நீலா. அவள் மனதிற்குள் கொந்தளித்துக் கொண்டிருக்கும் பிரச்சனை அவளையே கொன்று விடும் போல் அவள் உள்ளத்தை வாட்டிக் கொண்டிருந்தது. தோல்விகளும், பிரச்சனைகளும் மனிதர்களை எந்த அளவுக்கு மாற்றிவிடுகின்றன. தன் மனப்பிரச்சனையை வெளியில் காட்டிக் கொள்ளக்கூடாது என நீலா நினைத்தாலும் அவள் முகம்,


மன அலைகள்

 

 (1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கடற்கரை மணலில் கைவிரல்களால் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் கோகிலா. அவளின் நான்கு ‘வயது மகள் சரண்யாவும், இரண்டு வயது மகன் குமாரும் சற்று தள்ளி மணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த பெரிய அலைகளால் கோகிலா போட்ட கோலம் அழிந்தது. ஆனால், அவள் வாழ்வில் அழிக்க முடியாத கோலங்களாகவும், அவளின் இதயத்தை ஆறாத புண்ணாகவும் வலிக்கச் செய்து கொண்டிருக்கும்


உல்லாசக் கடிதம்

 

 (2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வழக்கம் போல் அன்றும் அமுதா, புளோக்கின் கீழ்தளத்தில் அமைந்திருக்கும் லெட்டர் பாக்ஸை திறந்து பார்த்தபோது பல வண்ணங்களில் நிறைய கடிதங்கள் இருந்தன. எல்லாவற்றையும் பத்திரமாக எடுத்துக் கெண்டு மின்தூக்கி வழியாக பத்தாவது மாடிக்கு வந்தாள். வீட்டுக்குள் வந்தவுடன் முதலில், வந்திருந்த கடிதங்களைப் பார்த்தாள். வழக்கமான கடிதங்களுடன், பல புதிய கடிதங்களு இருந்தது. அவற்றில் ஒன்று ‘அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்திலிருந்து அமுதாவின் பெயருக்குத்தான் வந்திருந்தது.