கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 16, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

அலட்சியம் – ஒரு பக்க கதை

 

 சுந்தரேசன் tvs50 யை நிறுத்திவிட்டு வரிசையில் நின்றார். இவருக்கு முன்னால் பத்து பேர். என்ன பெரியவரே இந்த வயசான காலத்துல நேர்ல வந்துதான் கரன்ட் பில் கட்டணுமா? EB க்குன்னு ஒரு App இருக்கு, அதுல கட்லாமில்ல எனக் கேட்டார் ஒரு இளைஞர். நானும் wife உம் தான். Pension credit ஆன உடனே வழக்கமா வந்து கட்டிட்டு போயிடுவேன். இப்பெல்லாம் எங்க போனாலும் digital payment தான். கைல பணம் கொண்டு போறதே இல்ல. ஈசியா


ஆசாரசீலம்

 

 இரவு பத்து மணி கடந்தும் மின்விளக்குகள் அணைக்கப்படவில்லை! சேவையர் சிற்றம்பலத்தாரின் வீட்டில் பத்து மணிக்குப் பிறகு, ஒளிபரப்ப எந்த மின்விளக்குக்கும் அனுமதி இல்லை. இந்த மின்சாரத்தடையை மீறிச் சமையலறையில் போய்நின்று பாத்திரம் கழுவி வைக்கவோ, சாமான் சக்கட்டுகளை அடுக்கி வைக்கவோ கூடாது. இது மனையாள் கனகேசுவரிக்கு அவர் இட்டு வைத்திருக்கும் கடுமையான கட்டளை. தண்ணீர்ப் பாவனையிலும் இதேபோன்று அவர் மிகுந்த கட்டுப்பாடுடையவர். ‘கஞ்சன்’ என்று யாராவது அவரைக் கணக்கிட்டால், அது அவரவர் பார்வைக் கோளாறு என்றே பொருள்கொள்ள


கனவும் நனவும்

 

 காலை ஆறு மணி. எங்கள் சமையலறையில் நான். எனது பார்வை வெளியே. வளவில் கொல்லை. நீள்சதுர வடிவில் கூம்பிய புல்தரை. அந்தலையில் பழம்பெரும் எலுமிச்சை. அதற்கப்பால் சாய்ந்தெழும் சூரியன். புல்பூண்டுகளைத் தொடுத்து அடர்ந்து படர்ந்த சிலந்திவலை. காலை வெயிலில் ஒளிரும் அதன் வெண்மை. பூமி சுழல, கதிரவன் மேலெழும் அந்த ஒருசில நொடிகளில் ஒரு கேடயம்போல் எங்கள் புல்தரை பளிச்சிடும். நான் ஒருகணம் மெய்மறப்பேன் – மறுகணம் அது வெறும் பச்சைப் புல்லாய் மாறிவிடும். எனது அன்றாடக்


போரும் சமாதானமும்

 

 முகிலனின் மாமா செழியன் ஊர் ஊராகப் பயணிப்பவர். சில சமயங்களில் முகிலனையும் அழைத்துச் செல்வார். முகிலனின் அக்கா அகிலாவுக்கும் அப்படிப் பயணிக்க ஆசை. இந்தமுறை இருவரையுமே அழைத்து வந்திருந்தார். அகிலாவுக்கு ஆனந்தம் தாங்கவில்லை. வால்பாறையின் பழங்குடியின மக்கள் குடியிருப்பே அவர்கள் சென்ற இடம். அங்கேயே பிறந்து வளர்ந்த காட்டரசு என்ற சிறுவனுடன் சேர்ந்து இருவரும் அங்கிருந்த விதவிதமான பறவைகளை ரசித்தனர். அப்போது இருவாச்சியைப் பார்த்தார்கள். இருவாச்சிகள் உயரமான மரங்களில்தான் வாழும் என்று மாமா சொல்லியிருக்க, இதுவோ தாழ்வான


லேப்டாப் எனும் பொட்டி

 

 நடு இரவை தாண்டி இரண்டு மணி நேரம் ஓடியிருக்கும், அந்த இருளில் “திக்”திக்” மனம் துடிக்க கையில் ஒரு பெட்டியை எடுத்து கொண்டு வேகமாக நடந்து கொண்டிருந்தான் மாரி. அப்பா..இதை எடுக்க மாலையிலிருந்து காத்திருக்கிறான். “பாவி பயல்” இந்த பொட்டியை விரித்து வைத்து என்னனென்னவோ செய்து கொண்டிருக்கிறான். மூடி வைக்க காணோம். அவன் அறைக்கு நேர் எதிர்புறம் இருந்த பள்ளத்தில் படுத்து படுத்து இவனையே பார்த்து கொண்டிருந்ததில் கழுத்து வலிதான் வந்தது. அடச்சே போ என்று அந்த


விசுவரூபம்..!

 

 வருடம் முன்னூற்று அறுபத்தைந்து நாட்களும் உற்சவம் நடைபெறும் ஒரே இடம் சீரங்கம் அரங்கநாதன் கோவில் ஒன்றாகத்தான் இருக்க முடியும்… இன்றைக்கு மாசி மகம் திருவிழா ஆரம்பித்து நாலாம் நாள்…ஊரே அரங்கனின் வீதி உலாவுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது… ”பாமா…என்னடி மசமசன்னு இத்தன நாழி பண்ணிண்டு…நாலு புள்ளி வச்சோமா , இரண்டு இழுப்பு இழுத்தோமான்னு இல்லாம…இன்னும் தளி பண்ணி முடியல..வடைக்கு அரச்சுத்தறேன்னு சொல்லிட்டு…திருக்கண்ணமுதுக்கு பால் போறாது..வாங்கிண்டு வாடான்னா இந்த ரங்குடு எங்க போய் தொலஞ்சான்…? எல்லாமே கடைசியில என் தலைலதான்


காணாது போகுமோ காதல்

 

 பாகம் 3 | பாகம் 4 இரவு தீபக் வீடு வந்த போது மணி ஏழாகி இருந்தது. வேதவல்லி ஹால் சோஃபாவில் மகனுக்காக காத்திருந்தாள். “வாப்பா முகமெல்லாம் வாடிக் கிடக்கு. அதிக வேலையா?” என பக்கத்தில் வந்தமர்ந்த தீபக்கின் கையைப் பிடித்தாள். தீபக் புன்னகைத்து “கொஞ்சம் அதிகம்தான். இத்தனை நாள் கணக்கை எடுத்து பார்த்தேன். ஒரே குளறுபடி. மெதுமெதுவா சரியாகும். ஓகே சாப்பிட்டீங்களா?” வேதவல்லி “இல்லேப்பா. வா சாப்பிடலாம்.” “நான் ஃபிரஷ்ஷாயிட்டு வந்துடுறேன்.” என்று எழுந்து தன்


பேரிடர் நிதி

 

 வழக்கம்போல் காய் கறி வியாபாரத்தை முடித்துக் கொண்டு பைபாஸ் சாலையின் ஓரத்தில் தன் கிராமத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் மங்கம்மா. ‘சர்…சர்…சர்…’ என மின்னல் வேகத்தில் டவுன் பக்கம் விரைந்த வெள்ளை கார்களைப் பார்த்த மங்கம்மா…வுக்கு ‘காரு எங்கே போவுது?’ என்று அறிந்து கொள்ளும் இயல்பான ஆவல் வந்தது. “ஒரே காருங்களா போவுது..என்னா விசேசம்..?” அறுவடையான வயல்களில் கால்நடைகளை மேய விட்டுவிட்டு, குடை விரித்தாற் போன்ற பிரம்மாண்டமான நாவல் மரத்தின் நிழல் சாயும் கன்னி வாய்க்கால் மதகில்


மறுவாழ்வு

 

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஈரத் தலையைத் துவட்டியபடிச் சாப்பகூடு மேசையை நோக்கி நடந்தேன். அம்மா வைத்துவிட்டுப் போன இட்பியில் ஆவி பறந்துகொண்டிருந்தது. “உன் பெரியப்பா பொண்ணு மல்லிகாவுக்குப் பொண்ணு பிறந்திருக்கு, அருண்”, ஒலிப்பேழையில் ஒலித்துக்கொண்டிருந்த கந்த கவசத்தையும் மீறி அம்மாவின் குரல் கேட்டது சமையல் கட்டிபிருந்து. “அதான் போன மாசம் தபால்ல எழுதியிருந்தியேம்மா” இருந்தாலும் அம்மாவுக்கு என்னிடம் நேரில் சொல்வதில் ஒரு நிறைவு இருந்தது. எனக்கும் அம்மாவிடம்


முடவரும் நாகரும்

 

 (1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாம் வாழும் நிலப்பகுதிக்குத் ‘தமிழகம்’ என்று பெயர். தமிழகம் என்பது தமிழ்மொழி பேசப்படும் இடமாகும். இங்கே வாழ்வோர் தமிழ்மக்களாவர். முற்காலத்திருந்த- ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த – தமிழகத்தை இப்போது நாம் காண்கின்றேமில்லை. அக்காலத்தில் முடிதரித்த மன்னர் மூவர் வாழ்ந்திருந்தனர். அவர் சேர, சோழ, பாண்டியர் எனப்படுவார். இம் மூவரின் ஆட்சிக்கும் உட்பட்டு விளங்கிய இடமே தமிழகம் எனச் சிறந்திருந்தது. ஒரு காலத்தில்