கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 4, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு குட்டித் தீவின் வரைபடம்

 

 (ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நோன்புப் பெருநாள் நெருங்கும்போதுதான், ஊருக்குள் தலைச்சுமை ஜவுளி வியாபாரி நாராயணன் வருவது வழக்கம். சட்டை வேஷ்டி நிக்கர் என்று விளித்துக் கூவாமல், நுகர்வோரைக் கவரும்படி வசப்படுத்திய விசித்திரமான ஒரு குரலை நீட்டி எழுப்பிக் கொண்டு சந்து பொந்து களில் திரிவான். துணி அளந்து கொடுக்க, கையில் ஒரு கெஜக்கோல் இருக்கும். நோன்பு பிறை பத்து ஆனதும் நாராயணன் ஜவுளி மூட்டையுடன் ஊருக்குள் நுழைந்துவிடுவான். அவனுக்குத் தெரியும், செல்வந்தர்


பீகேயும் தானியல் ஆசானும்

 

 மனசு நல்லாருந்தா மந்திரமும் தேவையில்லை ஒரு மயிருந் தேவையில்லை தெரியுமா…காலை கொஞ்சம் நீட்டி நீட்டி போட்டு நடந்தார் பீகே. பின்னால் தானியேல் மாமாவும் சந்திரனும் பீகேவின் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் தம்பிடித்து நடந்தார்கள். பீகே வயசில் மூப்பு என்றாலும் கெத்துப் பிடித்து நடந்தார் என்றால் ஒரு மாதிரிப்பட்டவன் அவருடைய நடைக்கு ஜோடி போட முடியாது. பழய ரோட்டில் வடக்கமாற நடந்து கொண்டிருந்தார்கள். பீகே சொன்னார் “தானியேலே குறைஞ்சது இரண்டாயிரம் டெப்பாவது போடணும். நடக்க நடக்க கேஸ்


காயம்

 

 (1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கையில் கத்திக் குத்து விழுந்திருந்தது. கட்டுப் போட்டிருந்தாலும் சுதாவுக்கு வலி இருந்து கொண்டிருந்தது. கழுத்திலோ மார்பிலோ விழுந்திருக்க வேண்டிய கத்திக் குத்து, குறி தவறியிருக்கலாம் அப்படி ஏதாவது ஆகியிருந்தால் சுதா இந்த நேரம் வீட்டில் படுத்திருக்க முடியுமா? விடியுமுன் அந்தக் களேபரம் நடந்தது. சாதாரண சம்பவமாக நினைக்க முடியவில்லை. ஒரு கொலை முயற்சியா? அந்தக் காலை நேரத்திலும் கூட்டம் வீட்டில் திரண்டு விட்டது.


எட்டாப் பழம்

 

 (1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “உன்னைப் போல நல்ல குணமுடையவனை அடைய அவள் கொடுத்து வைக்க வேண்டும். அதனால்தான் சொல்லுகிறேன்” என்ற வார்த்தை அவன் நினைவிலே அப்படியே ஊடாடிக் கொண்டிருந்தது. வேறு யாரும் கூறியிருந்தால் அதை அவன் அவ்வளவு பிரமாதமாகக் கொண்டிருக்கமாட்டான். ஓர் உயர்ந்த குடும்பத்திலே பிறந்த ஒரு இளம் பெண்ணின் வாயிலிருந்துதான் இந்த வார்த்தைகளை அவன் கேட்டான். இதைச் சிந்தித்தபடியே அவன் பழக்கடைக்குச் சென்றான். அவனுக்கு இன்று


மனம் தேடும் ஆசை

 

 ஹலோ சார் எப்படி இருக்கீங்க? ஏதோ நினைவுக்குள் மூழ்கியிருந்த பங்காரு கண் விழித்து கேட்ட மருத்துவரை பார்த்தார். அப்படியே தான் இருக்கேன் டாக்டர்.. நோ..நோ.. இப்ப நீங்க வேற யோசனையில இருந்தீங்க, நான் கேட்ட பின்னால இந்த பதிலை சொல்றீங்க. உண்மைதானே, சிரிப்புடன் டாக்டர் கேட்டார். உண்மைதான் டாக்டர் வெட்கத்துடன் தலையாட்டினார். குட், இப்படி ஸ்போர்ட்டிவா எடுத்துக்கணும், உங்களுக்கு இதை பத்தி எல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லைன்னு நினைக்கிறேன். அப்படி சொல்ல முடியாது டாக்டர், எவ்வளவுதான், இந்த


நானே வருவேன்…இங்கும் அங்கும்..!

 

 வார்தா புயலைப்போல படுவேகமாக அறைக்குள் நுழைந்தாள் அந்தப் பெண்.. “டாக்டர்…மே ஐ டேக் எ சீட்…?” பதிலுக்குக் காத்திராமல் நாற்காலியை வேகமாகப் பின்னுக்குத் தள்ளி உட்கார்ந்து விட்டாள்…. கண்ணில் எண்ணெய் விட்டுக் கொண்டு நோயாளிகளை வரிசைப்படி அனுப்பும் சவிதாவின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு , வெளியே காத்திருக்கும் அத்தனை நோயாளிகளையும் (டாக்டர் கிரிதரிடம் அப்பாயின்ட்மென்ட் கிடைக்க மாதக்கணக்கு ஆகும்… யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்…) முந்திக் கொண்டு உள்ளே நுழைந்து விட்டாளே…! சரியான கேடிதான்! “டாக்டர்..நேத்து என்


ஸ்வீட் சர்வாதிகாரி

 

 மூணாந்தேதி. “டாளிங், பேப்பர்லாம் கொண்டு வந்து போடு.” “எதுக்கு ?” “பழைய பேப்பர்க்காரன் வந்திருக்கான்.” “பழைய பேப்பர்க்காரன யார் கூப்ட்டா ?” “நாந்தான்.” “பேப்பர் இப்பப் போட வேண்டாம். பேப்பர்காரனப் போகச் சொல்லுங்க.” “பேப்பர் நெறைய சேந்துருச்சேம்மா?” “இப்ப வேண்டாம்னா வேண்டாம்தான். அவனத் திருப்பியனுப்புங்க.” முறைப்பும் முனகலுமாய்ப் பேப்பர்க்காரன் திரும்பிப் போனான். ‘அடி சர்வாதிகாரீ’ என்று சபித்து, அவளுக்கு டூ விட்டு விட்டு ஆஃபீஸுக்குக் கிளம்பிப் போனேன். முப்பதாந் தேதி. பாக்கெட்டும் காலி, வாலட்டும் காலி. “இன்னிக்கி


பயிற்சிப் பட்டறை

 

 மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் செயல்முறைகள் – ந.க.எண்… நாள் … பொருள்… பார்வை… என முறைப்படி சுற்றறிக்கை தயாராகி ‘ஹார்டு காப்பி’, டாக்டர் மணிவண்ணன் மேசைக்கு வந்து அவர் அங்கீகரித்ததும், ‘சாஃப்ட் காபி’யில் ‘ஒப்பம் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்’ என்பதை இணைத்து, சுற்றறிக்கையின் நகல் மாவட்ட ஆட்சியருக்கும், குழந்தைகள் பாதுகாப்புக் கவுன்சில் ஆணையருக்கும் பணிந்தனுப்பட்டது. அடுத்தபடியாக, ரெவின்யூ, எஜுகேஷன், என் ஜி ஓ… இப்படிக் கலந்து கட்டி எல்லாத்துறையிலிருந்தும் முன் அனுபவம் மிக்க வாலண்டியர்ஸ்


மகள் தாயானாள்

 

 அப்பா.. சாய்ங்காலம் சத்ஸங்கத்துல சுகி சிவம் பேசறார். போறோம். ஏம்மா காயு, காலேஜ் இருக்கு லேட் ஆகும்னு சொன்னியே. No problemப்பா.. நம்ம இங்க போகலாம். மிகவும் உருக்கமாக கேட்டிக்கொண்டிருந்த சரவணன் கையை பிடித்து அழுத்தினாள் காயு அப்பா கண்களில் கண்ணீர் வருவதை கண்டு. உரையை கேட்டு முடித்த சரவணன், சுகி சிவம் அவர்களின் CD. சிலவற்றை வாங்கினான். அப்பா, இதையைல்லாம் கூட you tube லியே பாக்கலாம் எதையெதையோ பாக்கறதுக்கு. சரவணன் பொய்யான கோபத்துடன் முறைக்க,


சாட்சி

 

 (1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சின்ன வயதின் விளையாட்டு ஒன்று இப்போது ஞாபகம் வந்தது. “தட்டாமாலை தாமரைப் பூ தட்டாமாலை தாமரைப் பூ சுற்றிச் சுற்றிச் சுண்ணாம்பூ -” தலையின் தனிக் கிறுகிறுப்பில் அவனைச் சுற்றி இருந்தவையும் இருந்தவரும் பொங்கி வடியும் அலைபோல் மேலும் கீழும் மிதந்து ஆடினர். அவன் சிநேகிதர்கள் கூத்தும் கொம்மாளமும் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். பார்ட்டி’ ஒரு தினுசான கட்டத்துக்கு வந்து விட்டது. வாயிலிருந்து